
இணையத்தில் வைரலாகும் தோனி மகளின் மலையாளப் பாடல்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகள் பாடல் பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தோனியின் இரண்டு வயது மகள் ஜிவாவுக்கு இணையத்தில் ஃபேன்ஸ் அதிகம். ஜிவா உடனான புகைப்படங்களை தோனி பகிரும் போதெல்லாம் லைக்ஸ் அள்ளும். தற்போது ஜிவா அழகிய மழைலைக் குரலில் பாடும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி நெட்டிசன்களை உருக வைத்துள்ளது. அந்த வீடியோவில் மலையாள கிருஷ்ணா பக்தி பாடலைப் பாடுகிறார் ஜிவா. அவரின் மலையாள உச்சரிப்பு அற்புதம்! Dont Miss it..