Published:Updated:

நடிகர் வீட்டில் மலைபோல் குவிந்திருந்ததா ரூ.2000 நோட்டுகள்? புகைப்பட சர்ச்சை; விளக்கமளித்த விஷ்ணு!

நடிகர் கிஷோர்

மலைபோலக் குவிந்துகிடக்கும் 2,000 ரூபாய் நோட்டுகள் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கான விளக்கத்தை நடிகர் விஷ்ணு மஞ்சு அளித்திருக்கிறார்.

Published:Updated:

நடிகர் வீட்டில் மலைபோல் குவிந்திருந்ததா ரூ.2000 நோட்டுகள்? புகைப்பட சர்ச்சை; விளக்கமளித்த விஷ்ணு!

மலைபோலக் குவிந்துகிடக்கும் 2,000 ரூபாய் நோட்டுகள் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கான விளக்கத்தை நடிகர் விஷ்ணு மஞ்சு அளித்திருக்கிறார்.

நடிகர் கிஷோர்
2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாகக் கடந்த 19-ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுக்களை இன்று முதல் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம். அதுவரை செல்லும் எனவும் ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்திருந்தார். இதனால் மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகின்றனர்.

 நடிகர் விஷ்ணு மஞ்சு
நடிகர் விஷ்ணு மஞ்சு

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு தனது ட்விட்டர் பக்கத்தில் மலைபோல் குவிந்து கிடக்கும்  2000 ரூபாய் நோட்டுக்களின் புகைப்படத்தை பகிர்ந்து, `நடிகர் வெண்ணிலா கிஷோர் வீட்டுக்கு சென்றபோது இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். இவ்வளவு 2000 ரூபாய் நோட்டுக்களை வைத்து அவர் என்ன செய்வார்' என கேள்வி எழுப்பியிருந்தார். அவரது இந்த ட்வீட்டிற்கு  சமூக வலைதளங்களில் சிலர் நகைச்சுவையாகக் கருத்துக்களைப் பகிர்ந்திருந்தாலும் பலரும் இதற்கு எதிர்ப்புகளையும் தெரிவித்திருந்தனர்.

இவை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நடிகர் விஷ்ணு மஞ்சு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றையும் அளித்திருக்கிறார். அதில், “ கிஷோரை வைத்து நான்  நகைச்சுவையாக சொன்ன விஷயத்தை சில ஊடகங்கள் தவறாக புரிந்துகொண்டு  செய்திகளை வெளியிடுகின்றனர். 

கிஷோருக்கும் எனக்கும் எப்போதும் இதுபோன்ற வேடிக்கையான விஷயங்கள் நடக்கும் என்பது பெரும்பாலும் அனைவருக்குமே தெரியும்.  நகைச்சுவை உணர்வு உள்ள அனைவருக்கும் இது நகைச்சுவை என்று புரியும். இதை நகைச்சுவை என்று புரிந்துகொள்ளாதவர்களின் ஆன்மாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" என்று அந்தப்  பதிவில்  குறிப்பிட்டிருக்கிறார்.