
கீதாவுக்கு 60 வயசு. துபாய்ல போன மாசம் நடந்த சர்வதேசப் போட்டில கலந்துகிட்டு நாட்டுக்குப் பெருமை தேடித் தந்திருக்காங்க. ‘எங்க ஊர்ல ஆரம்பப் பள்ளி மட்டும்தான் இருந்ததால அஞ்சாவதுதான் படிச்சிருக்கேன்.
``என்ன வெயில்... மயக்கமே வந்துரும் போலிருக்கே” என்று சொல்லிக்கொண்டு வினுவின் வீட்டுக்குள் நுழைந்தார் வித்யா.
``வாங்க வித்யாக்கா. உங்களுக்காக சில்லுன்னு நுங்கு சர்பத் போட்டு வச்சிருக் கேன்” என்று வினு சொன்னதும் வித்யாவின் முகம் மலர்ந்தது.
``வித்யாக்கா, இந்த வெயில்ல அலைய வேணாம்னுதான் வினு வீட்டுக்கு வரச் சொன்னா. பேசாம உங்க வீட்டுக்கு வந்திருக் கலாம். பாவம் நீங்க” என்று சொல்லிக் கொண்டே நுங்கு சர்பத்தை ருசித்தாள் விமல்.
``பருவநிலை மாற்றத்தால என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கு?”
``இல்லைன்னாலும் நம்ம நாட்டுல வெயி லுக்கா பஞ்சம்? சிலப்பதிகாரத்துல கவுந்தி யடிகள் வெயில் கொடுமையால பகல் எல்லாம் ஓய்வு எடுத்துட்டு, ராத்திரி பயணம் செய்வாராமே... அப்படின்னா சங்க காலத் துலயே வெயில் வாட்டியிருக்குன்னு தானே அர்த்தம்?”
``நீ சொல்றதும் சரிதான் வினு. ஆனா, காங்கோ நாட்டுல திடீர் வெள்ளம்.... நமக்கெல் லாம் கடும் வெயில்னு வரும்போது பருவநிலை மாற்றத்துக்கும் முக்கியமான பங்கு இருக்கும்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க.”
``அதுக்குதான் உலக அளவுல மாநாடுகளா நடத்தறாங்க, நடவடிக்கை எதுவும் எடுக் கலையா விமல்?”
``இல்லக்கா... அதனால ஜெர்மனில ரெண்டாயிரம் விஞ்ஞானிகள், பருவநிலை மாற்றத்துக்கான நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லி வீதியில இறங்கிப் போராடறாங்க.”
``என்னது, சயின்டிஸ்ட் கூடவா போராட வந்துட்டாங்க?”
``ஆமா வித்யாக்கா. 2030-க்குள்ள 43 பர் சென்ட் கார்பன் பயன்பாட்டைக் குறைக்க ணும். அப்படி இல்லைன்னா ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகள் ரொம்ப பாதிக்கப்படும்னு சொல்றாங்க. ஆனா, கடந்த பத்து வருஷங்கள்ல கார்பன் பயன்பாடு 11 பர்சென்ட் அதிகமாயிருச்சாம். அப்போ இதுக்கு உடனடியா ஒரு தீர்வு எடுக்க ணும்தானே? அதுக்குதான் போராட்டம்.”
``இந்த அக்கறை உலக நாடுகளோட அரசாங்கங்களுக்கு இருக்கணும். எதிர் காலத்தை நினைச்சா கவலையா இருக்கு வினு.”
``நாம கவலைப்பட்டு என்ன செய்ய வித்யாக்கா? கவலைப்பட வேண்டியவங்க கவலைப்படணும். அப்புறம், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மேல பத்திரிகையாளர் ஜேன் கரோல், பாலியல் குற்றச்சாட்டை வச்சாங்க. அந்த கேஸ்ல இப்போ தீர்ப்பு வந்திருக்கு.”
``ட்ரம்ப்பை விடுவிச்சிட்டாங்களா விமல்..?”
``இந்தியாலதான் இப்போ கிரிமினல்களை எல்லாம் அரசாங்கம் விடுவிக்குது. அமெரிக் கால இல்ல... ட்ரம்ப் இந்தக் குற்றச்சாட்டை ஏத்துக்கலைன்னாலும் 79 வயசு ஜேன் கரோலுக்கு சாதகமா தீர்ப்பு வந்திருக்கு. ட்ரம்ப் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை அவங்களுக்குக் கொடுக்கணும்னு சொல்லி யிருக்காங்க.”

``ஓ... அப்படியா!”
``28 வருஷங்களுக்கு முன்னால ஒரு டிரஸ்ஸிங் ரூம்ல பலாத்காரம் பண்ணிட்டதா 2019-ல சொன்னாங்க ஜேன் கரோல். இத்தனை வருஷத்துக்குப் பிறகும் அங்கே நிரூபிக்க முடியுது.”
``கரெக்டா சொன்னே விமல்... இஸ்ரேல் நாடு உருவாகி 75 வருஷமாயிருச்சு. ஒரு காலத்துல யூதர்கள் பலமில்லாம இருந்தாங்க. ஹிட்லரோட படைகளால துரத்தித் துரத்தி வேட்டையாடப்பட்டாங்க. லட்சக்கணக்
கானவங்க இறந்தும் போனாங்க. அப்ப அவங் களுக்குன்னு ஒரு நாடு இல்லை. அதுக்கு அப்புறம் தங்களுக்கான நாட்டை உருவாக்கி னாங்க. இன்னிக்கு அந்த நாடுதான் அறிவியல் துறைல முன்னணில இருக்கு. ஒரு காலத்துல யூதர்கள்கிட்ட அதிகாரம் இல்லை. இன்னிக்கு அதிகாரமும் இருக்கு. இதை யெல்லாம் வச்சு உலகின் சிறந்த நாடா இஸ்ரேல் இருந் திருக்கலாம். ஆனா, பாலஸ் தீனர்களோட பகுதியை ஆக்கிரமிச்சு, அவர்களின் நிம்மதியைக் கெடுத்துருச்சு.”
``ஒருகாலத்துல யூதர்கள் பட்ட கஷ்டங்களை இப்ப பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கறதுல எந்த நியாய மும் இல்லை. அதிகாரம் இல்லாதவங்க அதிகாரத்தைப் பெறும்போது எவ்வளவு நல்லவிதமா நடந்துக்கணும்” என்று பெருமூச்சு விட்டாள் விமல்.
``பாலஸ்தீனர்களின் பிரச்னை தீர்ந்தா, இஸ்ரேலுக்கு உலகமே வாழ்த்துச் சொல்லும்’’ என்றபடி மீண்டும் நுங்கு சர்பத்தைக் கொண்டு வந்து கொடுத்தாள் வினு.
``சென்னையில அடுத்து நடக்கும் மாரத் தான்ல நாம மூணு பேரும் கலந்துக்குவோமா?”
``கிண்டல் பண்றியா வினு....”
``முயன்றால் முடியாதது எதுவும் இல்ல வித்யாக்கா. இங்கிலாந்துல ஹிலாரி வாரம்கிற 81 வயசு பாட்டி, மாரத்தான் ஓடுறதையே வேலையா வச்சிருக்காங்க. இதுவரைக்கும் 175 மாரத்தான் போட்டிகள்ல ஓடியிருக்காங்க!”
``81 வயசா, இல்ல 18 வயசா?”
``வித்யாக்கா, ஹிலாரி 52 வயசுலதான் ஓட ஆரம்பிச்சாங்க. 55 வயசுலருந்து மாரத்தான்ல ஓடிட்டு இருக்காங்க. 300 மாரத்தான்கள்ல ஓடணும்னு ஆசை இருக்காம். உடம்பு ஒத்துழைச்சா முடிச்சிடுவேன்னு சொல்றாங்க!”
``வாவ்! நிஜமாவா! இது சாதாரண விஷயமில்ல. கிரேட்” என்றார் வித்யா.
``இன்னொரு பாட்டியை பத்தி நான் சொல்றேன். ஹரியானால குருகிராமைச் சேர்ந்தவங்க கீதா கோதாரா. இவங்க பேத்தி ஆஷ்காவை கராத்தே கிளாஸுக்கு அழைச் சிட்டுப் போனாங்களாம். வேடிக்கை பார்த் துட்டு இருந்தவங்க, தானும் கத்துக்க ஆரம் பிச்சாங்க. இப்போ பாட்டியும் பேத்தியும் சர்வதேசப் போட்டிகள்ல கலந்துக்கறாங்க!”
``என்ன சொல்றே விமல்?”
``கீதாவுக்கு 60 வயசு. துபாய்ல போன மாசம் நடந்த சர்வதேசப் போட்டில கலந்துகிட்டு நாட்டுக்குப் பெருமை தேடித் தந்திருக்காங்க. ‘எங்க ஊர்ல ஆரம்பப் பள்ளி மட்டும்தான் இருந்ததால அஞ்சாவதுதான் படிச்சிருக்கேன். ஆனா, சின்ன வயசுல ராணுவத்துல சேரணும்கிற கனவு இருந்துச்சு, அது நடக்கல. இப்போ பேத்திக்குத் துணையா வந்து பதக்கம் வாங்கிட்டேன்’னு பெருமையா சொல்றாங்க. பாட்டி ஒரு சர்வதேசப் பதக்கத் தையும் ஆஷ்கா மூணு சர்வதேசப் பதக்கத்தை யும் இதுவரைக்கும் வாங்கியிருக்காங்க!’’
