Published:Updated:

நித்திய நந்திதா முதல் கோபி வரை... 2018-ன் வைரல் காணொளிகள்!

நித்திய நந்திதா முதல் கோபி வரை... 2018-ன் வைரல் காணொளிகள்!
நித்திய நந்திதா முதல் கோபி வரை... 2018-ன் வைரல் காணொளிகள்!

நித்திய நந்திதா முதல் கோபி வரை... 2018-ன் வைரல் காணொளிகள்!

2018, சிலருக்கு ரொம்பவே பரபரப்பாக நகர்ந்திருக்கும்; பலருக்கு, `இன்னும் முடியலையா!' எனத் தோன்றியிருக்கும். விதவிதமான புதிய யூடியூப் பக்கங்கள், சன்நெக்ஸ்ட், ஹாட்ஸ்டார் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள், Netflix, Vimeo போன்ற பயன்பாட்டுக் கருவிகள் என தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, வேற லெவலுக்குச் சென்றுகொண்டிருக்கிறது. இதனால் வீட்டில் இருந்தபடியே ரிலாக்ஸ் செய்வதற்கு ஆப்ஷன்ஸ் அதிகமாகியுள்ளன. அந்த வகையில், 2018-ல் தமிழ்நாட்டு மக்கள் அதிகம் பார்க்கப்பட்ட டாப் வைரல் காணொலிகளை ரிவைண்ட் செய்துபார்க்கலாம் வாங்க...

நித்யானந்தாவின் சிஷ்யை:

2018-ம் ஆண்டை, `மங்கலகரமான' இடத்திலிருந்து, `தேன் சொட்டும்!' வார்த்தைகளோடு தொடக்கிவைத்த பெருமை நித்தியானந்தாவின் சிஷ்யை நந்திதாவையே சேரும். `ஆண்டாளைப் பற்றித் தவறாகப் பேசிவிட்டார்!' என்று கவிஞர் வைரமுத்துவை எதிர்த்து, பல இந்து அமைப்புகள் போராடினர்.

நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்த நித்திய நந்திதா என்கிற பெண், வைரமுத்துவைப் பாரபட்சமல்லாமல் திட்டி சமூக வலைதளங்களில் அப்போது வெளியிட்ட காணொலி, அசல் பிரச்னையைவிட வைரலானது. அதற்கேற்ப, இந்த ஆண்டின் இறுதியில் திரைப்படப் பாடகி சின்மயி மூலம் #MeToo விவகாரத்தில் வைரமுத்து சிக்கிக்கொண்டது மேலும் சர்ச்சையைக் கிளப்பியது..

பிரியா வாரியர் `விங்க்':

ஒரு சிறிய கண்சிமிட்டல்தான், டோட்டல் இந்தியா க்ளோஸ்! ஓமர் லூலூ இயக்கத்தில் ரோஷன், பிரியா வாரியர், ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்த படம் `ஒரு அதார் லவ்'. இந்தப் படத்தில், `மாணிக்க மலராயி பூவி...' எனும் பாடல், இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. பாடல் வெளியான சில மணி நேரத்தில் உலகளவில் செம ரீச். காரணம், அதில் நடித்திருக்கும் பிரியா வாரியரின் க்யூட் கண்சிமிட்டல்தான். ஒரே நாளில் பல லட்சம் ரசிகர்களைச் சம்பாதித்த பிரியாதான் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியப் பெண் பிரபலங்களில் டாப். அந்தப் பாடலும் கண்சிமிட்டலும் ட்ரெண்டானாலும், சில மாதங்களுக்குப் பிறகு அதே படத்தில் `Freak Penne...' என்ற பாடல் வெளியானபோது, `லைக்ஸை'விட `டிஸ்லைக்ஸ்' அதிகம் பெற்று அதுவும் ஒருவகையில் ட்ரெண்டானது. எந்தப் பக்கம் போனாலும் கேட் போடுறாங்கப்பா மொமன்ட்!

