Published:Updated:

தோனியைத் தொடர்ந்து படத் தயாரிப்பிலும் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா - நடிகர்கள் யார், யார்?

தோனி, ரவீந்திர ஜடேஜா

கிரிக்கெட் வீரர் டு சினிமா தயாரிப்பாளர்: தோனியைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவும் படத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளார்.

Published:Updated:

தோனியைத் தொடர்ந்து படத் தயாரிப்பிலும் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா - நடிகர்கள் யார், யார்?

கிரிக்கெட் வீரர் டு சினிமா தயாரிப்பாளர்: தோனியைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவும் படத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளார்.

தோனி, ரவீந்திர ஜடேஜா

கிரிக்கெட் வீரர் தோனி, சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்று தற்போது IPL போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். கிரிக்கெட் மட்டுமின்றி ஹோட்டல், உடற்பயிற்சிக்கூடம், இயற்கை விவசாயம், சென்னையின் எஃப் சி கால்பந்து அணியின் உரிமையாளர் எனப் பல்வேறு துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட தோனி  திரைத்துறையிலும் தயாரிப்பாளராகக் கால்பதித்து தமிழில் ‘எல்.ஜி.எம்’ (LGM - Let's Get Married) என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். ரமேஷ் தமிழ்மணி இயக்கும் இந்தப் படத்தில் ஹரீஷ் கல்யாண், இவானா உட்படப் பலர் நடிக்கின்றனர்.

ரவீந்திர ஜடேஜா படத்தயாரிப்பு
ரவீந்திர ஜடேஜா படத்தயாரிப்பு

இந்நிலையில் தோனியைத் தொடர்ந்து அவரது நண்பரும், முன்னணி கிரிக்கெட் வீரருமான ரவீந்திர ஜடேஜாவும் படத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளார். ஜெயந்த் கில்டார் இயக்கும் இந்தப் படத்துக்கு 'பச்சாதர் கா ஜோரா’ (Pachhattar Ka Chhora) என்று பெயரிடப்பட்டுள்ளது. ரன்தீப் ஹூடா, நீனா குப்தா, சஞ்சய் மிஸ்ரா, குல்சன் குரோவர் போன்ற முன்னணி நடிகர்கள் உட்படப் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. தோனியைத் தொடர்ந்து ஜடேஜாவும் படத் தயாரிப்பில் களமிறங்கியதற்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.