பிரபல தெலுங்கு நடிகையான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, தமிழ், இந்தி எனப் பல மொழிகளில் நடித்து வருக்கிறார்.
தனது ஆரம்ப காலங்களிலிருந்து நிறைய கேலிகளை எதிர்கொண்டு வரும் ராஷ்மிகா, ஏற்கெனவே நேர்காணல் ஒன்றில், "நான் எனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கியது முதலே நிறைய வெறுப்புகளைப் பெற்று வருகிறேன். நிறைய ட்ரால்களால், நெகட்டிவான விமர்சனங்களால் தாக்கப்படுபவராகவே நான் இருந்து வருகிறேன். இதுபோன்றவற்றை சந்திக்கக்கூடிய ஒரு துறையைதான் நான் என் வாழ்கையாக்கிக் கொண்டிருக்கிறேன் என்பதால் நடப்பவற்றை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் எல்லோராலும் நேசிக்கப்படும் ஒருவராக இருக்க முடியாது என்பதும் தெரியும். அதற்காக எதிர்மறையான கருத்துகளைப் பரப்புவது சரியில்ல " என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் தனது நேர்காணல் ஒன்றில், "எனக்கு சைவ உணவுகள்தான் பிடிக்கும், நான் அசைவ உணவுகள் சாப்பிடுவதில்லை" என்று கூறியிருந்தார். ஆனால், அண்மையில் வெளியான பிரபல உணவு நிறுவனத்தின் விளம்பரத்தில், சிக்கனை ரசித்து ருசித்து சாப்பிடுவதைப் போல் நடித்துள்ளார். இந்த விளம்பரம் வெளியானது முதல் ராஷ்மிகா மந்தனா, சைவம் சாப்பிடுவேன் என்று கூறிவிட்டு அசைவத்தை ப்ரமோட் செய்கிறார், சைவ உணவு சாப்பிடுவேன் என்று அவர் சொன்னது பொய்யா? என்று சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர். அதேபோல, பலரும் 'ஏன் ராஷ்மிகா மந்தனா எது செய்தாலும் அவரை ட்ரோல் செய்யப்படுகிறார். சைவம், அசைவம் சாப்பிடுவது அவரவர் விருப்பம். அவரது சொந்த விருப்பங்களில் யாரும் தலையிடக் கூடாது என்று கூறிவருகின்றனர்.