
மனைவிக்கும் அம்மாவுக்கும் ஒரே ஒரு விஷயத்தில்தான் ஒற்றுமை... அம்மா எந்த ப்ரெண்ட்ஸ்கூட சேரக்கூடாதுன்னு சொன்னாங்களோ, அதே ப்ரெண்ட்ஸ் பேரைத்தான் மனைவியும் சொல்லுவாங்க..!
facebook.com/sowmya.ragavan
ரம்மிக்காரன்வேற தினம் ‘உங்க அக்கவுன்ட்ல 5,000 போனஸ் சேர்ந்திருக்கு'ன்னு மெசேஜ் அனுப்பறான். இவ்ளோ பணத்த வச்சு என்னதான் பண்ணப் போறேனோ!
facebook.com/Ram Vasanth
ஜோசியர்: இந்த வருஷம் யோகம்தான். உங்க ராசிக்கு சுக்கிரன் உச்சத்துல இருக்கார். நீங்க இந்த லோகத்தையே ஆளுவிங்க...
90'ஸ் kid: இந்த லோகத்தை எந்த நாயாவது ஆண்டுட்டுப்போவட்டும். எனக்குக் கல்யாணம் ஆவுமா, ஆவாதா? அதச் சொல்லு!
facebook.com/Baskar M
ஒலித்துக்கொண்டிருந்த ஐந்து நிமிடப் பாடல் முன்னமே முடிந்துவிட்டது. அதில் ஒளிந்திருந்த ஐந்தேகால் அடி நினைவுதான் இன்னமும் அகலவில்லை.

facebook.com/ramanujam.govindan
காய்கறிக் கடையில் இன்று...
கத்திரிக்காய் இருக்கா?
சேனைக்கிழங்கு இருக்கா?
பொன்னாங்கண்ணி இருக்கா?
ஜீ பே இருக்கா?
ஜீ பே என்பது ஏதோ புதுவித வெளிநாட்டுக் காய் என ஆர்வமாகச் சில மைக்ரோ விநாடிகள் மனம் நினைத்துத் தேடியது.
twitter.com/itz_idhayavan
வயநாடு காங்கிரஸ் அலுவலகத்தில் டெலிபோன் மற்றும் இன்டர்நெட் இணைப்புகள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் நான் wordle விளையாடுறதுல எந்த பாதிப்பும் வந்துராதே?! - கார்த்திக் சிதம்பரம்
twitter.com/mohanramko
தேர்தல் அரசியலிலிருந்து நான் விலகுகிறேன்: ஹெச்.ராஜா
# நீங்க போயிட்டா, உங்களுக்கு பதில் யாரு பாஸ் தோற்பாங்க?!
twitter.com/Railganesan
அநியாயத்தை அமைதியாகச் செய்துவிட்டுப் போய்விடுகிறார்கள். நியாயத்தைத்தான் சத்தம்போட்டுக் கேட்க வேண்டி இருக்கிறது!
twitter.com/sasi_twittz
மனைவிக்கும் அம்மாவுக்கும் ஒரே ஒரு விஷயத்தில்தான் ஒற்றுமை... அம்மா எந்த ப்ரெண்ட்ஸ்கூட சேரக்கூடாதுன்னு சொன்னாங்களோ, அதே ப்ரெண்ட்ஸ் பேரைத்தான் மனைவியும் சொல்லுவாங்க..!
twitter.com/kumarfaculty
தற்போது பெண்கள் கையை நம்பிக் கொடுப்பது மெஹந்தி போடுபவர்களிடம்தான்!
twitter.com/Greesedabba2
கம்பெனில இருந்து ஒருத்தன் ரிசைன் பண்ணிட்டுப் போயிட்டான்னா, அவன் டீம்ல உள்ளவங்க அடுத்த ஆறு மாசத்துக்கு அவங்க வேலையில என்ன தப்பு நடந்தாலும் அந்த ரிசைன் பண்ணிட்டுப் போனவன் மேல பழியைப் போட்டுத் தப்பிச்சுக்கலாம்ன்றது ஒரு ஐதிகம்...

twitter.com/saravankavi
ஏப்ரல் 16-ம் தேதி அ.தி.மு.க அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என அ.தி.மு.க அறிவிப்பு!
# ஏன்யா, அவசரம்னு சொல்லிட்டு அவ்ளோ நாள் கழிச்சா நடத்துவிங்க..?
facebook.com/shankaruppusamy
‘வடநாட்டவர் பண்டிகைக்கு ஏன் கறிக்கடைக்கு லீவு விடறீங்க’ என்று ஒரு பதிவு பார்த்தேன். எந்த ஒரு பண்டிகைக்கும் கறிக்கடைகளையும் மதுக்கடைகளையும் மூடுவது தேவையற்ற ஆணி. கடை திறந்திருந்தால் வாங்கிவிடுவான் என்றால் அவனை அப்படி ஒழுங்குபடுத்தி அந்தப் பண்டிகையைக் கொண்டாட வைத்து என்ன ஆகப் போகிறது! அதே நேரம் மகாவீரர் ஜெயந்தியை வடநாட்டுப் பண்டிகை என்று சொல்வது ஆகப் பெரிய வரலாற்றுப் பிழை. சொல்லப்போனால் தீபாவளி, பிள்ளையார் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி இவற்றைவிடவும் மகாவீரர் ஜெயந்தி இந்த மண்ணுக்கு மிகவும் நெருக்கமானது. சமணம் கோலோச்சிய காலம் என்பது சைவம், வைணவத்தைவிடப் பழைமையானது. தமிழ் மொழிக்கும் வாழ்வியலுக்கும் எந்த ஒரு மதத்தையும்விட பெரிய பங்களிப்பை சமணம் ஆற்றியிருக்கிறது. சிலப்பதிகாரம் ஒன்று மட்டுமே போதுமானது. எதிர்க்கிறேன் பேர்வழியென்று சமணம் என்ற சிறந்த மதத்தைத் தூக்கி வடக்கே பார்சல் செய்து விடாதீர்கள்.
twitter.com/parveenyunus
2026-ல் பா.ம.க தலைமையில்தான் கூட்டணி ஆட்சி - அன்புமணி ராமதாஸ்
# இந்த ஜோக்கைக் கேட்டு அதிர்ந்து சிரிச்சதுல மீட்டிங் மேடையே சரிந்து விழுந்துடுச்சு!