ஹெச்.ராஜா:

திரைப்பட நடிகர்களைவிட, சமீபகாலமாக சில அரசியல்வாதிகளின் செயல்களே மீம் க்ரியேட்டர்களுக்கு பெரும்விருந்தாக அமைந்தது. அதில் தனக்கான இடத்தை விட்டுக்கொடுக்காமல், எப்போதும் டாப் இடத்தில் இருப்பவர் ஹெச்.ராஜா. ஜெயக்குமார், தமிழிசை போன்றோர் இவருக்கு டஃப் கொடுத்தாலும், உயர் நீதிமன்றத்தையும் காவல் துறையையும் தரக்குறைவாகப் பேசி, காணொலியில் கன்டென்ட் கொடுத்து முதல் இடத்திலேயே இருக்கிறார். இந்தக் காணொலி வைரலானதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பும் கேட்டிருக்கிறார். வைரல் ராஜா!

விஜய் ரசிகனின் பிரசாரம்:

விஜய் படம் என்றாலே பிரச்னைகளுக்கும் குழப்பங்களுக்கும் பஞ்சமில்லை. அந்த வகையில், இந்த வருடம் A.R.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த `சர்கார்' திரைப்படமும், திருடப்பட்டக் கதை உள்ளிட்ட பல தடைகளைத் தாண்டித்தான் வெளியானது. அரசியல் பின்புலம் பேசும் கதையாச்சே! அதனால், படம் வெளிவந்த பிறகும் சர்ச்சைகள் குறைந்தபாடில்லை. வழக்கம்போல பேனர்களைக் கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சில `ஸ்லீப்பர் செல்ஸ்'. இந்த நேரத்தில் பள்ளிச் சிறுவன் ஒருவன், தான் தீவிர விஜய் ரசிகன் என்று சொல்லி, தன்னால் முடிந்த வரை அரசியல்வாதிகளைத் திட்டியும் ஒரு வீடியோவை வெளியிட்டார். அடடா! கன்டென்ட் கிடைத்துவிட்டதே!

ராகுல் மோடி ஹக்:

அன்று வரை, `கைக்குழந்தை', `அம்மாவைச் சுற்றி வரும் பச்சிளம்பிள்ளை' போன்ற மீம்களுக்கு மட்டும் கன்டென்ட்டாக இருந்த ராகுல் காந்தி, முதல்முறையாக `தக் லைஃப்' கதாபாத்திரத்துக்கு மாறினார். நாடாளுமன்றப் பேச்சுவார்த்தையின்போது, என்றைக்கும் இல்லாமல் ஆளும் கட்சியை எதிர்த்துப் பேசியது மட்டுமல்லாது, அமைதியாய் அமர்ந்திருந்த மோடியைக் கட்டிப்பிடித்த சம்பவம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது! `இந்தப் பையனுக்குள்ளையும் ஏதோ இருந்திருக்கு பாரேன்!' என்று அந்தக் காணொலி சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டது. ராக்கிங் ராகுல்ஜி!

செல்ஃபி சிவகுமார்:

கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட திரைப்பட நடிகர் சிவகுமார், செல்ஃபி எடுப்பதற்காக முன்வந்த இளைஞனின் கைபேசியைத் தட்டிவிட்ட காணொலி, ஆண்டின் இறுதியில் மிகவும் வைரலானது. இது பல விவாதங்களுக்கும் வழிவகுத்தது. இதேபோலத்தான் சில மாதங்களுக்கு முன்பு, திரைப்படப் பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் செல்ஃபி எடுக்க முன்வந்த இளைஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதுமட்டுமல்லாமல் `செல்ஃபி என்பது செல்ஃபிஷ்' என்ற குறிப்பையும் முன்வைத்தார். என்னடா இது செல்ஃபிக்கு வந்த சோதனை!

ஷ்ரூவ் கரண்!

90-களின் முக்கியமான திரைப்படங்களில் வில்லன், தோழன், குணச்சித்திரம் என எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்த நடிகர் கரண், சில ஆண்டுகளுக்கு முன்பு கதாநாயகனாகக்கூட சில படங்களில் நடித்தார். ஆனால், அப்போதெல்லாம் கவனிக்கப்படாத இவருக்கு, தற்போது `ஆர்மி' ஆரம்பித்துக் கொண்டாடிவருகிறார்கள் நெட்டிசன்கள். விஜய் நடித்திருக்கும் `கோயமுத்தூர் மாப்ளே...' திரைப்படத்தில் வரும் `ஷ்ரூவ்' என்ற பின்னணி இசையோடு கரணின் ரியாக்‌ஷன்தான் இந்த ஆர்மி ஆரம்பிப்பதற்குக் காரணம். காணொலியோடு பல ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்டானது. முரட்டுக் கரணியன்ஸ்! 

