Published:Updated:

"`சாகுந்தலம்' கதாபாத்திரத்தில் நடிக்க எனக்குப் பயமாக இருந்தது!"- சமந்தா சொல்லும் காரணம் என்ன?

சமந்தா

ஒரு பேட்டியில் சமந்தா, ‘சாகுந்தலம்’ படத்தில் முதலில் தான் நடிக்க மறுத்ததாகவும் அதற்கான காரணம் குறித்தும் பேசியிருக்கிறார்.

Published:Updated:

"`சாகுந்தலம்' கதாபாத்திரத்தில் நடிக்க எனக்குப் பயமாக இருந்தது!"- சமந்தா சொல்லும் காரணம் என்ன?

ஒரு பேட்டியில் சமந்தா, ‘சாகுந்தலம்’ படத்தில் முதலில் தான் நடிக்க மறுத்ததாகவும் அதற்கான காரணம் குறித்தும் பேசியிருக்கிறார்.

சமந்தா

சமந்தா நடிப்பில் சமீபத்தில் ‘யசோதா’ படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது அவரது நடிப்பில் வெளியாகவுள்ள படம்   ‘சாகுந்தலம்’. தெலுங்கு இயக்குநர் குணசேகர் இயக்கியுள்ள  இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்திருக்கிறார். மலையாள நடிகர் தேவ் மோகன் உட்படப் பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

'சாகுந்தலம்' சமந்தா
'சாகுந்தலம்' சமந்தா

இந்நிலையில் சமந்தா, ‘சாகுந்தலம்’ படத்தில் முதலில் தான் நடிக்க மறுத்ததாகவும் அதற்கான காரணம் குறித்தும் பேசியிருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், "‘The Family Man 2’ படப்பிடிப்பை நான் முடிக்கும் நேரத்தில் எனக்கு இந்த (சாகுந்தலம்) பட வாய்ப்பு வந்தது. 'சாகுந்தலம்' கதாபாத்திரம் என்பது ‘The Family Man 2’ படத்தில் நான் நடித்த ராஜி கதாபாத்திரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

'சாகுந்தலம்' சமந்தா
'சாகுந்தலம்' சமந்தா

படத்தின் கதையை இயக்குநர் சொன்னபோது என்னால் நடிக்க முடியாது என்று சொன்னேன். காரணம் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்குப் பயமாக இருந்தது. சாகுந்தலை துணிச்சலுடன் பல கஷ்டங்களை எதிர்கொண்டவர். அவருடைய கம்பீரம் எல்லாம் எனக்கு இருக்காது என்று நினைத்தேன். பின் எனது பயத்தை எதிர்கொள்ள இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். கடந்த மூன்று வருடங்களாக எனது பயத்தை நான் எதிர்கொண்ட விதம்தான் தற்போது நான் ஒரு நடிகையாகப் பரிணாம வளர்ச்சி அடைந்ததை உணர்த்துகிறது" என்று கூறியிருக்கிறார்.