Published:Updated:

மஹிந்திரா விளம்பர ஷூட்டிங்கில் கடுப்பான ஹீரோ! சமாதானம் செய்த மஹிந்திரா தலைவர்!

அஜய் தேவ்கன்

மஹிந்திரா ட்ரக்குகளின் கமர்ஷியல் விளம்பரப் பட ஷூட்டிங்கில் ஸ்டன்ட் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது, படப்பிடிப்புப் பணியாளர்களிடம் டென்ஷன் இழந்து பேசிய வீடியோ ஒன்று வைரலாகப் போய்க் கொண்டிருக்கிறது.

Published:Updated:

மஹிந்திரா விளம்பர ஷூட்டிங்கில் கடுப்பான ஹீரோ! சமாதானம் செய்த மஹிந்திரா தலைவர்!

மஹிந்திரா ட்ரக்குகளின் கமர்ஷியல் விளம்பரப் பட ஷூட்டிங்கில் ஸ்டன்ட் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது, படப்பிடிப்புப் பணியாளர்களிடம் டென்ஷன் இழந்து பேசிய வீடியோ ஒன்று வைரலாகப் போய்க் கொண்டிருக்கிறது.

அஜய் தேவ்கன்

நம் ஊரில் நடிகர் விஜய் ஒரு லோக்கல் சேனலுக்குப் பேட்டி கொடுக்கும்போது, பத்திரிகையாளர்களிடம் டென்ஷன் ஆனது செம வைரலானது நினைவிருக்கிறதா…? அதேபோன்றதொரு சம்பவம் பாலிவுட்டில் படுவைரலாகிக் கொண்டிருக்கிறது.

மஹிந்திரா ட்ரக் மற்றும் பஸ் போன்ற கமர்ஷியல் வாகனங்களின் பிராண்ட் அம்பாஸடராக இருந்து வருபவர், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன். மஹிந்திரா ட்ரக்குகளின் கமர்ஷியல் விளம்பரப் பட ஷூட்டிங்கில் ஸ்டன்ட் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது, படப்பிடிப்புப் பணியாளர்களிடம் டென்ஷன் இழந்து பேசிய வீடியோ ஒன்று வைரலாகப் போய்க் கொண்டிருக்கிறது. ‘‘எத்தனை தடவைதான் ஸ்க்ரிப்ட்டை மாத்துவீங்க?’’ என்று அவர் வீடியோவில் பேசுவது, மஹிந்திரா தலைவர் ஆனந்த் மஹிந்திராவுக்குப் போக… அதற்கு அவர் சமாதானம் செய்து ட்விட்டரில் பதிவிட்டிருப்பது… காமெடியாகவும் வைரலாகவும் போய்க் கொண்டிருக்கிறது.

‘‘ஏன் இப்படி அடிக்கடி ஸ்க்ரிப்ட்டை மாத்துறீங்க?’’ என்று அவர் கேட்பதற்கு, வீடியோவில் ஒரு பெண் படப்பிடிப்பு உதவியாளர் ஒருவர், ‘‘அடிக்கடி இல்லை சார். 4 தடவைதான்!’’ என்று சிரித்துக் கொண்டே சொன்னதற்குத்தான் அஜய் தேவ்கன் கடுப்பானதாகச் சொல்லப்படுகிறது. இந்த வீடியோவுக்குப் பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா, ‘‘மஹிந்திரா கமர்ஷியல் வாகன ஷூட்டிங்கில் அஜய் டென்ஷன் ஆனதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் எங்களுடைய ஏதாவதொரு மஹிந்திரா ட்ரக்கில் என்னைத் தேடி வருவதற்குள், நான் உடனடியாக ஊரைவிட்டுக் கிளம்புவதுதான் நல்லது!’’ என்று அவர் ஜாலியாக ட்வீட் செய்திருப்பது, ட்விட்டரில் காமெடி ஷோவாகப் போய்க் கொண்டிருக்கிறது.

ஆனந்த் மஹிந்திராவைவிட, ரசிகர்கள் இதற்குப் பயங்கர காமெடியாக கமென்ட் செய்து வருகிறார்கள்.

கீத்திகாந்த தாஸ் என்றொருவர், ‘‘ஆனந்த் சார், ஸ்டன்ட் பற்றி உங்களுக்குத் தெரியாதா? நடிகர் அஜய் தேவ்கன் ஒரு ஸ்டன்ட் நடிகர்… அவர் ஒரு ட்ரக்கில் வரமாட்டார். ஒரே நேரத்தில் இரண்டு ட்ரக்கில் பயணித்து வந்துவிடுவார்’’ என்று காமெடியாகச் சொல்ல…

வால்வோ ட்ரக் ஷூட்டிங்கில் ஹாலிவுட் நடிகர் ஜீன் கிளாட் வாண்டோம்... மஹிந்திரா ட்ரக்கில் அஜய் தேவ்கன்
வால்வோ ட்ரக் ஷூட்டிங்கில் ஹாலிவுட் நடிகர் ஜீன் கிளாட் வாண்டோம்... மஹிந்திரா ட்ரக்கில் அஜய் தேவ்கன்

இன்னொருவரோ, ‘‘அஜய் தேவ்கனுக்கு இன்னும் பயிற்சி வேண்டும்! இன்னும் கால்களை ஸ்ட்ரெட்ச் செய்தால்தான் வால்வோ போன்ற ட்ரக்குகளுடன் மஹிந்திரா போட்டி போட முடியும்!’’ என்று அஜய் தேவ்கன் 2 ட்ரக்குகளின் மீது சும்மா நிற்பதுபோன்ற படத்தையும் – ஹாலிவுட் நடிகர் ஜீன் கிளாட் வாண்டோம், வால்வோ ட்ரக்குகளில் கால்களை அகல விரித்து வருவதுபோன்ற படத்தையும் பதிவிட்டிருக்கிறார்.

கடைசியில் ட்விட்டரை காமெடி சோஷியல் மீடியா ஆக்கிட்டாங்களே!