வைரல் சுட்டீஸ்!

இப்போது இருக்கிற குட்டீஸ் எல்லாம் பயங்கர சுட்டீஸ். `தப்புப் பண்ணுனா அடிக்காம, திட்டாம, குணமா வாயில சொல்லணும்!'. இந்த வரிகளைப் படிக்கும்போதே அந்தக் குழந்தையின் குரல் நிச்சயமாக உங்களுக்கும் கேட்கும். பெற்ற தாய்க்கே பாடமெடுத்த சுட்டிக்குழந்தை ஸ்மித்திக்காவின் காணொலி மிகவும் வைரலானது. இவர் மட்டுமா... `பயந்துட்டேன்' என்று அழுதுகொண்டே ஒரு சிறுவன் சொல்லும்விதம் பாவமாக இருந்தாலும், அதுவும் வைரலாகப் பரவியது. வேறொரு சிறுவன், `ஸ்மால் டபுள்யூ... பிக் டபுள்யூ' என்று பாடிக்கொண்டே தன் வீட்டுப்பாடத்தை செய்யும் காணொலியும் மக்களால் அதிகம் பகிரப்பட்டு ரசிக்கப்பட்டது.

போதை வைரல்:

`இதுதான் தவறான விஷயம்', `அரசாங்கத்துக்கு நான் காசு கொடுத்திருக்கேன், அதுக்குன்னு நான் குடிகாரன் கிடையாது!', `நீ மது விக்கிற. அதனால நான் குடிக்கிறேன்' போன்ற வசனங்களைப் பேசி, `வைகைப் புயலுக்கே' டஃப் கொடுத்த சூப்பர்ஸ்டார் ரசிகன்தான் `பிஜிலி ரமேஷ்'. இவர் மது அருந்திவிட்டு பிராங்க் ஷோ ஒன்றில் உரையாடியவிதம் மக்கள் அனைவரையும் கவர்ந்தது. ஒரே வீடியோவில் ஓஹோவென ரசிகர்களைச் சம்பாதித்தார் பிஜிலி. மேலும், `வேண்டாம் பிலிப்ஸு' என்று குடித்துவிட்டு இரண்டு பேர் ரகளை செய்யும் காணொலியும் வைரல் ஹிட். கவலைகள் மறந்து அனைவரையும் சிரிக்கவைத்த பக்கா குடிமகன்கள் இவர்கள்.

திடீர் மீம் ஹீரோ:

`ஏன் வைரலாச்சு? எதனால வைரலாச்சு? அப்படி என்ன பண்ணிட்டோம்? எதுக்காகடா வைரலாக்குனீங்க?' போன்ற மனக்குமுறல்களில் தற்போது தத்தளித்துக்கொண்டிருப்பது `கோபி' என்று செல்லமாக அழைக்கப்படும் சின்னத்திரை இயக்குநர் திருமுருகன். `மெட்டி ஒலி', `நாதஸ்வரம்', `குலதெய்வம்' போன்ற பல ஹிட் தொடர்களைக் கொடுத்த இவர், நேரடி எபிசோடை இயக்கியதற்காக கின்னஸ் சாதனையும் படைத்தவர். யார் கண்ணு பட்டுச்சோ தெரியல, இந்த ஆண்டின் இறுதியில் மீம் கன்டென்ட்களுக்குச் சொந்தமாகியிருக்கிறார். இவர் நடித்திருக்கும் காதல்காட்சி, சண்டைக்காட்சி என ஒவ்வொன்றும் அத்தனை கன்டென்ட்டுகளுக்கு உதவுகிறது. வாட் எ மேன்!

இவர்களில் உங்களின் ஃபேவரிட் யார்?

அடுத்த கட்டுரைக்கு