Published:Updated:

டாப் 2 - விஜய், அஜித்; கடைசி 2 - அப்பா, மகன் - டாப் 10 டிரெய்லர்கள் 2019

ரஜினியின் `பேட்ட' படத்தின் டிரெய்லர்தான் முன்னணியில் இருக்கும் என்று நினைத்த நமக்கு அதிர்ச்சி கொடுத்தார் ரஜினியின் தீவிர ரசிகர்...

top 10 trailers
top 10 trailers

டிரெய்லர்கள்தான் ஒரு திரைப்படத்தின் மிகப் பெரிய விளம்பரம். அப்படி, இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களின் டிரெய்லர்களில் அதிக யூ-டியூப் வ்யூஸ் அள்ளிய டிரெய்லர்களின் பட்டியல் இதோ.

யூடியூப்
யூடியூப்

முதல் 3 இடங்கள்!

கடந்த இரண்டு ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் விஜய் படத்தின் டிரெய்லர்தான் யூ-டியூபில் பட்டையைக் கிளப்பியது. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான `பிகில்' படத்தின் டிரெய்லரை இதுவரை 4.8 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர். 23 லட்சம் பேர் இந்த டிரெய்லரை லைக் செய்ததன் மூலம் `அதிகம் லைக் செய்யப்பட்ட இந்தியத் திரைப்பட டிரெய்லர்' என்ற பெருமையைப் பெற்றது `பிகில்' டிரெய்லர். இரண்டாவது இடத்தில், சிறுத்தை சிவா - அஜித் கூட்டணியில் உருவான `விஸ்வாசம்' படத்தின் டிரெய்லர் உள்ளது. அஜித் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த இந்த டிரெய்லர், 3.2 கோடி பார்வைகளையும் 13 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் ரஜினியின் `பேட்ட' படத்தின் டிரெய்லர்தான் இருக்கும் என்று நினைத்த நமக்கு அதிர்ச்சி கொடுத்தார் ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ். `காஞ்சனா 3' திரைப்பட டிரெய்லர் 2.8 கோடி பார்வைகளுடன் 3-வது இடம்பெற்றுள்ளது.

கடைசி 2 இடங்கள்
கடைசி 2 இடங்களை அப்பாவும் மகனும் பெற்றிருப்பது இந்த டாப் 10 டிரெய்லர்கள் பட்டியலின் மற்றுமொரு சுவாரஸ்யம்.

அடுத்த 7 இடங்கள்!

ரஜினியின் 'பேட்ட' திரைப்படம் 2.6 கோடி பார்வைகளுடன் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினியின் 'தர்பார்' திரைப்படத்தின் டிரெய்லரை இதுவரை 1 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர். ஆனால், இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளதால் `தர்பார்' டிரெய்லரை அடுத்த ஆண்டு டாப் 10-ல் நிச்சயம் காணலாம். 5-வது இடத்தில் 1.72 கோடி பார்வைகளுடன் ஓவியா நடிப்பில் வெளியான '90 ML' திரைப்படத்தின் டிரெய்லர் உள்ளது. டிரெய்லர் வெளியான போது ஆக்டிவ் மோடில் இருந்த `ஓவியா ஆர்மி' வேலைதான் இது. 6-வது இடத்தில் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' டிரெய்லரும் 7-வது இடத்தில் சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் உருவான 'என்.ஜி.கே' படத்தின் டிரெய்லரும், 8-வது இடத்தில் ஜெயம் ரவியின் 'கோமாளி' பட டிரெய்லரும் இடம்பெற்றுள்ளன. அடுத்த 2 இடங்களை அப்பாவும் மகனும் பெற்றிருப்பது இந்த டாப் 10 பட்டியலின் மற்றுமொரு சுவாரஸ்யம். 9-வது இடத்தை விக்ரமின் `கடாரம் கொண்டான்' டிரெய்லர் பிடித்துக்கொள்ள, 10-வது இடத்தைப் பிடித்துள்ளது த்ருவின் 'ஆதித்ய வர்மா' டிரெய்லர்.

Top 10 Trailers 2019
Top 10 Trailers 2019
Vikatan Infographics
மோடி, விஜய், கோலி, பிகில் - ட்விட்டர் இந்தியாவின் டாப் 10! #ThisHappened2019