Published:Updated:

Pawan Kalyan: `விநோதய சித்தம்' ரீமேக் முதல் வரலாற்றுப் படம் வரை; பவன் கல்யாணின் பவர்ஃபுல் அப்டேட்ஸ்!

Pawan Kalyan

கடைசியாக 2012ம் ஆண்டுதான் பவன் கல்யாண் நடிப்பில் இரண்டு படங்கள் ஒரே வருடத்தில் வெளியாகியிருக்கின்றன. அதற்குப் பிறகு, இந்த வருடம்தான் அது மீண்டும் நடக்கவிருக்கிறது.

Published:Updated:

Pawan Kalyan: `விநோதய சித்தம்' ரீமேக் முதல் வரலாற்றுப் படம் வரை; பவன் கல்யாணின் பவர்ஃபுல் அப்டேட்ஸ்!

கடைசியாக 2012ம் ஆண்டுதான் பவன் கல்யாண் நடிப்பில் இரண்டு படங்கள் ஒரே வருடத்தில் வெளியாகியிருக்கின்றன. அதற்குப் பிறகு, இந்த வருடம்தான் அது மீண்டும் நடக்கவிருக்கிறது.

Pawan Kalyan
பவர் ஸ்டார் பவன் கல்யாண் - இந்த வார்த்தைக்கு அத்தனை வலிமை இருக்கிறது டோலிவுட்டில். பவன் கல்யாண் ரசிகர்கள் என்று சொல்வதை விட பவன் கல்யாண் பக்தர்கள், வெறியர்கள் என்று கூட சொல்லலாம். அந்தளவுக்கு பவனின் படத்தை கொண்டாடி தீர்ப்பார்கள்.

அவரே "என்னுடைய இந்தப் படம் சரியாக ஓடவில்லை" என்று சொன்னால் கூட "வாயில அடிங்க... வாயில அடிங்க... அப்படியெல்லாம் சொல்லாதீங்க. இந்தப் படம் ப்ளாக்பஸ்டர்" என்று சொல்லி முட்டுக்கொடுக்குமளவுக்கு வெறித்தனமான பவர் ஸ்டார் விழுதுகள் அவர்கள். அதனால் அவரின் ரசிகர்களுக்காகவே பல மாஸ் மொமன்ட்களையும் பன்ச் டயலாக்குகளையும் படத்தில் வைப்பார்கள்.

சாய்தரம் தேஜ், சமுத்திரக்கனி, பவன் கல்யாண்
சாய்தரம் தேஜ், சமுத்திரக்கனி, பவன் கல்யாண்

சமீபத்தில், அவர் நடிப்பில் வெளியான படம் 'பீம்லா நாயக்'. மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'அய்யப்பனும் கோஷியும்' படத்தின் ரீமேக். படத்தின் க்ளைமாக்ஸை மாற்றியிருந்தாலும்  அங்கேயும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கடுத்து, அவருடைய அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. இப்போது கிட்டத்தட்ட நான்கு படங்கள் அவரது நடிப்பில் உருவாகி வருகின்றன.

அதில் முதலாவதாக வெளியாவது, சமுத்திரக்கனி இயக்கத்தில் பவன் கல்யாணும் சாய்தரம் தேஜும் நடித்திருக்கும் படம். தமிழில் சமுத்திரக்கனி இயக்கி நடித்த 'விநோதய சித்தம்' படத்தின் தெலுங்கு ரீமேக். பவன் கல்யாணுக்குத் தகுந்த மாதிரி சில பல மசாலாக்களைச் சேர்த்து, மாற்றங்களைச் செய்து பக்கா டோலிவுட் கன்டன்டாக படம் உருவாகியிருக்கிறது. வரும் ஜூலை 28ம் தேதி வெளியாக இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

சுஜீத், பவன் கல்யாண், ரவி.கே.சந்திரன்
சுஜீத், பவன் கல்யாண், ரவி.கே.சந்திரன்

அடுத்ததாக, 'சாஹோ' படத்தின் இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் 'OG'. 'RRR' படத்திற்குப் பிறகு, டிவிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படமிது. பவன் கல்யாணுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். தமன் இசை, ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு எனப் பயங்கரமான டீமை வைத்து படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. தற்போது, இந்தப் படத்தின் ஷூட்டிங்கில்தான் பவன் இருக்கிறார்.

இன்னொரு படம், 'உஸ்தாத் பகத் சிங்'. பவன் கல்யாண் கரியரின் முக்கிய படமான 'கப்பர் சிங்' படத்தின் இயக்குநர் ஹரீஷ் ஷங்கர் இதனை இயக்குகிறார். 'புஷ்பா' படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இதில் பவன் கல்யாணுக்கு ஹீரோயினாக தற்போதைய சென்சேஷன் ஶ்ரீலீலா நடித்து வருகிறார். இன்னும் இரண்டு வாரங்களே படப்பிடிப்பு மீதம் உள்ளதாம். இந்தப் படத்தின் க்ளிம்ஸ் மே 11ம் தேதி வெளியாகவிருக்கிறது. அதனுடன் ரிலீஸ் தேதி அறிவிப்பும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

பவன் கல்யாண் படங்கள்
பவன் கல்யாண் படங்கள்

இவை எல்லாவற்றுக்கும் முன்னாலேயே தொடங்கப்பட்ட படம், 'ஹரி ஹர வீரமல்லு'. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் இயக்குநர் க்ரிஷ் இயக்கும் பீரியட் படம் இது. இதற்காக தற்காப்பு கலை பயிற்சி எடுத்துக்கொண்டார் பவன் கல்யாண். இதில் அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இந்தப் படத்தின் வெளியீடு அடுத்த வருடம் இருக்கும் என்கிறார்கள்.

கடைசியாக 2012ம் ஆண்டுதான் பவன் கல்யாண் நடிப்பில் இரண்டு படங்கள் ஒரே வருடத்தில் வெளியாகியிருக்கின்றன. அதற்குப் பிறகு, இந்த வருடம்தான் அது மீண்டும் நடக்கவிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், மூன்று படங்கள் வெளியாகவும் வாய்ப்பிருக்கிறது. ஆகவே, பவன் கல்யாணின் ரசிகர்களுக்கு 2023 செம ட்ரீட்டாக இருக்கப்போகிறது.

பவன் அபிமானலு கெட் ரெடி!