``நைஜீரியாவைச் சேர்ந்தவங்க செஃப் ஹில்டா பாசி. இவங்க 96 மணி நேரத்துல 100 விதமான உணவுகளைத் தொடர்ந்து செய்யுற முயற்சியில இறங்கினாங்க. ஒரு மணி நேரத் துக்கு ஒரு தடவை 5 நிமிஷம் மட்டுமே ரெஸ்ட் எடுத்துட்டு, சமைச்சாங்க. கடைசியில் 96 மணி நேரத்தைக் கடந்து 100 மணி நேரத்துல தன் சமையலை நிறுத்திக்கிட்டாங்க. இது மூலம் கின்னஸ் சாதனையில இடம்பிடிச்சி ருக்காங்க. ‘எங்க நாடு உலக வரைபடத்துல வரணும். நானும் எங்க மக்களும் வரைபடத்துல வரணும்கிறதுக்காகத்தான் நான் இந்தச் சாதனை முயற்சியில இறங்கினேன்’னு அழுதுட்டாங்க.”
``சூப்பர்... ஏதாவது மூவி பார்த்தீங்களா?”
``நான் ‘தஹாத்’ங்கிற இந்தி வெப் சீரிஸ் தமிழ்ல பார்த்தேன் வித்யாக்கா. ‘தஹாத்’னா குரல்னு அர்த்தம். க்ரைம் த்ரில்லர். இந்தக் கதையை உருவாக்கினவங்க, வசனம் எழுதினவங்க, இயக்கினவங்க எல்லாம் பெண்கள். ரீமா கக்டி, ருச்சிகா ஓபராய் இயக்கியிருக்காங்க. சோனாக்ஷி சின்ஹா, குல்ஷன் தேவய்யா, விஜய் வர்மா எல்லாம் முக்கியமான கேரக்டர்ல வர்றாங்க. ராஜஸ் தான்ல ஒரு கிராமத்துல பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழைப் பெண்கள் காணாமப் போறாங்க. அவங்க இஸ்லாமிய இளைஞர்களோட ஓடிப் போனதா சொல்லி, ஒரு கும்பல் போராட்டம் நடத்துது. அப்போ தான் 27 பெண்கள் காணாமப் போயிருக்குறதும் எல்லாரும் கல்யாணத்துக்கு வரதட்சணை கொடுக்க முடியாம, வீட்டைவிட்டு ஓடிப் போய் ஒருத்தன்கிட்ட ஏமாந்து, உயிரை விட்டதும் தெரிய வருது. ஆனா, அதைச் செய்தவன் சமூகத்துல நல்ல பேரோட இருக்கான். அவன் எப்படிக் கொலைகளைச் செய்யறான், ஏன் செய்யறான்ங்கிறதுதான் கதை. சப் இன்ஸ்பெக்டரா இருந்தாலும் சோனாக்ஷியை அந்தக் கிராமம் சாதியைக் காரணம் சொல்லி பாகுபாடு காட்டுது. மதம், சாதி, பெண் இப்படிப் பல விஷயங்களை இந்த சீரிஸ் நல்லா பேசுது. எல்லாரும் பார்க்க லாம்” என்ற விமல், ‘`ஓகே வித்யாக்கா... நாம கிளம்புவோம்” என்றாள்.
விமலுக்கும் வித்யாவுக்கும் விடை கொடுத்து அனுப்பிவைத்தாள் வினு.
அரட்டை அடிப்போம்...

வினு தரும் வித்தியாசமான தகவல்
நவீன கண்டுபிடிப்புகளின் முன்னோடி!
Wi-Fi, GPS உள்பட பல நவீன கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளம் அமைத்தவர் ஹெடி லாமர் என்ற பெண். ஹெடி லாமரை பலருக்கு கறுப்பு வெள்ளை திரைப்பட நட்சத்திரமாகத் தெரியும். ஆனால், இரண்டாம் உலகப் போரில் டார்பிடோ தொழில்நுட்பத்தை மேம்படுத்த அவர் பணியாற்றினார் என்பது பலருக்குத் தெரி யாது. ஹெடி திறமையான கணிதவியலாளர் மற்றும் பொறியியலாளர், அவர் ஓர் இசையமைப் பாளருடன் இணைந்து டார்பிடோ கட்டுப்பாட்டு சமிக்ஞைகளை குறியாக்கம் செய்யும் ‘அதிர்வெண் துள்ளல்’ (Frequency Hopping) என்ற தொழில் நுட்பத்தை உருவாக்கினார். இதைக் கொண்டு எதிரிகள் நீர்மூழ்கிக் குண்டுகளை அனுப்புவதைத் தடுக்க முடிந்தது. இன்னும் சுவாரஸ்யமாக, அவர் உருவாக்கிய இந்தத் தொழில்நுட்பமே பிற் காலத்தில் Wi-Fi, GPS உள்பட பல நவீன கண்டு பிடிப்புகளுக்குக் காரணமாக அமைந்தது.