
காலம்தான் ஆற்றவேண்டுமென்று காத்திருக்கும் காயங்களுக்கு வார்த்தைகளினால் ஆறுதல் விரயம்.
facebook.com/poovannan.ganapathy
பணி, பணி நேரம் என்பதில் ஊழியர் நலன் முன்னிலைப்படும்போது அங்கு மருத்துவரீதியான ஆய்வு முடிவுகள்தான் மிக மிக முக்கியம். தரப்படும் ஊதியமோ, அதனால் வரக்கூடிய அதிக பணிகளோ அல்ல! இத்தனை எம்.எல் ரத்தம்தான் அதிகபட்சமாக எடுக்க முடியும், மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ரத்த தானம் செய்யக்கூடாது என்பதை மாற்றுவதற்கு ஒப்பானது, 12 மணி நேரப் பணி எனும் முடிவு.
facebook.com/gokul.prasad.7370
‘நீங்கள் சந்தித்துப் பேசிய மிகப் பிரபலமான ஆள் யார்?’ எனக் கேட்கப்பட்டிருக்கும் பதிவின் பின்னூட்டங்களில் பலரும் ‘இறைவன்’ எனப் பதிலளித்திருக்கிறார்கள். நாள்தோறும் உரையாடுகிறார்களாம்.
நீ பேசினடா, அவர் பதிலுக்குப் பேசினாரா?

facebook.com/saravanakarthikeyanc
ஐ.டி ஊழியர்கள் be like: என்ன, இதுவரைக்கும் வேலை நேரம் 8 மணி நேரமா இருந்துச்சா!
facebook.com/ramanujam.govindan
‘‘அவள் முழு சுய விருப்பத்துடன் மத அடையாளங்களை அணிகிறாள்.''
‘‘ஓ! அவளுக்கு விருப்பம் இல்லன்னா...''
‘‘நாலு மிதி மிதிச்சு விரும்ப வைத்துவிடுவோம்!''
(இதுதான் எல்லா மதவாதிகளின் டெக்னிக்கும்!)
facebook.com/Subathra L
தன்னைத்தானே ரசித்துக்கொள்ள நாம் துணைக்கு வைத்துக்கொள்கிற ஓர் ஆள் என்பதன்றி காதல் என்பது வேறென்ன!
facebook.com/AuthorPara
நன்கு அலசி ஆராய்ந்துவிட்டேன். ட்விட்டரில் இரண்டே இரண்டு பேர்தான் முழு நேர ஊழியர்கள். ஒருவர் இலான் மஸ்க். இன்னொருவர் காயத்ரி ரகுராம்.
facebook.com/boganR
முன்பெல்லாம் ‘ஜப்பானைப் பார்' என்று படம் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்கு முன்பு ‘சோவியத்தைப் பார்' என்றார்கள். சோவியத் உடைந்துவிட்டது. ஜப்பான் மீண்டும் குட்டியாகிவிட்டது. இப்போது ‘சீனாவைப் பார்' என்று கிளம்பியிருக்கிறார்கள்.
twitter.com/Araathu_
ஆண்டுக்கு 58 லட்சம் சம்பளம் வாங்குறேன். ஆனாலும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை: IT guy
# டேய்... நீ வருஷம் 58 லட்சம் சம்பளம் வாங்குறேன்னு சொன்னதக் கேட்டு எங்க நிம்மதி போயிருச்சுடா.
twitter.com/manipmp
கனவின் பிந்தைய கணத்தில் ஒரு கைவந்து தொடும்... அதுதான் ‘எழுந்திருப்பா'ன்னு நம்மை எழுப்பி விடும்!
twitter.com/Anvar_Officia
மொட்டை மாடில பறவைகளுக்குத் தண்ணீர் வைக்கப் போகலாம்னு பார்த்தால், மொட்டை மாடிக்குப் போறதுக்கே நாம தண்ணீர் குடிச்சிட்டுதான் போகணும்னு அப்புறம்தான் தெரிஞ்சுது!

twitter.com/Thaadikkaran
அப்பாவின் மறைவிற்குப் பிறகு வரும் பண்டிகை. அம்மாவிற்கு சேலை, தங்கைக்கு அவளுக்குப் பிடித்தமான உடை, தம்பிக்கு வேட்டி சட்டையென எடுத்துக் கொடுத்து, ‘உனக்கும் எடுத்துக்கொள்' என்றபோது ‘எடுத்துக்கலாம்' என்று சொல்லி முழுதாய் அப்பாவாக மாறியிருந்தான் அவன்.
twitter.com/ItsElonMuskk
இன்டர்வியூவில்: நீங்க 12 மணி நேரம் வேலை பார்க்கணும்னு கட்டாயமில்லை...
ரொம்ப நன்றிங்க சார்!
ஆனா நாங்க 12 மணி நேரம் வேலை பார்க்குறவங்களுக்கு மட்டும்தான் வேலை குடுக்குறோம்...
twitter.com/iVenpu:
இந்த வாரம் வந்த 12 மணி நேர வேலை, நீர்நிலை குறித்த ஒன்று, மண்டபம்/மைதானம் பார் இந்த சட்டங்கள போட்டதும், மகளிர் கட்டணமில்லா பயணம், பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவுன்னு தொலைநோக்குப் பார்வையோட சட்டங்கள போட்டதும் ஒரே அரசா?
twitter.com/Greesedabba2
பொண்டாட்டி அவங்க அம்மா வீட்டுக்குப் போகணும்னா, முதல்ல அவ இல்லாம நாம கஷ்டப்படுவோம்னு அவளை நம்ப வச்சு ஆசையைத் தூண்டணும்!
twitter.com/saravankavi
‘எல்லாம் தெரியும்' என்று இ.பி.எஸ் போல குழப்பத்தோடு இருக்காதே... ‘எதுவும் தெரியாது' என்று ஓ.பி.எஸ் போல தெளிவோடு இரு...
twitter.com/h_umarfarook
ஓ.பி.எஸ் அணி இனி அ.தி.மு.க சின்னம் பொறித்த கரைவேட்டிகூட கட்டக்கூடாது: விஜயபாஸ்கர்
# நல்லவேளை, வேட்டியே கட்டக்கூடாதுன்னு சொல்லலை!
twitter.com/itz_idhayavan
பதற்றம் நீடிப்பதால் எல்லையில் விழிப்புடன் இருக்க வேண்டும்: ராஜ்நாத் சிங் அறிவுறுத்தல்
# எல்லையில் பதற்றம் வர்றதும் கர்நாடகாவில் தேர்தல் வர்றதும் ஒரே சமயமா?!
twitter.com/Sabarish_twittz
உலக மக்கள் தொகையில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம்: ஐ.நா ஆய்வுத் தகவல்
# டேய் கொரோனா, நீ வந்த... லாக்டௌன் போட்டாங்க. இப்ப எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்க பார்த்தியா?
twitter.com/thoatta
‘‘உலகத்துல யார் சார் பெரிய முட்டாள்?''
‘‘தோனி கீப்பிங் நிக்கிறப்ப இறங்கி அடிக்க வர்றவன்தான்...''
twitter.com/iam_lolitta
எல்லா மதத்துலயும் பெண்ணடிமைத்தனம் இருக்குங்றத ஒத்துக்கிட்டுதான் ஆகணும். யாரோட மதத்துல அதிகமா இருக்கு, கம்மியா இருக்குன்னு வேணா சண்டை போடலாம். அதை விட்டு ‘எங்க மதம் சுத்தமான மதம், பெண்கள முற்போக்கா ஆக்கின மதம்'னு முட்டுக் குடுத்தா, ‘சரி, வண்டில ஏறுங்க, பேசிட்டே போவோம்'னு டீல் பண்ணணும்.

twitter.com/amuduarattai
வெயில் அதிகமாகிவிட்டதால் மக்கள் ஏ.சி வாங்கி மாட்டினர். இப்போ ஏ.சி-கள் அதிகமாகிவிட்டதால், வெயில் இன்னும் அதிகமாகிவிட்டது.
twitter.com/rams_offl
தோணுற எடத்துலல்லாம் ஒன்னுக்கும் ரெண்டுக்கும் போற நமக்கு மேற்குலகோட ஒப்பீடெல்லாம் தேவையா!
twitter.com/umageetham
காலம்தான் ஆற்றவேண்டுமென்று காத்திருக்கும் காயங்களுக்கு வார்த்தைகளினால் ஆறுதல் விரயம்.
facebook.com/brindha.sethu.1
இப்போது மட்டும் என்ன? காலை 5 மணிக்கு எழுந்தால் சமையல் செய்வது, பாத்திரம் கழுவுவது, வீடு கூட்டுவது தொடங்கி எல்லாம் முடித்து அலுவலகம் சென்று, திரும்ப வீடு வந்து இரவு சமையல் முடித்து மறுநாள் சமையலுக்கும் தயார் செய்து தூங்குவதற்கு 10 மணி ஆகிவிடுகிறது - இது எட்டு மணி நேர வேலைக்கு.
12 மணி நேர வேலை என்றால், அலுவலகத்திலேயே காலை மாலை இரவு உணவு தரப்படும் என்றால், சமூக சமையல் கூடம் உருவாக்கப்படும் என்றால், வேலை நடுவே இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை ஓய்வு அளிக்கப்படும் என்றால், குழந்தைகளுக்கான பள்ளிக்கூடங்கள் மற்றும் டே கேர் போன்றவற்றையும் அலுவலகம் சார்ந்து அரசே தரும் என்றால் (அங்கும் அவர்களுக்கான உணவு தரப்பட்டுவிடும் என்றால், கல்வி இலவசம் என்றால்), தொழிலாளர்களின் உடல்நல, மன நலத்திற்கான பாதுகாப்பை அரசு வழங்கும் என்றால் (மருத்துவம் இலவசம் என்றால்), அலுவலகம் அருகிலேயே வீடுகளையும் பள்ளிக்கூடங்களையும் கட்டித் தரும் என்றால்... ஒரு அழகான சிறைச்சாலையை மனம் கற்பனை செய்கிறது.