Published:Updated:

வலைபாயுதே!

ரம்யா, சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான்
பிரீமியம் ஸ்டோரி
News
ரம்யா, சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான்

கையும் களவுமாகப் பிடிபட்ட பின் குற்றத்தை மறுக்கக்கூடாது. நியாயப்படுத்த ஆரம்பிக்க வேண்டும்

facebook.com/saravanakarthikeyanc

கையும் களவுமாகப் பிடிபட்ட பின் குற்றத்தை மறுக்கக்கூடாது. நியாயப்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.

facebook.com/ramanujam.govindan

நீங்கள் செத்துப்போயிருந்தால் உங்களைச் சுற்றி இருப்போருக்குத்தான் அந்தத் துன்பம் எல்லாம். உங்களால் அந்தத் துன்பத்தை உணர முடியாது. நீங்கள் முட்டாளாக இருந்தாலும் அதுபோலத்தான்!

facebook.com/jasmine.sangeetha

போன்ங்கிறது நாம பேசுறதுக்கு மட்டுமல்ல, எதிர்ல இருக்கவங்க பேசுறத கேக்குறதுக்கும்தான்னு சின்ன வயசுலருந்தே ஸ்கூல்ல ஸ்பெஷல் பீரியட் வச்சாச்சும் சொல்லிக் குடுத்து வளக்கணும்! போன் பண்ணுனா ஒரு மணி நேரத்துல 56 நிமிஷம் அவிங்க மட்டுமே பேசுறாய்ங்க... அதுக்கு எதுக்கு போனு, தனியாவே பேசிக்கலாம்ல! வேற யாரு, சொந்தக்காரங்கதான்!

twitter.com/itz_idhayavan

லாக்கரில் வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் வீட்டுப் பணியாளர்கள்மீது சந்தேகம் இருப்பதாகவும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போலீசில் புகார்!

# ஜெயிலர் வீட்டுலயே திருடனா?!

Taapsee Pannu: அழகு ராட்சசி!
Taapsee Pannu: அழகு ராட்சசி!

twitter.com/Anvar_officia

கோடைக்காலம் வந்தாலே டெலிவரி பாய்ஸுக்கு தண்ணீர் கொடுங்கன்னு வாட்ஸப்ல பார்வேர்டு மெசேஜ் பண்ண ஆரம்பிச்சுடுறாங்க. எனக்கென்னவோ பச்சக்கிளி வடிவேலு காமெடிதான் ஞாபகத்துக்கு வருது. ஒருவேளை அவங்களே இந்த மெசேஜ பார்வேர்டு பண்ணுறாங்களோ?!

twitter.com/anand_comrade

மிடில் கிளாஸ்ல இருக்குறவன் எல்லாம் 27 வயசுலயே செத்துப்போய்டுறான். அவன் பாடியை அடக்கம் பண்ணதான் 72 வயசு ஆகுது!

twitter.com/Suyanalavaathi

‘சனி பக்கத்துல டபுள் காட் பெட் போட்டுப் படுத்துட்டு இருக்கு'ன்னு சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனா டி.டி.எஃப் வாசன் விஷயத்துல, கூடவே பைக்ல டபுள்ஸும் சேர்ந்து போயிட்டு இருக்கு!

twitter.com/LAKSHMANAN_KL

வாய்ப்பு இருந்தால் தினகரனுடன் இணைந்து செயல்படுவேன்: ஓ.பி.எஸ்.

# அ.ம.மு.க ஒருங்கிணைப்பாளர் ஆகறதுக்கு அண்ணன் பிளான் பண்ணுறாரோ?!

twitter.com/Kirachand4

தேர்வுமீது மாணவர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது: பிரேமலதா

# தே.மு.தி.க மீது மக்களுக்கு நம்பிக்கையே போயிடுச்சேம்மா...

Ramya Subramanian: மொமன்ட் வித் ராக்ஸ்டார்ஸ்!
Ramya Subramanian: மொமன்ட் வித் ராக்ஸ்டார்ஸ்!

twitter.com/kumarfaculty

ஞாயிறு எனும் சொர்க்கம் சனிக்கிழமை பிற்பகலில் ஆரம்பித்துவிடுவதைப் போல, திங்கள் எனும் நரகம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலிலேயே ஆரம்பித்து விடுகிறது!

twitter.com/saravankavi

தோல்விங்கறது மனைவி மாதிரி... எப்ப வேணும்னாலும் நம்மளைப் போட்டு மிதிக்கும். ஆனா, வெற்றிங்கறது காதலி மாதிரி... எப்பவாவது ஒரு தடவைதான் கிடைக்கும்!

twitter.com/GOV_INDA_RAJ

அதென்னங்கடா 35, 40 வயசுல கல்யாணம் பண்ணுனா மாப்பிள்ளை வயசானவன்னு சொல்றிங்க. அதே 40, 45 வயசுலே செத்துட்டா சின்ன வயசுலே செத்துட்டான்னு சொல்றிங்க...

twitter.com/Greesedabba2

அ.தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டாம் என்பது அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்து: நயினார் நாகேந்திரன்

# அ.தி.மு.க: இது எங்க டயலாக் ஆச்சே!

twitter.com/manipmp

வீட்டில டேபிள் ஃபேனை நிறுத்திய பிறகு, ஏதோ விமானத்திலிருந்து இறங்கிய ஃபீல்!

twitter.com/iParisal

மொதல்லலாம் `கிரெடிட் கார்டு வேணுமா சார்'னு பேச்ச ஆரம்பிப்பாங்க. இப்ப என்னமோ நமக்கு ஏதோ அவங்க ஹெல்ப் பண்ணுற ரேஞ்சுக்கு திமிரோடதான் பேச்சே ஆரம்பிக்குது. வேண்டாம்னா சரின்னுகூட சொல்லாம பொசுக்குனு கட் வேற. டிரெய்னிங்ல மெத்தட் மாத்திட்டாங்க போல.

twitter.com/saravankavi

கிடைச்ச வாய்ப்பை எப்படிப் பயன்படுத்திக்கணும்றதுக்கு எடப்பாடி பழனிசாமியும் எப்படி இழந்துடக்கூடாதுன்றதுக்கு ஓ.பன்னீர்செல்வமும் நம் கண் முன்னே இருக்கும் உதாரணங்கள்.

twitter.com/Thaadikkaran

நாம செய்யுற விஷயத்தையும் ஒருத்தர் பாலோ பண்ணுறாங்கன்னா, அது ‘ஒன்வே’ல போறதுதான்யா..

twitter.com/Ntramesh_kpm

நாணயமாக இருப்பவர் சில்லறை விஷயங்களுக்கு ஆசைப்படுவதில்லை...