
1,000 ரூவா சட்டைய வெறும் 100 ரூவாய்க்கு வாங்கிட்டு வந்துட்டேன்னு ரொம்ப சந்தோஷப்பட்டேன். அப்புறம்தான் தெரிஞ்சுது, கடைக்காரன் 100 ரூவா சட்டையத்தான் இவ்வளவு நாள் 1,000 ரூவாய்க்கு வித்திருக்கான்னு..!
twitter.com/saravankavi
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்னமும் அவரது போட்டோவை சட்டைப் பாக்கெட்டில் வைக்காமல் ஜெயலலிதா போட்டோவையே வைத்துள்ள அ.தி.மு.க-வினர் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார்கள்.
twitter.com/Kozhiyaar
ஏற்கெனவே விபத்து நடந்த இடத்தைக் கடக்கும்பொழுது, வண்டி தன்னிச்சையாக வேகத்தைக் குறைத்துக்கொள்கிறது!
twitter.com/Greesedabba2
நடந்ததையெல்லாம் ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துருங்க...
# டேய், நான் கெட்ட கனவையே ரொம்ப நாள் ஞாபகம் வச்சிருப்பேன்டா!
twitter.com/Adhitakarikalan
‘‘கல்யாணம் எப்போ ஆகும்னு டாஸ் போட்டுப் பார்த்தேன்...''
‘‘தல விழுந்துச்சா? பூ விழுந்துச்சா?''
‘‘காசு போயி சாக்கடையில விழுந்துடுச்சு!''
twitter.com/star_nakshatra
மனதில் இல்லாத புன்னகையை முகத்தில் வரவழைப்பதென்பது எத்துணை சிரமமானது!

twitter.com/oorkkavalaan
1,000 ரூவா சட்டைய வெறும் 100 ரூவாய்க்கு வாங்கிட்டு வந்துட்டேன்னு ரொம்ப சந்தோஷப்பட்டேன். அப்புறம்தான் தெரிஞ்சுது, கடைக்காரன் 100 ரூவா சட்டையத்தான் இவ்வளவு நாள் 1,000 ரூவாய்க்கு வித்திருக்கான்னு..!
twitter.com/senthilswamy6
2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க தலைமையில்தான் கூட்டணி ஆட்சி - அன்புமணி ராமதாஸ்
# இந்த விஷயம் ஓவியா ஆர்மிக்குத் தெரியுமா ப்ரோ?!
twitter.com/shivaas_twitz
என்னைக்கு கல்யாண வீடுகள்ல சஃபாரி டிரஸ் தென்படாம இருக்கோ, அன்னைக்குதான் புதிய இந்தியா பிறந்ததா அர்த்தம்!
twitter.com/kumarfaculty
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும் என கருத்துகணிப்பில் தகவல்!
# ஐந்து வருடங்களில் காங்கிரஸ் 4 அல்லது 5 மாதங்களும், பி.ஜே.பி மீதமுள்ள ஆண்டுகளும் ஆட்சி செய்யும்.
twitter.com/itz_idhayavan
கூட்டணி குறித்து பா.ஜ.க தேசியத் தலைவர்களே முடிவு செய்வர்: எடப்பாடி பழனிசாமி
# அந்தம்மா இருந்தப்ப நீங்க எப்படியோ, அப்படித்தான் இப்ப அண்ணாமலைன்னு சொல்றீங்களா?!
facebook.com/mano.haran.737
சோழ நாடு சாதம் உடைத்து. ‘சோறு'ன்னு சொன்னாலே ஒரு மாதிரி பாக்குறானுங்க.
facebook.com/gokul.prasad.7370
எப்படியாவது பெரிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பைப் பெற்றுவிட வேண்டும். ரொம்பவே சுளுவான வேலையாக இருக்கும்போல. ஏதாவது கதாபாத்திரம் இரண்டு வரி வசனம் பேசினால் இன்னொரு கதைமாந்தர் ‘என்ன பேசற நீ?’ எனத் திருப்பிக் கேட்கிறார். தான் ஏற்கெனவே சொன்னதை வேறு சொற்களில் மாற்றிச் சொல்கிறார் முன்னவர். அதற்கு மறுமொழியாக, ‘என்ன பேசறோம்னு தெரிஞ்சுதான் பேசறியா நீ?’ எனக் கேட்கப்படுகிறது. இப்போது மறுபடியும் கூறியது கூறல். அதற்கான எதிர்வினை, ‘என்ன, நீ பாட்டுக்குப் பேசிட்டே போற?’
இப்படியே அரை மணி நேரத்திற்கு மாறி மாறிப் பேசிக்கொள்கிறார்கள். இடையிடையே அட்மாஸ்பியரில் ஒப்புக்கு நிற்கும் கதாபாத்திரங்களிடம் அதே விஷயத்தைப் பற்றித் தன்னிலை விளக்கமும் அளிக்கிறார்கள். கடைசியில், அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு, ‘இப்ப நான் என்ன பேசிட்டேன்னு கோவிச்சிட்டுப் போறான்?’ என்கிற அடங்கா வியப்புடன் வருந்துகிறார்கள். இதெல்லாம் டொமஸ்டிக் வயலன்ஸ்டா!
facebook.com/gkarlmax
சசிகலா போட்ட ஜெயலலிதா கெட்டப்பைவிட, எடப்பாடி போட்ட எம்ஜியார் கெட்டப்பு நல்லாருக்கய்யா!

facebook.com/balugates
என்னோட ICICI Bank அக்கவுன்டை சஸ்பெண்ட் பண்ணப் போறானுகளாம்... மெசேஜ் வந்துச்சு. அதுல ஒரு தொழில் ரகசியம் என்னன்னா, எனக்கு அங்க அக்கவுன்ட்டே இல்ல!
facebook.com/saravanakarthikeyanc
காஜு கத்லி என்ற இந்திச் சொல்லை மட்டும் ஆவின் ஏன் பயன்படுத்துகிறது எனக் கேட்கிறார்கள் சில அசடர்கள். அதிரசமும் எள்ளுருண்டையும் தவிர நாம் உண்ணும் இனிப்புகள் எல்லாமே வேற்று மொழிச் சொற்கள்தாம். லட்டு, ஜிலேபி, மைசூர்பாக், பால் கோவா, தேங்காய் பர்ஃபி, குலாப் ஜாமூன், ரசகுல்லா என எல்லாமும். அதெல்லாம் அப்படியே அதே பிறமொழிச் சொற்களாகவேதான் மக்கள் மனதில் பதிந்திருக்கின்றன. வியாபாரம் நடக்க அதே சொற்களையேதான் ஆவின் பயன்படுத்த முடியும்.
ஆவினின் வேலை மக்களுக்குத் தமிழ்ப் பாடம் எடுப்பதல்ல. பால் பாக்கெட்டில் இந்தியில் பெயர் இருக்க வேண்டும் என இந்தித் திணிப்பு வந்தபோது அதை எதிர்த்தது, முதுகெலும்பைக் காட்ட. இந்தியில் ஆவின் என்று எழுதுவதால் யாருக்கு என்ன லாபம்? ஆவினுக்கும் பயனில்லை, வாங்கும் மக்களுக்கும் இல்லை. அதனால் அர்த்தமற்ற அதை எதிர்த்தார்கள். மாறாக இனிப்புப் பெயரை தூய தமிழில் எழுதினால் பலருக்கும் புரியாது. வியாபாரம் அடி வாங்கும். அதனால் அதை ஆவின் செய்ய முடியாது. இந்தச் சிறிய தர்க்கம்கூடப் புரியாமல் இப்படித் தூக்கிக் கொண்டு வருகிறார்கள்.
twitter.com/kalpbagya33
மனைவி என்பவள் CBI-க்கு சமமானவள். கணவன் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் சிறு பொறியை வைத்துத் தோண்டித் துருவிக் கண்டுபிடித்து விடுவாள்...
twitter.com/Anvar_officia
சீரியலுக்கும் சினிமாவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை! தேவையான ஆணிகளைப் பிடுங்கினா அது சினிமா, தேவையில்லாத ஆணிகளைப் பிடுங்கினா அதுதான் சீரியல்!
facebook.com/M.Elangovan
கொஞ்சம் கூடுதலாகவே பூசினாற்போல உடல்வாகு, டி-ஷர்ட் ட்ராக் சூட், புளூ டூத் ஹெட்செட் சகிதம் இரு இளைஞர்கள், இரு யுவதிகள்... தினமும் காலையில் ஜிம்முக்குப் போய் வியர்க்க வியர்க்க வொர்க்அவுட் செய்த கையோடு சேகரண்ணன் கடைக்கு வருகிறார்கள். ஆளுக்கொரு அப்பம், உளுந்த வடை, ஒரு காபி பிறகு கொசுறாக ஒன்றிரண்டு கடலை மிட்டாய்களை மொக்கிவிட்டுப் போய் விடுகிறார்கள்.
ஒரு வகையில் சேகரண்ணனுக்கு வியாபாரம், அதிலெனக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், ‘இவய்ங்களுக்கு எந்தக் காலத்திலும் உடம்பு குறையப் போறதில்ல’ என்பதால் அந்த ஜிம் ஓனரின் வருமானத்தை நினைத்துதான் கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது.

facebook.com/padmarunkumar
மீ: யம்மா பஸ் ஸ்டாண்டு வந்துட்டேன். சீக்கிரம் வீட்டுக்கு வந்துருவேன்... செம பசி! எனக்கு 3 இட்லி இருந்தா போதும்...
மனைவி: 3 இட்லி போதுமா?
மீ: போதும்மா!
மனைவி: சரி, அப்ப உனக்கு 3 இட்லி மட்டும் வாங்கிக்கோ. எங்களுக்கு ரைஸும், புரோட்டாவும் வாங்கிட்டு வந்துரு...
twitter.com/LAKSHMANAN_KL
தமிழகத்தில் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை: அண்ணாமலை.
# குழப்பி விட்டதே நீங்கதானே அண்ணே?!
twitter.com/Suyanalavaathi
பொய் சொல்லும்போது, நல்லா யோசிக்கணும். ‘பொய் சொல்லலாமா, வேண்டாமா'ன்னு இல்ல. எப்படிச் சொன்னா மாட்ட மாட்டோம்னு யோசிக்கணும்!
twitter.com/saranya121289
உலகின் ஆகச்சிறந்த ஏமாளி, நான்தான் குடும்பத் தலைவன் என நம்பி வாழ்ந்துகொண்டிருப்பவன்...
twitter.com/manipmp
நாம் கவனிக்கத் தொடங்கிய பிறகு கேட்கும் எல்லா குக்கர் விசிலும் மூன்றாவது விசிலாகவே தெரியும்!