Published:Updated:

நியூஸ் காக்டெயில்

நியூஸ் காக்டெயில்
பிரீமியம் ஸ்டோரி
News
நியூஸ் காக்டெயில்

சரண்

நியூஸ் காக்டெயில்
விஜய் தன் நெருங்கிய நண்பர்களோடு வீடியோ கால் மீட்டிங்
விஜய் தன் நெருங்கிய நண்பர்களோடு வீடியோ கால் மீட்டிங்

விஜய் தன் நெருங்கிய நண்பர்களோடு வீடியோ கால் மீட்டிங்கில் பேசி நண்பர்கள் தினத்தைக் கொண்டாடிய வீடியோவின் ஸ்கிரீன் ஷாட் வைரலானது. கேசுவலாக ஷேவ் செய்யாத விஜய்யின் போட்டோவை உச்சிமுகர்ந்தார்கள் ரசிகர்கள். சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்ட தன் நெருங்கிய நண்பர்கள் 5 பேரோடு அவர் சிரித்தபடி அப்படி என்னதான் பேசினார் என ஸ்ரீநாத்திடம் கேட்டால், ‘நாங்க ஸ்வீட் நத்திங்ஸ் நிறைய பேசுவோம். அதையெல்லாம் சொல்ல முடியுமா பாஸு?’ எனச் சிரிக்கிறார். இன்னொரு பக்கம், ‘வீட்டில் இரு... விலகி இரு... பிகில் பாரு..!’ எனத் திருச்சியில் விஜய் ரசிகர்கள் துண்டுப்பிரசுரம் அச்சடித்து வீடுவீடாக கிரில் கேட்டில் செருகிச் சென்றார்கள். டிவில படம் போடுறதுக்கெல்லாம் கூடவா?

ல ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்டாலும் இன்னமும் ‘நீயா நானா’வுக்கு என்று ரசிகர்கள் வட்டம் உண்டு. இந்த வாரம் ‘நீயா நானா’வும் டிவி சீரியல்களைப்போல புதுப்பொலிவுடன் ஒளிபரப்பானது. அரங்கத்தை எப்படி சுத்தம் செய்கிறார்கள் என்று நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பு காட்டினார்கள். வழக்கமாக சபை நிறையும் அரங்கத்தில் இரண்டு நாற்காலிகளுக்கு ஒருவர் என்று சமூக இடைவெளிவிட்டு அமர, மொத்தம் 20 பேர்கூட இல்லை. மாஸ்க், கிளவுஸ் சகிதம் ‘கொரோனாவுக்கு பயப்படலாமா, வேண்டாமா?’ என்று விவாதித்தார்கள். இனிமே ‘மைக்கை அவர்கிட்ட கொடுங்க’ என்று சொல்ல கோபிநாத் யோசிப்பார். அப்படியே கொடுத்தாலும் சானிட்டைசரில் கை கழுவிட்டுத்தான் வாங்கணும் பாஸ்!

குஷ்பு
குஷ்பு

ர்ச்சை, பரபரப்பு என்றால் குஷ்பு இல்லாமலா? சமூகப் பிரச்னைகளுக்குக் கருத்து சொல்வதில் தொடங்கி, ‘சங்கிகளே மோதிப்பார்க்கலாமா?’ என்று சவால் விடுவது வரை சோஷியல் மீடியாக்களில் தலைவி எப்போதும் பிஸி. ஆனால் தன் சொந்தக் கட்சியான காங்கிரஸுக்கே ஷாக் கொடுத்ததுதான் அதிர்ச்சி. மோடி அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவும் எல்லா எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கத் தயாரான நிலையில் பூங்கொத்துடன் புதிய கல்விக்கொள்கைக்கு குஷ்பு வரவேற்பு அளித்தது காங்கிரஸுக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது. ‘கருத்துச்சுதந்திரத்தை மதிக்கும் கட்சிதான் காங்கிரஸ். ஆனால் எந்தக் கருத்தாக இருந்தாலும் கட்சிக்குள் சொல்ல வேண்டுமே தவிர, பொதுவெளியில் பகிரக்கூடாது’ என்று பொங்கினார் கே.எஸ்.அழகிரி. ‘குஷ்பு பா.ஜ.க.வில் சேரப்போகிறார்’ என்று வதந்தி பரவ, அதை மறுத்திருக்கிறார் குஷ்பு. தாமரை பக்கம் தாவுமா பூ?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

