Election bannerElection banner
Published:Updated:

``எல்லாமே சினிமாவுக்காக பண்ணின வீடியோஸ்தான்!" - நெகட்டிவாக வைரலான 'மியூசிக்கலி' சித்ரா!

``எல்லாமே சினிமாவுக்காக பண்ணின வீடியோஸ்தான்!" - நெகட்டிவாக வைரலான 'மியூசிக்கலி' சித்ரா!
``எல்லாமே சினிமாவுக்காக பண்ணின வீடியோஸ்தான்!" - நெகட்டிவாக வைரலான 'மியூசிக்கலி' சித்ரா!

மியூசிக்கலி ஆப்ஸைத் தெரிந்தவர்களுக்கு நம்ம சித்ராவைத் தெரியாமல் இருக்கவே இருக்காது. ரணகள வீடியோவுக்காகவே வைரலானவர். ஆளை மடக்கி பேட்டி எடுத்தோம்...

மியூசிக்கலி ஆப்பைத் தெரிந்தவர்களுக்கு நம்ம சித்ராவைத் தெரியாமல் இருக்கவே இருக்காது. சமூகவலைதளங்களில் ரணகள வீடியோவுக்காகவே வைரலானவர். ஆளை மடக்கி பேட்டி எடுத்தோம்...

``சின்ன வயசுல இருந்தே சினிமா ஆர்வம் எனக்கு இருக்கு... ஆனா, அதுக்காக என்ன பண்ணனும்னு தெரியல. அதனாலயே இந்த மியூசிக்கலி அப்ளிகேஷன எனக்கு ஏத்தமாதிரி மாத்திக்கிட்டேன்... இப்போ மலேசியா சிங்கப்பூர் என எனக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்காங்கா. நிஜமாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு'' என்கிறார் சமீபத்திய `மியூசிக்கலி' வைரல் சித்ரா.

``சித்ரா -சிறுகுறிப்பு வரைய முடியுமா..?''

``அக்மார்க் பாண்டிச்சேரி நான். ப்ளஸ் டூ வரை முடிச்சேன். பியூட்டிசியன் கோர்ஸ் டெய்லரிங் முடிச்சிட்டு இங்க கார்மென்ட்ஸ் பிசினஸ் பண்ணிட்டு இருந்தேன். அப்போதான் என் பையன் மியூசிக்கலில வீடியோ அப்லோடு பண்ணுனதைப் பார்த்து எனக்கும் அந்த ஆசை வந்துச்சு. எனக்கு நடிகை காஜல் அகர்வால் ரொம்பப் பிடிக்கும். அதான் பேருக்குப் பின்னால அவுங்க பேரையும் சேர்த்து முதல் வீடியோ ஒண்ணு பிச்சைக்கார வேஷம் போட்டு பண்ணுனேன். செம லைக்ஸ் செம்ம வியூவ்னு வாட்ஸ்அப், ஃபேஸ்புக்னு பயங்கர வைரல் ஆச்சு.. அப்போ முடிவு பண்ணுனேன் நமக்கான இடம் இதுதான்னு..!''

``பப்ளிச்சிட்டிக்காகதான்  இப்போ வாரவாரம் யாராச்சும் கிளம்பிடுறாங்கன்னு உங்க வீடியோ பார்த்து பேசிக்குறாங்களே?''

``சார், ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க... எதிரின்னு ஒருத்தன் இருந்தாதான் நாம வளர முடியும். நாம வளரும்போதுதான் நம்மோட எதிரி யாரு, துரோகி யாருன்னு கண்டுபிடிக்க முடியும். உண்மைய சொல்லணும்னா எனக்கு இருக்க சினிமா ஆசை, என் வீடியோ பார்த்து பொறாமைப்பட்டவங்க எல்லாம் இப்படி கிளப்பிவிடுறதுதான் இது!

இன்னும் சொல்லணும்னா மே மாசம்தான் முதல் வீடியோவே அப்லோடு பண்ணுனேன். இப்போ பத்து லட்சம் ஃபாலோயர்ஸ், பாண்டிச்சேரில எங்க என்னைப் பார்த்தாலும் நின்னு செல்ஃபி எடுக்கணும்னு கேட்குறாங்க என்னோட ஃபேன்ஸ்! இப்படி இந்த உயரத்துக்கு வளர்ந்ததுக்கு காரணமே என்னோட எதிரிகள்னுகூட சொல்லலாம்!''

``உங்க போன் கால் எல்லாமே கூட உங்க பி.ஏ தான் எடுக்குறாங்க, இது மியூசிக்கலி வந்த பிறகா?''

``ஆமா, என்னோட வீடியோ பார்த்து, நிறைய பேரு என்னோட ஃபேன்ஸ் ஆகிட்டேன்னு சொல்லுவாங்க. அப்படி வந்தவங்கதான் லதாங்கிற தோழி. முதல் தடவ பேசும்போது நம்மள திட்டத்தான் போறாங்கன்னு நினைச்சேன். என்னோட தீவிர ஃபேன்னு சொல்லி அறிமுகமானாங்க. என்கூடவே இருந்துடுறேன்னு சொன்னாங்க. சரி வாங்கன்னு கூப்பிட்டுக்கிட்டேன்.''

``உங்க ரோல்மாடல் யாரு..? உங்க ஆசை என்ன?''

``எனக்கு ரஜினி சார் ரொம்பப் பிடிக்கும். அவரோட படங்கள்ல அவரு சொல்ற கருத்துதான் நான் இன்னைக்கும் கடைப்பிடிக்கிறேன். ஆசை அப்டின்னா... எப்படியாச்சும் சினிமாவுல ஒரு சீனாச்சும் நடிச்சுரணும். அதுவும் லாரன்ஸ் சார் படத்துல அவருக்கு அம்மாவா, கோவை சரளா மேடம் அளவுக்கு நடிக்கணும்னு ஆசை இருக்கு.''

``உங்களப் பத்தி வர்ற நெகடிவ் கமென்ட்ஸ் எல்லாம் பார்ப்பீங்களா?''

`` ஆமா, நிறைய பேரு கிண்டல் பண்ணி கமென்ட் போட்ருக்காங்க... பதில் வீடியோவுல தூக்கு மாட்டிக்கிறது, விஷம் குடிக்கிற மாதிரி எல்லாம் பண்ணுவாங்க. இத நினைச்சு ஆரம்ப காலத்துல பாதி தூக்கத்துல எந்திருச்சு எல்லாம் அழுதுருக்கேன். அப்புறம் யோசிச்சுப் பார்த்தேன். நம்மளவிட சாதிச்சு எவ்ளோ பெரிய உயரங்கள் போனவங்க எல்லாம் பார்க்காத அவமானமா? அவங்களோட வெச்சுப் பார்த்தோம்னா, இதெல்லாம் ஒரு தூசு மாதிரியான மேட்டர்னு எனக்கு நானே தைரியம் கொடுத்துக்கிட்டேன். வீட்டுலயும் எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவா இருக்குறாங்க!''

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு