எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், கீரவாணி இசையில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜத் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
`ஆர்.ஆர்.ஆர்' படத்தின் `நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதினை வெல்லும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதுபோலவே அந்த பாடல் ஆஸ்கர் விருதினை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் படகுழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

இதனிடையே RRR படத்தின் அடுத்த பாகம் குறித்து ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்நிலையில் சிகாகோவில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் அடுத்த பாகம் குறித்து ராஜமௌலி பேசியிருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர், “ ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக உருவாகும். என்னுடைய படங்களுக்கு எனது தந்தைதான் (விஜயேந்திர பிரசாத்) கதை எழுதி வருகிறார்.
அவரிடம் இதுகுறித்து பேசியிருந்தேன். அவர் ‘ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கதை எழுதும் பணி முடிந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளோம்” என்று தெரிவித்திருக்கிறார்.