
சலூன்லதான் நல்லா தூக்கம் வருது. பேசாம அந்த அண்ணன்கிட்ட மாச வாடகை பேசி, தினமும் ரெண்டு மூணு மணி நேரம் தூங்கிட்டு வரலாம்னு இருக்கேன்!
twitter.com/manipmp
ஆண்கள் தங்களை ஷை டைப் என்றும், பெண்கள் தங்களை துறுதுறு டைப் என்றும் அறிமுகம் செய்து கொள்வதில் அலாதி இன்பம் காண்கின்றனர்.
twitter.com/Thaadikkaran
ATM கொள்ளைக்கு கோச்சிங் சென்டர் நடத்திய பீகாரைச் சேர்ந்த நபருக்கு வலைவீச்சு!
# எங்க வீட்டு பீரோவை இன்னும் சத்தம் இல்லாம திறக்கத் தெரியாதுடா...
twitter.com/LAKSHMANAN_KL
தி.மு.க-வுக்கு எதிராக வியூகம் அமைக்க அண்ணாமலைக்கு அமித் ஷா அறிவுரை: செய்தி.
# அவர் அ.தி.மு.க-வுக்கு எதிரா வியூகம் அமைக்கிறதுலதானே பிஸியா இருக்காரு..!
twitter.com/Cat_offi
Conway: 100 அடிக்கலாம்னு பாத்தா, கூட்டத்துல Dhoni-க்கு ஸ்ட்ரைக் தரச் சொல்லிக் கத்துறாங்க!
Jaddu: உனக்காச்சும் ஸ்ட்ரைக் குடுக்க சொல்றானுங்க, என்னைய அவுட் ஆகச் சொல்றாங்கடா!

twitter.com/saravankavi
இயற்கை வளங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்: மோடி
# அப்பதான் விற்பனை செய்ய முடியும்ங்களா?
twitter.com/Greesedabba2
ராகவா லாரன்ஸ்: ஆதித்த கரிகாலன் பேய் வந்து பழிவாங்குற மாதிரி ஸ்கிரிப்ட் எழுதி PS-3 எடுக்கலாமா..?
twitter.com/ItsElonmuskk
உங்க ஆட்சில செத்த ராணுவ வீரர்கள் எவ்ளோன்னு தெரியுமா? ~ தெரியாது
கொரோனால செத்துப்போனவங்க எவ்ளோன்னு தெரியுமா? ~ தெரியாது
அட்லீஸ்ட், பொருளாதார வளர்ச்சில இந்தியா எந்த இடம்னாவது தெரியுமா? ~ தெரியாது.
வேற என்ன டேட்டாதான் இருக்கு? ~ காங்கிரஸ் இதுவரை 91 முறை என்ன அவமானப்படுத்தியிருக்கு.
twitter.com/kozhiyaar
‘ராவணன்’ல இருந்து ‘பொன்னியின் செல்வன்’ வரை விக்ரம் சாவுக்கு, ஐஸ்வர்யா ராய்தான் காரணமா இருக்கு!
twitter.com/kozhiyaar
சலூன்லதான் நல்லா தூக்கம் வருது. பேசாம அந்த அண்ணன்கிட்ட மாச வாடகை பேசி, தினமும் ரெண்டு மூணு மணி நேரம் தூங்கிட்டு வரலாம்னு இருக்கேன்!

facebook.com/ramanujam.govindan
உலகையே மாற்றிய மாபெரும் சிந்தனையாளர்களுள் சார்லஸ் டார்வின் தலையானவர். உயிர்களின் தோற்றத்தை அறிந்துகொள்வது மட்டுமல்ல, பரிணாமவியல் இயற்கையின் நியதிகளைப் புரிந்து கொண்டு இயங்கவும் உதவுகிறது. மருத்துவ ரீதியாக ஒரு உறுப்பின் அமைப்பும் செயல்பாடும் ஏன் இப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள டார்வினிய கோட்பாடுகளே உதவும். உதாரணமாக ஒட்டகச்சிவிங்கி கழுத்து நீண்டது அது உயரமான கிளைகளை எட்டிப் பறிக்க என்பது தெரியும். ஒட்டகச்சிவிங்கியின் ரத்த அழுத்தம் 300-க்கும் மேல் இருக்கும். காரணம், அத்தனை பெரிய கழுத்தைக் கடந்து மூளைக்கு ரத்தத்தை அனுப்ப வேண்டுமே, அதுதான்.
உளவியலிலும் ஒரு மனிதன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்பதைப் புரிந்துகொள்வதில் பரிணாமவியல் கோட்பாடுகள் உதவுகின்றன. ஏன் கோபப்படுகிறான், ஏன் இசையை ரசிக்கிறான், ஏன் சில வண்ணங்களை விரும்புகிறான், ஏன் கசப்பை வெறுக்கிறான் என எல்லாவற்றின் பின்னாலும் பரிணாமவியல் காரணம் இருக்கும்.
நான் மதிக்கும் ஆசான்கள், பெரும் சிந்தனையாளர்கள் சிக்மண்ட் ஃப்ராய்டு, வி.எஸ்.ராமச்சந்திரன், யுவால் ஹராரி, ரிச்சர்ட் டாக்கின்ஸ் போன்ற பலருக்கும் ஆசான் டார்வின்தான். அவர் ஆசானுக்கெல்லாம் ஆசான். அவரது கோட்பாடுகள் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படக் கூடாது.
facebook.com/saravanakarthikeyanc
நல்லவேளை, உதயநிதி / சபரீசன் புகழ் மாலை பாடாதிருந்தால் ‘வெளியான ஆடியோ ஃபேக்' என்று பி.டி.ஆர் சொல்வது உண்மை என்றே நம்பியிருப்போம். Brilliant clue.
facebook.com/yuvathamizh
நான் ஸ்கூல் படிக்கிறப்போ எல்லாம் இறுதிப் பரீட்சைக்கு முன்னாடி ஒரு போஸ்ட் கார்டு வாங்கி, அதுலே To அட்ரஸில் நம்ம அட்ரஸை எழுதிக் கொடுக்கச் சொல்லுவாங்க. அப்போ போஸ்ட் கார்டு 15 பைசா. மே மாச மத்தியிலே போஸ்ட்மேன் வரவுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்துக் கிடப்போம். போஸ்ட்மேன் நம்ம கிட்டே கார்டை கொடுக்க மாட்டாரு. அம்மா கிட்டேதான் கொடுப்பாரு. அப்போதான் அவருக்கு ரெண்டு ரூபாய் அன்பளிப்பு கிடைக்கும். ‘தேர்ச்சி’ன்னு ஒரே ஒரு வார்த்தைதான் அதுல இருக்கும்.
இன்னைக்குக் காலையிலே குழந்தைகளோட ஸ்கூலுக்குப் போனேன். ஒரு கவர் நீட்டி, குழந்தைகளைப் பார்த்து ‘ஆல் த பெஸ்ட்' சொன்னாங்க. கவரைப் பிரிச்சிப் பார்த்தா ‘நாற்பதாயிரம் கட்டவும்’னு டீட்டெயிலா எழுதி இருந்திச்சி. ஒரு மூலையிலே சின்னதா promoted to next standard-னும் குறிப்பிட்டிருந்தாங்க.

twitter.com/GOV_INDA_RAJ
எல்லாரும் நல்லா இருக்கணும்னு நெனைக்கறவன் நாசமாப்போறான், தான் மட்டும் நல்லா இருக்கணும்னு ஆசைப்படுறவன்தான் இப்போ எல்லாம் நல்லா இருக்கான்.
twitter.com/koomuttai0077
மக்களின் வாழ்வாதார தேவைகள் எதுவும் அவர்களின் வீட்டிற்கு வர வழியில்லை... அத்தனை குற்ற நடவடிக்கைகளுக்கும் ஆதாரமாய் இருக்கும் சாராயம் பட்டனைத் தட்டினால் வருது!
twitter.com/itz_idhayavan
எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது: அ.தி.மு.க சண்முகநாதன்
# தலைக்கு தில்ல பாத்தியா, பொதுச்செயலாளரையே கலாய்க்குறாரு?!
twitter.com/Thaadikkaran
காட்டுல இருக்குற சிங்கம் புலி எல்லாம் சிட்டிக்குள்ள வந்து, சிட்டில இருக்குற நாய் பூனை எல்லாம் காட்டுக்குப் போனா எப்படி இருக்கும்னு கேட்டாங்க.
நம்ம வாயி சும்மா இருக்காம, ‘கரப்பான் பூச்சி பார்த்து பயப்படுற நமக்கு இதெல்லாம் தேவைதானா'ன்னு கேட்டேன். பேசி நாலு நாள் ஆச்சு!
twitter.com/Sabarish_twittz
பேருக்குதான் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள். ஆனால் வாரத்தில் மூணு நாள் வருமானத்தை முழுங்கிடுது...
twitter.com/___b_k___
பஸ் ஸ்டாண்ட்ல யாராச்சும் ‘பஸ்ஸுக்குக் காசு இல்லை, வேலைக்கு வந்தேன், விட்டுட்டுப் போய்ட்டாங்க. முடிஞ்சத குடுத்து ஹெல்ப் பண்ணுறிங்களா'ன்னு கேக்கும்போது, அவன் அதை வாங்கிட்டு சரக்கடிக்கத்தான் போறான்னு தெரிஞ்சும் அவன் கைல ஒரு இருபது ரூபாய குடுக்குறதும் சந்தோஷம்தான் தருது!
twitter.com/sharjahh_
‘‘ராசி பலன்ல என்ன போட்ருக்கு?’’
‘‘விடாமுயற்சி...''
‘‘அப்போ அதையே டைட்டிலா போட்டுக்க!''

twitter.com/saranya121289
ஜென் மனநிலை என்பது வேறொன்றும் இல்லை, மனைவி எது சொன்னாலும் ‘நீ சொல்வது போலவே செய்துவிடலாம்' என்று சொல்லும் கணவனின் மனநிலையே...
facebook.com/NaveenKumarN85
நான் இதனைப் பலமுறை உணர்ந்திருக்கிறேன். ஆபீஸ் வேலையோ, பர்சனல் வேலையோ... கையில் ஒரே ஒரு டாஸ்க்தான் முடிக்க வேண்டியிருக்கிறது எனில், அதில் ஓவர் டென்ஷன் எடுத்துக்கொள்வோம். அதனுள் என்னென்ன சரி பார்க்க வேண்டியிருக்கிறது, எங்கே எல்லாம் சொதப்ப வாய்ப்பிருக்கிறது என அதற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்துத் தேவைக்கு அதிகமாக எனர்ஜியைச் செலவழிப்போம்.
அதுவே கைவசம் 4-5 வேலைகள் பாக்கி இருக்கிறது என்றால், ஜென் நிலைக்குப் போய்விடுவோம். அதே வேலையை போகிற போக்கில் டீல் செய்வோம். சொல்லப்போனால் தனியே முழு கவனத்தைக் கொட்டிச் செய்ததைவிட இம்முறையில் அதனைச் சிறப்பாகச் செய்ய முடியும். நம்முடைய டிசைன் அப்படி.
இதனை ஏன் இப்பொழுது சொல்கிறேன் என்றால், ‘ஒன்றிரண்டு குழந்தைகளை வளர்க்கவே நாய் படாத பாடாக இருக்கிறதே... அந்தக் காலத்தில் எப்படி?' என அடிக்கடி தோன்றும். ஒன்றிரண்டு என்பதால்தான் மிகவும் சிரமமாகத் தெரிகிறது. வதவதவென பத்து, பன்னிரண்டு இருந்தால் அது சர்வ சாதாரணமாக இருந்திருக்கும் எனக் கீழடி அகழ்வாராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
facebook.com/ramanujam.govindan
ஓரிரு பக்கங்கள் இருந்தால்தான் அதன் பெயர் Bio Data. பத்து, பதினைந்து பக்கங்களுக்கு மேலெல்லாம் போனால் அதுக்குப் பெயர் Auto Biography.
facebook.com/revathy.ravikanth
வாழ்க்கையின் பாடுகளைச் சிந்தித்தபடி நம்முடன் புழங்கும் பாடுகளை இடது கையால் ஒதுக்கித் தள்ளுவதைப் பற்றியும் நினைத்தபடி மாடியில் காலை நடை பயின்றுகொண்டிருந்த வேளையிலே வரலாற்றில் நம் பெயரை பதிப்பது எப்படி என்ற எண்ணமும் ஒரு பக்கம் ஓட, ‘இடியாப்பம் மூணு பத்து ரூபாய்’ என்ற குரலால் அனைத்தும் நீர்க்குமிழியாய் உடைந்திட, பத்துக்கு மூணுன்னா அம்பதுக்கு எவ்வளவு என்ற கணக்குடன் ரப்பர் செருப்பில் படியிறங்கத் தொடங்கினார் ஒருவர்.
facebook.com/kavitha.bharathy
அரசாங்கத்தின் வருமானத்தில் கணிசமான பங்களிப்பை வழங்குவது மதுபானக்கடைகள்தாம். ஆனால் அதில் கலப்படம், அரசு நடத்தும் பார்களின் கேவலமான சுகாதாரக்கேடுகள், தரமற்ற உணவு குறித்து பன்னெடுங்காலமாக புகார் இருந்துவருகிறது. இதில் தலையாய முறைகேடு, பில் தராமல் அடக்க விலைக்குமேல் வசூலிக்கப்படுவது. இப்படி கள்ளத்தனமாக வசூலாகும் தொகை நாலாயிரம் கோடிகளுக்கு மேல். இந்தத் திருட்டை எந்த அரசும் தடுக்கவில்லை. காரணமொன்றும் ரகசியமானதன்று!
இப்போது இதைத் தடுக்கும் சிறு நடவடிக்கையாக தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. இதற்காகத்தான் தி.மு.க. எதிர்ப்பாளர்கள், கூலிங் இல்லாத பீர் போலப் பொங்கினார்கள். அவர்கள் புரிந்துகொண்டது போல இந்த இயந்திரம் பொது இடத்திலோ, 24 மணி நேரமும் இயங்குவது போலவோ அமைக்கப்படவில்லை. அரசு நடத்தும் எலைட் மதுபானக்கடைகளுக்குள் சோதனை முயற்சியாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இதனால் சட்டவிரோதமாக அடக்கவிலைக்கு மேல் விற்கும் திருட்டு தடுக்கப்படும். எனவே எல்லாக்கடைகளிலும் பரவலாக இதுபோன்ற இயந்திரங்கள் நிறுவப்படுவது வரவேற்கத்தக்கது. மேலும், விற்கப்படும் மதுபானத்தின் தரம் மற்றும் அரசு மதுவிடுதிகளின் சுகாதாரக்கேடுகள் குறித்த புகார்களும் முழுமையாகக் களையப்பட வேண்டும்.
பி.கு: நான் முழு மதுவிலக்கை ஆதரிக்கிறேன்.