Published:Updated:

``இந்த நான்கு இந்தியப் படங்களைப் பாருங்கள்!" - நடிகர் ராம் சரண் பரிந்துரைத்த திரைப்படங்கள்!

ராம் சரண்

அமெரிக்காவில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ராம் சரண் சிறந்த திரைப்படங்கள் என தென்னிந்தியாவின் நான்கு படங்களைக் குறிப்பிட்டு, இந்தப் படங்களை அவசியம் பாருங்கள் எனப் பரிந்துரைத்திருக்கிறார்.

Published:Updated:

``இந்த நான்கு இந்தியப் படங்களைப் பாருங்கள்!" - நடிகர் ராம் சரண் பரிந்துரைத்த திரைப்படங்கள்!

அமெரிக்காவில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ராம் சரண் சிறந்த திரைப்படங்கள் என தென்னிந்தியாவின் நான்கு படங்களைக் குறிப்பிட்டு, இந்தப் படங்களை அவசியம் பாருங்கள் எனப் பரிந்துரைத்திருக்கிறார்.

ராம் சரண்
95வது ஆஸ்கர் விருது விழா மார்ச் 12-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கிறது.

இதில் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், ஸ்ரேயா, அஜத் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருந்த 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதின் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. இதற்கு கீரவாணி (மரகதமணி) இசையமைத்திருந்தார்.

உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸிக்கியின் பிரமாண்ட மாளிகையில் எடுக்கப்பட்ட இப்பாடல் ' கோல்டன் குளோப்', 'Hollywood Critics Association' விருதினையும் வென்றது. இதையடுத்து இப்பாடல் ஆஸ்கர் விருதினை வெல்லுமா? எனப் படக்குழுவினர் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்த விருது நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ராஜமெளலி, ராம் சரண், கீரவாணி உள்ளிட்ட 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவினர் கடந்த வாரமே அமெரிக்கா சென்றுவிட்டனர்.

இந்நிலையில் நடிகர் ராம்சரண், அங்கு வெளிநாட்டு ஊடகத்தின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது 'ஆர்.ஆர். ஆர்' தவிர சிறந்த திரைப்படங்கள் என நீங்கள் பரிந்துரைக்கும் படங்கள் என்னென்ன? என்று ராம்சரணிடம் கேட்டனர். அதற்கு ராம் சரண், "எனக்கு பிடித்த படங்களிலிருந்து ஆரம்பிக்கிறேன். The Notebook, The Terminator-2- இதை நான் 50, 50 முறைக்கு மேல் பார்த்திருப்பேன். இதைதொடர்ந்து 'Gladiator', 'Inglourious Basterds' படங்கள் எனக்கு பிடிக்கும். அதுமட்டுமல்ல Quentin Tarantinoவின் படங்கள் அனைத்தும் பிடிக்கும்" என்றார்.

மேலும், தென்னிந்தியாவின் நான்கு படங்களைச் சுட்டிக்காட்டி இந்தப் படங்களை அவசியம் பாருங்கள் என பரிந்துரைத்துள்ளார். இதுபற்றி பேசிய அவர், "நிறைய க்ளாசிக்கான திரைப்படங்கள் எங்கள் நாட்டில் வெளியாகியிருக்கின்றன. அதில் குறிப்பாக 'Danna Veera Soora Karna', அழகான கதையான 'எலிசபெத்' திரைப்படத்தை இயக்கிய திரு சேகர் கபூரின் 'Mr India', ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி', அப்புறம் நான் நடித்த 'Rangasthalam'" என்று பட்டியலிட்டார்.