Published:Updated:

Ustaad Bhagath Singh: `இது ஆணவமான செயல்'- பவன் கல்யாணை விமர்சித்த நடிகை பூனம் கவுர்

பூனம் கவுர்

நடிகை பூனம் கவுர் பவன் கல்யாண் படத்தின் போஸ்ட்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

Published:Updated:

Ustaad Bhagath Singh: `இது ஆணவமான செயல்'- பவன் கல்யாணை விமர்சித்த நடிகை பூனம் கவுர்

நடிகை பூனம் கவுர் பவன் கல்யாண் படத்தின் போஸ்ட்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

பூனம் கவுர்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பவன் கல்யாண். அவர் தற்போது உஸ்தாத் பகத் சிங் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை ஹரிஷ் சங்கர் இயக்குகிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், கிளிம்ஸ்  வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இவை தற்போது சர்சையைக் கிளப்பி இருக்கின்றன. அதாவது பவன் கல்யாண் இடப்பெற்றிருக்கும் அந்த போஸ்ட்டரில் அவரது கால்களுக்கு அடியில் உஸ்தாத் பகத் சிங் என்ற பெயர் இடம்பெற்று உள்ளது.

உஸ்தாத் பகத் சிங்
உஸ்தாத் பகத் சிங்

இந்நிலையில் நடிகை பூனம் கவுர் இதற்கு எதிர்ப்பு தனது கருத்தை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக பேசிய பூனம் கபூர், “ படத்தின் போஸ்டரில் சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் பெயர் பவன் கல்யாண் காலடியில் இடம்பெற்றிருப்பது  சுதந்திர போராட்ட வீரர்களை அவமானப்படுத்துவதற்குச் சமம். இந்த செயல் ஆணவமா? அல்லது அறியாமையா? புரட்சியாளர்களை உங்களால் மதிக்க முடியாதப்போது அவர்களை அவமதிக்காதீர்கள். போஸ்டரை படக்குழு உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என்றும் மற்றும் உரிய விளக்கத்தைக் கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

படக்குழு இதனை வேண்டுமென்றே செய்ததாகத் தெரியவில்லை என்று பவன் கல்யாண் ரசிகர்கள் பூனம் கவுருக்கு எதிராகத் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருக்கின்றனர்.