Published:Updated:

``சொத்து விவரம்லாம் அனுப்பி லவ் சொல்றாங்க!" - `நாயகி' வித்யா பிரதீப்

வித்யா பிரதீப்
வித்யா பிரதீப்

`ஒரு பக்கம் இவ்வளவு நல்ல விஷயங்கள் நடந்திருந்தாலும் இன்னொரு பக்கம் சில நெகட்டிவ் விஷயங்களும் நடந்திருக்கு.’

ஒரே சமயத்தில் வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் `தடம்’ பதித்து வருகிறார் வித்யா பிரதீப்.  திரைத்துறை மட்டுமன்றி ஒரு தனியார் கண் மருத்துவமனையில் ஜூனியர் சயின்டிஸ்டாகவும் இயங்கி வருகிறார். சன் டிவியின் ஹிட் சீரியல் `நாயகி’ வாயிலாகத் தமிழ் குடும்பங்களின் ஃபேவரைட் நாயகியானவர், நிஜத்திலும் அழகான தமிழ் உச்சரிப்பு, நிதானமான பேச்சு என நாயகி ஆனந்தியாக நம்மைக் கவர்கிறார். 2019 எப்படிக் கடந்தது என்பதை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

வித்யா பிரதீப்
வித்யா பிரதீப்

``வாழ்க்கையில மிகப் பெரிய திருப்பம் ஏற்பட்டது இந்த வருஷம்தான். பெர்சனலாவும் புரொஃபஷ்னலாவும் நிறைய பாசிட்டிவான விஷயங்கள் நடந்தது. `நாயகி' சீரியல் வாய்ப்பு கிடைச்சதால தமிழ் மக்கள்கிட்ட நேரடியா ரீச் ஆக முடிஞ்சது. என்னை எங்கே பார்த்தாலும் பெண்கள் ஓடிவந்து நலம் விசாரிக்கிறாங்க."

`` 'தடம்’ படம் ரிலீஸ் ஆனதும் இந்த வருஷம்தான். இந்தப் படத்துல கேரக்டர் ரோல்தான் பண்ணியிருந்தேன். இப்போ 5 படங்கள்ல கமிட்டாகி நடிச்சுகிட்டிருக்கேன். அதுல ரெண்டு படத்துல ஹீரோயினா நடிச்சுகிட்டிருக்கேன். நான் எதிர்பார்க்காத நிறைய நல்ல விஷயங்கள் நடந்தது இந்த வருஷம்தான்.’’

வித்யா பிரதீப்
வித்யா பிரதீப்

``ஒரு பக்கம் இவ்வளவு நல்ல விஷயங்கள் நடந்திருந்தாலும் இன்னொரு பக்கம் சில நெகட்டிவ் விஷயங்களும் நடந்திருக்கு. நம்ம வாழ்க்கையில நடக்குற விஷயங்களுக்கு எப்படி ரியாக்ட் பண்றோம்ங்கிறதைப் பொறுத்துதான் சோகமும் சந்தோஷமும் அமையும். நான் எதுக்குமே பெருசா ரியாக்ட் பண்ண மாட்டேன். மனதளவுல பாதிக்கப்பட்டாலும், பக்குவமா கடந்து போயிடுவேன். புத்தகங்கள் படிப்பேன். தாழ்வுமனப்பான்மை ஏற்படும்போது, என் வாழ்க்கையில நடந்த பாசிட்டிவ் விஷயங்களை நினைச்சு எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்குவேன்.’’

``என் வாழ்க்கை போகுற திசையில நானும் பயணிக்கிறேன். இந்த ஆண்டு நான் அதிகம் அழுதது கல்லி பாய் (gully boy) படம் பார்த்துதான். அந்தப் படம் என்னை ரொம்ப பாதிச்சிடுச்சு."

வித்யா பிரதீப்
வித்யா பிரதீப்

``குடிசைப் பகுதியிலிருந்து, ஒரு ஹிப்ஹாப் பாடகனாகத் துடிக்கும் ஒரு தெருப் பாடகனின் கதையை நேர்த்தியா திரையில காட்டியிருந்தாங்க. அதைப் பார்க்கும்போது ஏதோ ஒருவிதத்துல என் தொழில் ரீதியான வாழ்க்கையை, அந்தப் படத்தோடு தொடர்புபடுத்திக்கிட்டேன். என்னையறிமாமல் பல மணி நேரம் நினைச்சு நினைச்சு அழுதேன். அதே மாதிரி ஜோக்கர் படமும் என்னை அதிகம் பாதிச்ச படம்.’’

``எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு 2019–ல நிறைய லவ் புரொபோசல்ஸ் வந்து குவிஞ்சது. நாயகி ஃபேன்ஸ் பலர் என் மீது உள்ள அன்பில் இணையத்திலும் நேரிலும் ஐ லவ் யூ சொன்னாங்க. பலர் சீரியசஸாவே ஐ லவ் யூ சொன்னாங்க.’’

வித்யா பிரதீப்
வித்யா பிரதீப்

``ஒருத்தர் மட்டும் கொஞ்சம் வித்தியாசமா அவருடைய மொத்த சொத்து விவரம், குடும்பத்தினர் விவரங்களை எல்லாம் எனக்கு அனுப்பி வெச்சு, என்னைக் கல்யாணம் பண்ணிக்கங்க. உங்களுக்கு உண்மையா இருப்பேன்னு சொன்னார். என்னைத் தீவிரமா லவ் பண்றதாவும் சொன்னார். சிலர் பெரிய கடிதங்கள் எழுதி அனுப்புவாங்க. உங்களை நல்லா பார்த்துப்பேன், ப்ளீஸ் ஓகே சொல்லுங்னு இன்ஸ்டாவுல மெசஜ் அனுப்புவாங்க. ’’

வித்யா பிரதீப்
வித்யா பிரதீப்

``2019 போலவே 2020–ம் மகிழ்ச்சியான ஆண்டா இருக்கும்னு நம்புறேன். நாயகி ஆனந்தி கதாபாத்திரம் மாதிரி கம்பீரமா வாழ என்ன செய்யணும்னு நிறைய பொண்ணுங்க, இன்ஸ்டாவுல கேட்பாங்க. முதலில் நம்மை நாமே நேசிக்கணும். தன்னம்பிக்கை இருந்தாலே கம்பீரமாக வாழ முடியும்.’’ என்றார்  மெல்லிய புன்னகையுடன்.

அடுத்த கட்டுரைக்கு