
டூ வீலரை மெயின் faultக்காக சர்வீஸ் விட்டா, அதைத் தவிர மற்ற எல்லாத்தையும் சரி செய்து கொடுப்பவர்தான் மெக்கானிக்...
facebook.com/sen.balan.1
ஆளுநருக்கு பதில் chatGPT பயன்படுத்தலாம். நேரமும் செலவும் மிச்சம். வேலையும் தெளிவாக நடக்கும்.
twitter.com/drkvm
நான் அரசியலில் இருந்து வெளியே வந்தேன்: ரஜினிகாந்த்
# இவரு எப்போ உள்ளே போனாரு!
facebook.com/diviyavenkat.501
இதுக்கு முன்னாடி பல தடவை அரசியலில் இருந்து வெளிய வந்திருக்கேன். ஆனா, கொரோனா வந்தபிறகு அரசியலை விட்டு விலகினது இதான் முதல் தடவை.
twitter.com/itz_idhayavan
ஜனநாயகத்தைக் கொல்ல பா.ஜ.க முயற்சி செய்கிறது: காங்கிரஸ் தலைவர் கார்கே
# 8 வருஷத்துக்கு முன்னாடி புதைச்ச இடம் அங்க இருக்கு?!
twitter.com/saravankavi
தி.மு.க அரசு அமைந்து 24 மாதங்கள் ஆகிறது. அதனை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்: அண்ணாமலை
# பின்னாடி ஒருத்தர் வந்துகிட்டிருக்கார்... அவர் எட்டு வருஷமா ஆட்சியில் இருக்காரு...
twitter.com/Ntramesh_kpm
அ.தி.மு.க தலைமை பிடிக்கலனா பி.ஜே.பி போறதும், பி.ஜே.பி தலைமை பிடிக்கலனா அ.தி.மு.க போறதும், டீச்சர் பிடிக்காதவன் பெஞ்ச் மாறி அதே கிளாஸ்ல உட்காருவது போலத்தான்...
twitter.com/saranya121289
டூ வீலரை மெயின் faultக்காக சர்வீஸ் விட்டா, அதைத் தவிர மற்ற எல்லாத்தையும் சரி செய்து கொடுப்பவர்தான் மெக்கானிக்...
twitter.com/Greesedabba2
ஏதாவது தண்ட மீட்டிங்ல மாட்டிக்கிட்டு போன் வந்தா எடுத்துப் பேசற மாதிரி எஸ்கேப் ஆயிடலாம்னு பார்த்தா, லோன் வேணுமான்னு கேட்டுகூட ஒரு பய போன் பண்ண மாட்டான். இதுவே பஸ்ல கூட்ட நெரிசல்ல ஒரு கைல பேக், இன்னொரு கைல டிக்கெட் வாங்கக் காசுன்னு தொங்கிட்டிருக்கும்போது ஆயிரத்தெட்டு போன் வரும்.

twitter.com/Itz_Araviind
எதையும் எளிதாகக் கிழித்துவிட முடியும் என்று நம்பிக்கொண்டு இருக்கும்போதுதான், குளிக்கும்போது ஷாம்பு பாக்கெட்டைக்கூட கிழிக்க முடியாமல் போவது!
twitter.com/pithamakal
நாம எங்கன உட்காரணும் என்பதையே ஷேர் ஆட்டோ டிரைவர்தான் முடிவு பண்ணுறாரு..!
twitter.com/Greesedabba2
நான்கு குடும்ப உறுப்பினர் உள்ள வீட்டிற்கு மட்டுமே தெரியும், கோழிக்கு இரண்டு கால்கள் மட்டுமே இருப்பதனால் ஏற்படும் வலி.
twitter.com/Kirachand4
ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது... விட்டுட்டால் ஆழத்தைப் பற்றி யோசிக்கக்கூடாது!
twitter.com/Anvar_officia
பரீட்சைக்குப் படிச்சிட்டுப் போறவன்தான் பரபரப்பாவும் பதற்றமாவும் இருக்கான். எப்பவும் போல படிக்காமப் போறவன் ரிலாக்ஸா இருக்கான். ஏன்னா, அவன் எழுதுறதுதான் பதில்!
twitter.com/Suyanalavaathi
மேனேஜர் அட்வைஸ் பண்ணும்போது, எதுத்துப் பேசாம தலைய தலைய ஆட்டுறவனுக்குத் தலைவலி வருதோ இல்லையோ, புரொமோஷன் கண்டிப்பா வருது!

twitter.com/manipmp
சுயமதிப்பீட்டின் எக்ஸ்ட்ரீம் வெர்ஷன்தான் தற்பெருமை!
twitter.com/Shivaas_twitz
நல்லவேளை, smileyன்னு ஒண்ணு கண்டுபிடிச்சாங்க. இல்லேன்னா சிரிப்புன்னா என்னங்கிறதயே மறந்து போயிருப்பேன்!
twitter.com/mohanramko
‘‘என்னடா இது, பேங்க்ல வேலை செய்யுறேன்னு சொன்ன, இப்ப பார்த்தா பெட்ரோல் பங்க்ல வேலை செய்ற..?''
‘‘ஆமாம்ணே, இதுவும் வங்கிதான்.. எரிபொருள் வங்கிணே!''
twitter.com/amuduarattai
₹8,480 கோடி ரூபாயில் 118 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள பெங்களூரு - மைசூரு விரைவுச் சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி: செய்தி.
# நாட்டுக்கா... இல்ல, டோல்கேட்காரங்களுக்கான்னு சரியா சொல்லுங்க ஜி!
twitter.com/Suyanalavaathi
டீக்கடையில நிக்கிற கூட்டம் அப்படியே ஜூஸ் கடைப் பக்கம் ஷிஃப்ட் ஆனா, வெயில் காலம் வந்துருச்சுன்னு அர்த்தம்!
twitter.com/kumarfaculty
பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியில் நாங்கள் தெளிவாக உள்ளோம்: பொன்.ராதாகிருஷ்ணன்
# தொண்டர்கள்தான் குழம்பிப்போய் உள்ளார்கள்.
twitter.com/LAKSHMANAN_KL
தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும்: அண்ணாமலை
# கூடவே வாட்ச் பில்லையும் வெளியிடுவீங்களா தலைவரே..?!
twitter.com/athisa
இந்திய சினிமான்னா இந்திப் படம் மட்டுமில்ல, இந்தியாங்கறது வெறும் இந்தி பேசறவங்க வாழ்ற ஊரு இல்லன்னு உலகத்துக்கு சொன்னதுக்கே ட்ரிபிள் ஆர் டீமை நிறைய பாராட்டலாம்.
twitter.com/Shivaas_twitz
என்ன பெரிய Elephant Whisperers... கும்கி தெரியுமா? - விஜய் டி.வி fan.
facebook.com/sen.balan.1
பாரம்பரிய முறைப்படி அம்மியில் மசாலா அரைக்க வேண்டும், மண்சட்டியில் சமைக்க வேண்டும் என்று வீர வசனம் பேசுபவர்கள், விறகு அடுப்பில் சமைக்க வேண்டும் எனச் சொல்வதில்லை. ஏனென்றால் அப்பார்ட்மென்ட்டில் அடித்துத் துரத்திவிடுவார்கள்.
twitter.com/Kirachand4
முதல்வருக்கு நான் இந்தி சொல்லித் தரவா? - குஷ்பு
# கட்சில வேலை எதுவும் இல்லாம இந்தி டியூஷன் ஆரம்பிச்சிட்டாரோ?!
twitter.com/selvachidambara
இந்தக் காலத்துப் பிள்ளைகள் சாப்பிடும்போது செல்லைத் தொட்டுக்கொள்கிறார்கள்...
facebook.com/shyjinabraham152
நீண்ட நாள்களுக்குப் பிறகு சவுதியில் உடன் பணிபுரிந்து இந்தி பேசும் நண்பர்களிடம் பேசினேன். எடுத்த எடுப்பிலே ‘உங்க ஊர்ல எங்க ஊர்க்காரங்களை அடிக்குறாங்களா?' என்றார்கள்.
‘‘அப்படி ஒன்றும் இங்கு இல்லை. அது வீணான வதந்தி அதைப் பரப்பிய உங்கள் ஊர் செய்தியாளர் பிரசாந்த் மீது வழக்கும் பதியப்பட்டது'' என விளக்கினேன். ஒரு பொய் எந்த அளவிற்கு எந்த எல்லை வரை பரவி வருகிறது, அது எந்த அளவிற்கு பயத்தையும், வெறுப்புணர்வும் உருவாக்கிவிடுகிறது என்பதை நினைக்கும்போதுதான் பயமாக இருக்கிறது.
facebook.com/saravanakarthikeyanc
தோற்றத்தால் நம்மைக் கவர்ந்தவர்களின் வேலையை மதிப்பிடும்போது அளவுகோலில் சமரசம் செய்யக்கூடாது. வேலையால் நம்மைக் கவர்ந்தவர்களின் தோற்றத்தை மதிப்பிடும்போது அளவுகோலில் சமரசம் செய்யக்கூடாது.
facebook.com/nchokkan
‘சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றால் சும்மா இரு' என்பதற்கு இணையான இன்னோர் அறிவுரை எங்குமில்லை.