‘டெல்லியின் அடிமை முதல்வர் எடப்பாடி’ என்று ஸ்டாலின் அடிக்கடி ஒரண்டை இழுப்பதும், ‘இதெல்லாம் ரொம்பத் தப்புங்க’ என்று எடப்பாடி எகிறிக்குதிப்பதும் சகஜம்தான். ஆனால், சமீபத்தில் ஒரு விஷயத்துக்காக எடப்பாடியை ஸ்டாலின் பாராட்டியிருப்பது எல்லோருக்கும் ஆச்சர்யம்தான். புதிய கல்விக்கொள்கையின் மும்மொழிக்கொள்கையை எடப்பாடி பழனிசாமி எதிர்த்ததற்கு நன்றி தெரிவித்துள்ள ஸ்டாலின், ‘கல்விக்கொள்கையில் இன்னும் ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன. அதையும் கவனத்தில் எடுத்து எதிர்ப்புகளைத் தெரிவியுங்கள்’னு சொல்லியிருக்கார். போற போக்கில பொக்ரான் அணுகுண்டு!

நியூஸ் காக்டெயில்

.டி.டியில் வெளியாகும் தமிழ்ப்படம் என்றாலே அது பெண்கள்மீதான வன்முறைக்கு எதிரான ஹீரோயினிசப் படம் என்று முடிவுக்கு வந்துவிடலாம். ‘பொன்மகள் வந்தாள்’, ‘பென்குயின்’ அடுத்து ‘டேனி’. ‘இதுக்கு அதுவே பரவாயில்லை’ என்று அடுத்தடுத்த படங்கள் நிரூபித்துக்கொண்டிருக்கின்றன. கதைக்கரு நல்ல விஷயம்தான். ஆனால் திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு, நடிப்பு எல்லாமே... இன்னும் பட்டி டிங்கரிங் பார்த்திருக்கணும். முந்தைய படங்களில் ஹீரோயின்கள் ஓரளவு தாங்கிப்பிடித்தார்கள். ஆனால் ‘மக்கள் செல்வி’ வரலெட்சுமியோ, போகிறார், வருகிறாரே தவிர எதையும் பெரிதாகச் செய்துவிடவில்லை. டைட்டில் வைக்கிற அளவுக்கு முக்கியத்துவம் மோப்ப நாய்க்கு இருக்கான்னு பார்த்தால், டேனி அஞ்சாறுதடவை குரைப்பதைத் தாண்டி எந்தப் புதுமையுமில்லை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இவங்க ரெண்டுபேருக்குமே சொல்றதுக்கு ஒண்ணுமில்லைங்கிறப்ப வேல ராமமூர்த்தி, அனிதா சம்பத், மியூசிக் பத்தியெல்லாம்... ப்ச்!

நியூஸ் காக்டெயில்

கஸ்ட் 2 - இந்தத் தேதியை ‘பாபநாசம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப்பும் கமல்ஹாசனும்கூட மறந்திருப்பார்கள். ஆனால் நெட்டிசன்கள் மறக்கத் தயராக இல்லை. ‘லாக்டௌனில் சம்பவம் பண்ணியிருந்தால் இந்த ஆகஸ்ட் 2 சுயம்புலிங்கம் குடும்பம் தென்காசிக்கு தியானத்துக்குப் போயிருக்க முடியாதில்ல..?’ என இந்த வருஷம் புது தினுசாய் உருட்டினார்கள். சுயம்புலிங்கத்துக்கு ஒரு குரூப் இருந்தால் வந்தியத்தேவனுக்கு ஒரு குரூப் இல்லாமலா போய்விடும்? ஆகஸ்ட் 2 அன்று ஆடிப்பெருக்கும் சேர்ந்துவர, ‘இன்றுதான் ‘பொன்னியின் செல்வன்’ கதை ஆரம்பிக்கும்’ என்று புல்லரிக்க, மணிரத்னமோ ‘நான் எப்போ மறுபடியும் ‘பொன்னியின் செல்வன்’ ஷூட்டிங் ஆரம்பிக்கிறது?’ என்று பெருமூச்சு விட்டிருப்பார். ஆடி மாசத்துக்கே உரிய ஆடித்தள்ளுபடி, அம்மன் திருவிழா, கம்பங்கூழ் - கருவாட்டுக்குழம்பு, புதுமாப்பிள்ளை - பொண்ணு பிரித்தல், ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு கொண்டாடுவது என்று எதுவுமே இல்லாமல் ஆடிப்போயிருக்கிறது ஆடி!

விஜயலெட்சுமி
விஜயலெட்சுமி

மைக்கறி, கறி இட்லி என்று அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் சீமான் இந்தமுறை பழைய பஞ்சாயத்தில் சீரியஸாக சிக்கினார். தன்னைத் திருமணம் செய்வதாக சீமான் வாக்குறுதி கொடுத்துவிட்டு ஏமாற்றியதாக ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் புகார் கொடுத்தார் விஜயலெட்சுமி. இடையில் இந்த விவகாரம் அப்படியே அமுங்கிப்போனது. ஆனால் என்ன ஆனதோ, கடந்த சில மாதங்களாகவே விஜயலெட்சுமி வீடியோக்களில் சீமானை வெளுத்துவாங்கினார். அதன் உச்சமாக சீமானின் ஆதரவாளர்களும் சாதித்தலைவர் ஒருவரும் தன்னை மிரட்டுவதாகவும் தற்கொலை செய்யப்போவதாகவும் மாத்திரைகளுடன் வீடியோ வெளியிட்டது பகீர் ரகம். ஒருவழியாக விஜயலெட்சுமி காப்பாற்றப்பட்டாலும் இன்னமும் பரபரப்பு குறையாமல் போர்க்கொடி தூக்குகிறார். என்னடா இது செந்தமிழனுக்கு வந்த சிக்கல்!

நியூஸ் காக்டெயில்

ங்கம்னாலே சட்டை கிழியத்தானே செய்யும். தமிழ் சினிமாவில் ஏற்கெனவே தயாரிப்பாளர்க்கென மூன்று சங்கங்கள் இருக்கும்போது இயக்குநர் பாரதிராஜா தலைமையில் இன்னொரு சங்கம் உதயமாகப்போகிறது என்பதுதான் சென்றவாரம் கோடம்பாக்கம் ஹாட் டாக்! புதிய சங்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், கே.ஜி.முரளிதரன், டி.சிவா, டி.ஜி.தியாகராஜன் ஆகியோருக்கு முக்கியப் பொறுப்பு என்றெல்லாம் செய்தி வட்டமடிக்க, பாரதிராஜா உடனே மறுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டார். ‘அந்தச் செய்தியில் உண்மை இல்லை. எல்லோரிடமும் கலந்தாலோசித்துதான் முடிவெடுப்போம்’ என்று சொல்லியிருந்தார். ஆனால் எடப்பாடி அரசாங்கம்போல இயக்குநர் இமயமும் யு-டர்ன் போட்டு, ‘புதிய தயாரிப்பாளர் சங்கத்தைத் தொடங்கியிருக்கிறோம்’ என்று மறுநாளே அறிக்கை விட்டார். பல்டிராஜா!