Published:Updated:

HCA Awards: சிறந்த சர்வதேச திரைப்படம் உட்பட நான்கு விருதுகள் குவித்த RRR!

‘RRR’ படக்குழுவினர்

நான்கு சர்வதேச விருதுகளை வென்ற படக்குழுவினருக்கு அனைவரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Published:Updated:

HCA Awards: சிறந்த சர்வதேச திரைப்படம் உட்பட நான்கு விருதுகள் குவித்த RRR!

நான்கு சர்வதேச விருதுகளை வென்ற படக்குழுவினருக்கு அனைவரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

‘RRR’ படக்குழுவினர்

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘RRR’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றிருந்தது. சமீபத்தில் இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதையும் பெற்றது. இதனிடையே ஆஸ்கர் விருதுக்கும், சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் இந்தப் பாடல் பரிந்துரைச் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 6வது ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் (Hollywood Critics Association) விருது வழங்கும் விழாவில் சிறந்த ஸ்டன்ட் மற்றும் சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த பாடல் மற்றும் சிறந்த ஆக்‌ஷன் திரைப்படம் என 4 சர்வதேச கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் விருதுகளை ‘RRR’ படம் வென்றுள்ளது.

 ‘RRR’
‘RRR’

சர்வதேச அரங்கில் அதிக விருதுகளை இந்த முறை ‘RRR’ திரைப்படம் குவித்துள்ளது. இதனால் இயக்குநர் ராஜமெளலி மற்றும் அவரது படக்குழுவினருக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது. நான்கு சர்வதேச விருதுகளை வென்ற படக்குழுவினருக்கு அனைவரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.