facebook.com/shankaruppusamy
கடைசியில யானைங்க நடிச்சுதான் நமக்கு ஆஸ்கர் வாங்கித் தர வேண்டியிருக்கு... அப்பவே சொன்னார் ராம நாராயணன்.
twitter.com/oorkkavalaan
பயணம் என்பது வேறொன்றுமில்லை... மனிதர்களைப் படிப்பது!
twitter.com/saranya121289
என் hubby-க்கு `தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ' பாட்டு ரொம்பப் பிடிக்கும். ஒரு நாள் நான் பாடிக் காட்டினேன். அதுக்கு அப்பறம் அந்தப் பாட்டு டி.வி-ல ஓடுனாகூட சேனல் மாத்திடுறாங்க...
twitter.com/Pasi_Edukuthu
எல்லாத்தையும் ஆன்லைன்ல வாங்கணும்னு நினைக்காதீங்க. அது உங்களை இன்னும் சோம்பேறியாக்கும். நீங்க சாதாரணமா ஒரு கடைக்குப் போயி ஒரு அத்தியாவசியப் பொருளைத் தேடி வாங்கும்போது 200 calories you can burn per day. யோசிங்க...
twitter.com/Thaadikkaran
யார்ரா நீ, அச்சீவ்மென்ட் என்னான்னு கேட்டா, இன்ஸ்டால ரீல்ஸ் போட்டு 50k லைக் வாங்கியிருக்கேன்னு ரெஸ்யூம்ல எழுதி வச்சிருக்கே..!

facebook.com/gokul.prasad.7370
சொமாட்டோ, ஸ்விகி சேர்ப்பனையாளர்களுக்கு
(delivery boy) நேர அழுத்தம் இருக்கும். உரிய நேரத்திற்குள் உணவைச் சேர்ப்பதைப் பொறுத்து அவர்களுக்கு ஊக்கத் தொகையோ வெகுமதியோ கிடைக்கலாம். சரியாகத் தெரியவில்லை. இதன் காரணமாக அதிவேகத்தில் வண்டியை முடுக்குகிறார்கள், விபத்துக்கான நிகழ்தகவைப் பெருக்குகிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் கரிசனமும் உண்டு.
சொமாட்டோவில் பத்து கி.மீ சுற்றளவிலுள்ள கடைகளில் இருந்து வீட்டுக்கு உணவைக் கொண்டுவருவதற்கான சேர்ப்பனைக் கட்டணம் கிட்டத்தட்ட நூறு ரூபாயைத் தொடுகிறது. உணவின் விலையே இருநூறுக்குள்தான் இருக்கும். அதற்கு வரி விதிப்பதோடு மட்டுமன்றி பொட்டலம் கட்டுவதற்குத் தனி விலை, பின்னர் அதற்கும் ஜி.எஸ்.டி என வசூலிக்கிறார்கள். 200 ரூபாய் மதிப்புள்ள உணவின் விலை முந்நூற்று சொச்சத்தில் போய் நிற்கும். இந்த அக்கிரமத்தை யாரும் பொருட்படுத்துவதில்லை.
அதனால் ஒவ்வொரு முறையும் நூறு ரூபாய் தண்டம் கட்டுவதற்குப் பதிலாக ஒரே தடவை 399 ரூ. கட்டி சொமாட்டோ கோல்டு உறுப்பினரானேன். அதில் பத்து கி.மீ-க்குள் உள்ள கடைகளில் ஆர்டர் செய்தால் சேர்ப்பனைக் கட்டணம் இருக்காது. ஒருவேளை உணவு வருவதற்குத் தாமதாகிவிட்டால் நூறு ரூபாய் மதிப்புள்ள இலவசக் கூப்பனை வழங்கி அதனை ஈடுசெய்வார்கள்.
எங்கள் பகுதியில் உணவைச் சேர்ப்பிக்கும்படி பணிப்பித்தால் எப்படியும் தாமதமாகிவிடும். எந்தத் திசையிலிருக்கும் கடையில் ஆர்டர் செய்தாலும் நிலைமை மாறப்போவதில்லை. ஏனெனில் எல்லாத் திக்குகளிலும் பாலம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாகக் குறுகலான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத நாள் மிகவும் அரிது. அதிலும் மாலை ஆறு மணிக்கு மேல் படுமோசமாக இருக்கும்.
இதைக் கணித்து உச்சக்கட்ட நெரிசல் ஏற்படும் சமயம் பார்த்து ஆர்டர் செய்வேன். அனுமன் மாதிரி வண்டியைத் தூக்கிக்கொண்டு பறந்து வந்தால் ஒழிய குறித்த நேரத்திற்கு வந்துசேர முடியாது. எனக்கு நூறு ரூபாய் கொடுத்தே ஆகவேண்டும். கோல்டு உறுப்பினரான பின் பத்து முறை ஆர்டர் செய்து பத்துத் தடவையும் கூப்பன் பெற்றுவிட்டேன். என் வீட்டருகே அரசாங்கம் பாலம் கட்டுவதால் எனக்குக் கிடைத்த ஒரே லாபம் இதுதான். இன்னும் இரண்டு மாத காலம் பாக்கியிருக்கிறது. இதுவரை டெலிவரி கட்டணத்தில் இழந்ததை சொமாட்டோ நிறுவனத்திடம் இப்படி வசூலித்தால்தான் உண்டு.