Published:Updated:

"தலைமுடி அழகின் அடையாளம் அல்ல, இனி அது புரட்சியின் அடையாளம்!"- நடிகை ஊர்வசி ரவுடேலா

ஊர்வசி ரவுடேலா
News
ஊர்வசி ரவுடேலா

ஊர்வசி ரவுடேலா ஈரானில் நடக்கும் இஸ்லாமியப் பெண்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் தனது தலைமுடியை வெட்டிக் கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

Published:Updated:

"தலைமுடி அழகின் அடையாளம் அல்ல, இனி அது புரட்சியின் அடையாளம்!"- நடிகை ஊர்வசி ரவுடேலா

ஊர்வசி ரவுடேலா ஈரானில் நடக்கும் இஸ்லாமியப் பெண்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் தனது தலைமுடியை வெட்டிக் கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

ஊர்வசி ரவுடேலா
News
ஊர்வசி ரவுடேலா

ஈரானில் இஸ்லாமியப் பெண்கள் அரசின் புதிய ஆடைக்கட்டுபாட்டுக்கு எதிராக அதிக அளவில் போராடி வருகின்றனர். குறிப்பாக, ஹிஜாப் சரியாக அணியவில்லை என போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட மஹ்சா அமினி (Mahsa Amini) என்ற இளம் பெண் போலீஸ் காவலிலேயே இறந்தது இந்தப் போராட்டத்திற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த அரசின் புதிய ஆடைக்கட்டுபாட்டுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வண்ணம் இஸ்லாமியப் பெண்கள் முதலில் ஹிஜாப்பை எரித்தும், தங்களின் தலைமுடியை வெட்டியும் போராடினர். இதையடுத்து உலகம் முழுவதும் பல பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டி இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது மாடல் மற்றும் நடிகையான ஊர்வசி ரவுடேலா ஈரானில் நடக்கும் இஸ்லாமியப் பெண்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் தனது முடியை வெட்டிக் கொள்ளும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

மேலும், "ஈரானிய காவல்துறையால் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 19 வயது இளம் பெண்ணான மஹ்சா அமினியின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஈரானிய இஸ்லாமியப் பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து ஈரான் அரசுக்கு எதிராக உலகம் முழுவதும் பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் என் தலை முடியை வெட்டிக் கொண்டேன்" என்று கூறியிருந்தார்.

ஊர்வசி
ஊர்வசி

மேலும், "பெண்களுக்கு மதிப்புக் கொடுங்கள். தலைமுடி பெண்களின் அழகின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இனி அது பெண்களின் புரட்சிக்கான உலகளாவிய சின்னமாகப் பார்க்கப்படும். பெண்கள் தங்கள் தலைமுடியை பொது இடத்தில் வைத்து வெட்டுவதன் மூலம், அவர்கள் இந்தச் சமூகத்தில் தங்களின் அழகு பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதையும், அவர்கள் எப்படி உடை உடுத்த வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் அல்லது வாழ வேண்டும் என்பது குறித்து யாரையும் முடிவு செய்ய அனுமதிக்க மாட்டார்கள் என்பதையும் காட்டுகிறார்கள். பெண்கள் ஒன்றிணைந்து, ஒரு பெண்ணின் பிரச்னையை ஒட்டுமொத்தப் பெண்களின் பிரச்னையாகக் கருதினால், பெண்ணியம் ஒரு புதிய பரிமாணத்தைக் காணும்" என்று பதிவிட்டுள்ளார்.