Published:Updated:

`அடுப்பு ஊதும் சச்சின்; மண் பானையில் சமைக்கும் அஞ்சலி’ - வைரலாகும் பிறந்தநாள் புகைப்படம்!

குடும்பத்துடன் சச்சின்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன் 50-வது பிறந்தநாளை ஒரு கிராமத்தில் மிகவும் எளிமையான முறையில் கொண்டாடியுள்ளார்.

Published:Updated:

`அடுப்பு ஊதும் சச்சின்; மண் பானையில் சமைக்கும் அஞ்சலி’ - வைரலாகும் பிறந்தநாள் புகைப்படம்!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன் 50-வது பிறந்தநாளை ஒரு கிராமத்தில் மிகவும் எளிமையான முறையில் கொண்டாடியுள்ளார்.

குடும்பத்துடன் சச்சின்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 16 வயது இளைஞராக விளையாட ஆரம்பித்து கிட்டத்தட்ட 24 ஆண்டுகளாக கிரிக்கெட் உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர். ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டிகளில் இவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். இன்னமும் இவரின் பல சாதனைகள் முறியடிக்கப்படாமலேயே உள்ளன. கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சச்சின், கடந்த 25-ம் தேதி தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

சச்சின்
சச்சின்

தனது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில், பெயர் குறிப்பிடாத ஒரு கிராமத்தில் மண் அடுப்பில் சச்சின் குழல் வைத்து ஊதுகிறார்; அவரின் மகள் அடுப்பில் விறகு வைக்க, மனைவி அஞ்சலி மண் பானையில் சமையல் செய்யும் புகைப்படம் தான் அது.

அத்துடன், ``ஒவ்வொரு நாளும் நாம் அரை சதம் அடிப்பதில்லை. அப்படி அரை சதம் அடிக்கும்போது நமக்கு மிக முக்கியமானவர்களுடன் அதைக் கொண்டாடுவதுதான் மதிப்புக்குரியது. சமீபத்தில், அமைதியான ஒரு கிராமத்தில் என் 50-வது பிறந்தநாளை என் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடினேன். அர்ஜுன் ஐ.பி.எல்லில் பிஸியாக இருப்பதால் அவரை மிகவும் மிஸ் செய்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

``ஒரு கிராமத்துக்குச் சென்று சச்சின் சமைப்பது அவரின் வேர்களுடன் ஆழமான தொடர்பையும் பாரம்பர்ய வாழ்க்கை முறை மீதான அவரது அர்ப்பணிப்பு மற்றும் அன்பையும் காட்டுகிறது. சச்சின், உலக அளவில் புகழ் பெற்றிருந்தாலும் பல வெற்றிகளைச் சந்தித்து இருந்தாலும் தன் கலாசாரத்துக்கு உண்மையாக இருக்கிறார். அவரது அறக்கட்டளை மீதான அவரது அர்ப்பணிப்பு மற்றும் சமூகத்துக்குத் திரும்ப கொடுக்க வேண்டும் என்ற அவரது ஆர்வம் பலருக்கு உத்வேகமாக உள்ளது” என நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சச்சினின் அறக்கட்டளை, சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சந்தல்பூர் கிராமத்தில் ஒரு பள்ளியைக் கட்டியுள்ளது. இந்தப் பள்ளி, டெண்டுல்கரின் பெற்றோருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கிராமப்புற மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.