Published:Updated:

ஐஸ் பக்கெட், கிகியைத் தொடர்ந்து ட்விட்டரில் ஃபேமஸ் ஆகி வரும் #BottleCapChallenge

Jason Statham
Jason Statham ( Twitter )

ட்விட்டரில் சில சேலஞ்ச்கள் எப்போதுமே டிரெண்டாகி வரும். அந்த வரிசையில் தற்போது `பாட்டில் கேப் சேலஞ்ச்'தான் டிரெண்ட்!

`ஐஸ் பக்கெட் சேலஞ்ச்', `கிகி சேலஞ்ச்' என ட்விட்டரில் ஏதாவது ஒன்று டிரெண்டாகிக்கொண்டே இருக்கும். இந்த வரிசையில் தற்போது `பாட்டில் கேப் சேலஞ்ச்'தான் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. ஹாலிவுட் நடிகரான ஜேஸன் ஸ்டாத்தம்தான் இதைத் தற்போது கொளுத்திப் போட்டுள்ளார்.

சமூக வலைதளங்கள் நினைத்தால் சர்வ சதாரண மனிதர்களையும், நிகழ்வுகளையும் ஓவர் நைட்டில் ஒபாமா ஆக்கிவிடலாம். அப்படி ஃபேஸ்புக் கமென்டில் ஆரம்பித்ததுதான் `ப்ரே ஃபார் நேசமணி'. இந்த ஹேஷ்டேக் காட்டுத் தீ போல் பரவி உலகம் முழுதும் பேசப்பட்டது. அதேபோல் வீடியோக்களாக வெளியிடும் சில சேலஞ்ச்களும் ட்விட்டரில் ஃபேமஸ். `ஐஸ் பக்கெட் சேலஞ்ச்' எனும் ஒன்றுதான் முதலில் ஆரம்பித்தது. ஒரு பக்கெட்டில் நிறைய தண்ணீரையும் ஐஸ்கட்டிகளையும் நிரப்பி தனக்குத்தானே ஊற்றிக்கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து கிகி சேலஞ்ச் எனும் ஒன்று ஃபேமஸ் ஆனது. கார் ஓட்டிக்கொண்டு இருக்கும்போதே திடீரென இறங்கி வைரலான கிகி பாடலுக்கு நடனமாட வேண்டும். இதனால் சில விபத்துகள் ஏற்பட்டதால் போலீஸ் சிலரை கைதுகூட செய்தனர்.

இந்த வரிசையில் தற்போது `பாட்டில் கேப் சேலஞ்ச்'தான் ட்விட்டரில் படு வேகமாக டிரெண்டாகி வருகிறது. `ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ்' புகழ் ஜேஸன் ஸ்டாத்தம்தான் இதைத் தொடங்கி வைத்தார். அதாவது ஒரு பாட்டிலின் மூடியை குங்ஃபூ ஸ்டைலில் காலில் உதைத்துத் திறக்க வேண்டும். இதுதான் இந்த சேலஞ்ச். ஜேஸன் ஸ்டாத்தம் இதை முதலில் ஆரம்பித்து வீடியோ வெளியிட, தொடர்ந்து பல பிரபலங்களும், பொதுமக்களும், குங்ஃபூ நிபுணர்களும் இதைச் செய்து வீடியோ வெளியிடுகின்றனர்.

பாலிவுட் ஸ்டார் அக்‌ஷய் குமாரும் இந்த சேலஞ்சை செய்து வீடியோ பதிவேற்ற இந்தியர்கள் மத்தியிலும் இது வைரலாகி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு