Published:Updated:

'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிளைக் கொண்டாடிய ராணுவ வீரர்கள் - வைரலாகும் வீடியோ

'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிளைக் கொண்டாடிய ராணுவ வீரர்கள் - வைரலாகும் வீடியோ
'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிளைக் கொண்டாடிய ராணுவ வீரர்கள் - வைரலாகும் வீடியோ

'விஸ்வாசம்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை இந்திய ராணுவத்தினர் கேக் வெட்டி கொண்டாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இயக்குநர் சிவா, நடிகர் அஜித் நான்காவது முறையாக இணைந்துள்ள படம், 'விஸ்வாசம்'. இருவரின் காம்பினேஷனில் தொடர்ந்து படங்கள் வெளிவருவதால், அஜித் ரசிகர்கள் சற்று கடுப்பில் இருந்தாலும் விஸ்வாசம் படத்தின் அப்டேட்டுகளுக்காகத் தவம் கிடக்கின்றனர். விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்தப் படத்தின்மூலம் இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். ரூபன் எடிட் செய்கிறார். சத்ய ஜோதி தயாரிக்கும் இந்தப் படத்தில் தம்பி ராமையா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றது. இதையடுத்து, நேற்று 'விஸ்வாசம்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டது.  ‘அடிச்சி தூக்கு’ என்ற அந்தப் பாடல், அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இந்தப் பாடல் வெளியான 15 மணி நேரத்தில் 40 லட்சம் பேர் யூடியூபில் கண்டு ரசித்துள்ளனர். சமூக வலைதளங்களில் இந்தப் பாடல்தான் ட்ரெண்டிங்கில் உள்ளது. 

இதற்கிடையில், 'அடிச்சி தூக்கு' பாடலின் ரிலீஸை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர், இந்திய ராணுவத்தினர். 
இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி அஜித் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.