Published:Updated:

ஆஸ்கர் குழுவில் தமிழ் சினிமா கலைஞர்!

ஆஸ்கர்
ஆஸ்கர்

சர்வதேச அளவில் உயரிய சினிமா விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது

சர்வதேச அளவில் உயரிய சினிமா விருதாகக் கருதப்படுவது ஹாலிவுட்டின் ஆஸ்கர் விருதுகள். வருடாவருடம் ஹாலிவுட் படங்கள் , அயல்மொழி படம், ஆவணப்படம், வி.எஃப்.எக்ஸ் குறும்படம் உள்ளிட்ட பல கேட்டகரியில் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகளுக்கான தேர்வுப் பணிகளை, ஆஸ்கர் விருதுகளை நடத்தும் `அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் அண்டு ஆர்ட்ஸ்' உறுப்பினர்களே வாக்குப் பதிவின் மூலம் மேற்கொள்வார்கள்.

ஶ்ரீனிவாஸ் மோகன்
ஶ்ரீனிவாஸ் மோகன்

கிட்டத்தட்ட 5,800 உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த உறுப்பினர் பட்டியலில் இந்த வருடத்திற்காக 59 உலக நாடுகளிலிருந்து 842 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் இந்தியாவிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழ் சினிமாவின் வி.எஃப்.எக்ஸ் ஜாம்பவான்களில் ஒருவரான ஶ்ரீநிவாஸ் மோகன் ஆஸ்கர் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Vikatan

2.0 மற்றும் பாகுபலியின் முதல் பாகத்தில் வேலை செய்ததையடுத்து அவருக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது.

ஷங்கர்
ஷங்கர்

சிவாஜி, மேஜிக் மேஜிக் 3டி, எந்திரன் மற்றும் பாகுபலி படங்களுக்கு தேசிய விருதும் பெற்றுள்ளார்.

இவரை தவிர, இந்திய சினிமா துறையிலிருந்து ஷெர்ரி பர்தா, அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், அனுபம் கேர், லன்ச் பாக்ஸ் கதாசிரியர் ரிதேஷ் பத்ரா உள்ளிட்டோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு