Published:Updated:

`நிறைவான வாழ்க்கை வாழுறேன்' விமானத்தையே வீடாக மாற்றி வசிக்கும் அமெரிக்கர்!

போயிங் 727 விமானம் ( social media )

இந்த விமானம் சுமார் 1,066 சதுர அடி மற்றும் 35 டன் எடை கொண்டது. 200 பயணிகள் வரை இதில் பயணிக்கலாம். பல மாத தேடலுக்குப் பிறகு இந்த விமானத்தைக் கண்டுபிடித்து வாங்க ஆசைப்பட்டார்.

Published:Updated:

`நிறைவான வாழ்க்கை வாழுறேன்' விமானத்தையே வீடாக மாற்றி வசிக்கும் அமெரிக்கர்!

இந்த விமானம் சுமார் 1,066 சதுர அடி மற்றும் 35 டன் எடை கொண்டது. 200 பயணிகள் வரை இதில் பயணிக்கலாம். பல மாத தேடலுக்குப் பிறகு இந்த விமானத்தைக் கண்டுபிடித்து வாங்க ஆசைப்பட்டார்.

போயிங் 727 விமானம் ( social media )

ஒவ்வொரு மனிதனுக்கும் வீடு என்பது அவசியம். தலை சாய்த்து தூங்கவும் இளைப்பாறவும் `வீடு’ வேண்டும். அந்த வீடு நமக்குப் பிடித்தவாறு இருக்க வேண்டும். இதற்காக பல கனவுகளோடு வீட்டைப் பெரும்பாலானவர்கள் கட்டுவதுண்டு. ஆனால் வீடு என்றால் மண்ணும் செங்கல்லும் சேர்த்துக் கட்டினால் தான் வீடா… அவரவரின் விருப்பத்திற்கேற்ப அவை மாறுபடாதா…

போயிங் 727 விமானம்
போயிங் 727 விமானம்

விமானத்தில் வசிக்கும் தன்னுடைய கனவை நிஜமாக்கி இருக்கிறார், அமெரிக்காவில் வசிக்கும் புரூஸ் கேம்பல். இவர் ஒரு எலக்ட்ரிகல் என்ஜினீயர். 15 வயதில் விமானத்தில் வசிக்க வேண்டும் என்ற விருப்பம் இவருக்கு இருந்துள்ளது. தற்போது 73 வயதாகியுள்ள நிலையில், அதனைச் சாத்தியப்படுத்தி உள்ளார்.

அமெரிக்காவின் ஓரிகன் பகுதியில் தனக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில், முழுவதும் மரங்கள் சூழ்ந்திருக்க அதன் மத்தியில், போயிங் 727 விமானம் இருக்கிறது. அங்கு 1999-ம் ஆண்டு முதல் விமானத்தையே வீடாக மாற்றி ரம்யமான வாழ்வை வாழ்கிறார். இந்த விமானத்தை வாங்க 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவு செய்துள்ளார்.  

இந்த விமானம் சுமார் 1,066 சதுர அடி மற்றும் 35 டன் எடை கொண்டது. 200 பயணிகள் வரை இதில் பயணிக்கலாம். பல மாத தேடலுக்குப் பிறகு இந்த பழைய விமானத்தைக் கண்டுபிடித்து வாங்க ஆசைப்பட்டார்.

புரூஸ் கேம்பல்
புரூஸ் கேம்பல்
social media

விமானத்தின் என்ஜின்கள் மற்றும் பிற பாகங்கள் அகற்றப்பட்டு, விமானம் ஓடாது என்பதை உறுதி செய்த பின், இவ்விமானம் கேம்பலின் நிலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த முழு செயல்முறைக்கும் 1 லட்சத்து 20,000 அமெரிக்க டாலர்கள் வரை செலவழித்துள்ளார். இந்த விமானத்தை அப்படியே சமையலறை, படுக்கையறை, குளியலறை என வீடு செட்டப்பில் மாற்றியிருக்கிறார். அடிக்கடி விமானம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு பிரபலமடைந்திருக்கிறார்.

இது குறித்து கேம்பல் கூறுகையில், ``இது போன்ற ஒரு கட்டமைப்பில் வாழும்போது, என் வாழ்க்கை இன்னும் கொஞ்சம் நிறைவானதாக உணர்கிறேன். ஒரு பொறியியலாளராகவோ, விஞ்ஞானியாகவோ அல்லது விண்வெளி தொழில்நுட்பத்தின் நேர்த்தியையும் அழகையும் பாராட்டுபவராகவோ இருந்தால், இது வாழ்வதற்கு மகிழ்ச்சியான இடம்’’ என்று தெரிவித்துள்ளார்.