Published:Updated:

`ஒரு வீடியோ, ஒரே நைட்ல வைரல்!' - செய்தி வாசிப்பாளராகக் கலக்கிய 7 வயது ரித்து குட்டி

குழந்தை ரித்து (ரித்விக்)

7 வயது குட்டிக் குழந்தை ரித்துவின் சமீபத்திய வீடியோ, தமிழகத்தையே கலக்கிக்கொண்டிருக்கிறது.

`ஒரு வீடியோ, ஒரே நைட்ல வைரல்!' - செய்தி வாசிப்பாளராகக் கலக்கிய 7 வயது ரித்து குட்டி

7 வயது குட்டிக் குழந்தை ரித்துவின் சமீபத்திய வீடியோ, தமிழகத்தையே கலக்கிக்கொண்டிருக்கிறது.

Published:Updated:
குழந்தை ரித்து (ரித்விக்)

`என் திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்புக் கொடுங்க சார்... ப்ளீஸ்!’ என வாய்ப்புக் கேட்டு அலைந்து திரிந்த காலம் எல்லாம் இப்போது மலையேறிவிட்டதுபோல. இப்போதெல்லாம் தங்களுடைய திறமை என்னவோ அதை ஒரு வீடியோவாக்கி வெளியிடுகிறார்கள். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சோஷியல் மீடியாவில் சுழன்றடிக்கும் அந்த வீடியோ, திறமைக்கேற்ற பாராட்டைப் பெற்றுவிடுகிறது. குறிப்பாக, தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு சிறந்த களமாக யூடியூப் உருவெடுத்திருக்கிறது.

அந்த வகையில், தமிழில் பல யூடியூப் சேனல்கள் விதவிதமான கான்செப்ட்களில் வீடியோக்களை எடுத்து வெளியிட்டு அசத்தி வருகின்றன. இப்படியான யூடியூப் உலகில் 7 வயது குட்டிக் குழந்தை ரித்துவின் சமீபத்திய வீடியோ, தமிழகத்தையே கலக்கிக்கொண்டிருக்கிறது.

குழந்தை ரித்து (ரித்விக்)
குழந்தை ரித்து (ரித்விக்)
Admin

`ரித்து ராக்ஸ்' (rithu rocks) என்ற யூடியூப் சேனலில் இருந்து வெளியான அந்த வைரல் வீடியோவில், நியூஸ் சேனல்களின் செய்தி வாசிப்பையும், செய்திகள் சொல்லப்படுவதையும் நகைச்சுவை கலந்து அவ்வளவு அழகாக உருவாக்கியிருக் கின்றனர். செய்தி வாசிப்பாளர், நிருபர், விவசாயி எனப் பல வேடங்களில், மழலைக் குரலில் குழந்தை ரித்துவின் செய்கையும் பேச்சும் அவ்வளவு க்யூட்டாக இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`யாருடா இந்தப் பையன், இந்த வயசுலயே இவ்ளோ திறமையா இருக்கான்!’, `இந்தக் குட்டிப் பையன்தான் அந்தப் பெண் குழந்தை வேஷத்தையும் போட்ருக்கானா!’, `பெண் குழந்தை வேஷத்துல பையன் அவ்ளோ அழகா இருக்கான்’, `எங்க கண்ணே பட்ரும் போல, வீட்ல சுத்திப் போடுங்க’ எனப் பலரும் குழந்தை ரித்துவின் வீடியோவைப் பார்த்து பாராட்டி வருகின்றனர். ரித்து ராக்ஸ் (rithu rocks) சேனலில் இதுவரை வெளியான 7 வீடியோக்களில் ஒன்றுகூட 50,000 பார்வையாளர்களைத் தாண்டாத நிலையில், சமீபத்தில் வெளியாகி வைரலான `செய்தி வாசிப்பாளர்' வீடியோ லட்சத்துக்கும் மேற்பட்ட வியூஸைக் குவித்திருக்கிறது.

குழந்தை ரித்து (ரித்விக்)
குழந்தை ரித்து (ரித்விக்)
Admin

ரித்துவின் தந்தை ஜோதிராஜிடம் பேசினோம். ``எனக்கு சொந்த ஊர் ராசிபுரம் பக்கத்துல வையப்பமலை. இப்போ கோவை துடியலூரில் செட்டில் ஆகியிருக்கோம். கொரோனா லாக்டெளன் சமயத்துல என் பையன் ரித்து (ரித்விக்) நிறைய யூடியூப் சேனல்கள் பார்க்க ஆரம்பிச்சான். 2017-லேயே ரித்து பாடுன வீடியோ ஒன்றை யூடியூப்ல சேனல் ஆரம்பிச்சி போஸ்ட் பண்ணியிருந்தேன். அந்த ஒரு வீடியோவுக்கு மேல எதுவுமே பண்ணலை. அப்படியிருக்க, இந்த லாக்டெளன்ல நிறைய யூடியூப் வீடியோஸ் பார்த்த என் பையன், `என் சேனல்ல என்னை வெச்சு எப்ப வீடியோ போடுவீங்க?'னு என்கிட்ட கேட்டான். அவன் கேட்ட பின்னாடிதான் எங்களுக்கு ஐடியா வந்துச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பையனுக்கு 7 வயசுதான் என்றாலும் நல்லா ஆக்டிவ்வா, திறமையா பேசுவான். அவனை ஷூட் பண்ணி வீடியோ எடுத்து யூடியூப்ல போட்டோம். நாங்க போட்ட 7 வீடியோ சுமாராதான் போச்சு. ஆனா, கடைசியா நாங்க போட்ட வீடியோ வேற லெவல் ரீச். அந்த வீடியோவுக்கு அவ்வளவு ரீச் கிடைக்கும்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை.

வீடியோவுக்கான ஸ்கிரிப்ட், கேமரா வொர்க்ஸ், எடிட்டிங் என எல்லாத்தையுமே நான்தான் பண்றேன். என்னோட மனைவி ஆஷா மேக்கப் மற்றும் காஸ்ட்யூம்ஸ் பார்த்துக்குவாங்க. இப்படி அப்பா, அம்மா, பையன் என மூணு பேரை மட்டுமே வெச்சு இயங்குற சேனல் எங்களோடது. நம்மால முடிஞ்ச உழைப்பை கொடுப்போம், என்னைக்காவது பலன் கிடைக்கும்னு நினைச்சோம். ஆனா, இவ்ளோ சீக்கிரமா இந்த ரீச் கிடைக்கும்னு நாங்க கனவுலகூட நினைக்கலை” என்றார்.

குழந்தை ரித்து (ரித்விக்)
குழந்தை ரித்து (ரித்விக்)

ரித்துவின் அம்மா ஆஷாவிடம் பேசினோம். ``ஜூலை 9-ம் தேதிதான் யூடியூப்ல வீடியோ போட்டோம். அடுத்த நாளே நிறைய பேர் எங்களைக் கூப்பிட்டுப் பாராட்ட ஆரம்பிச்சாங்க. அப்பதான் பையனோட வீடியோ பயங்கரமா வைரலாகிட்டு இருக்குன்னு எங்களுக்குத் தெரியவந்துச்சு. ஒரு நைட்டுல மேஜிக் மாதிரி ரித்து பயங்கரமா வைரலாகிட்டான். இதுக்கு எப்படி ரியாக்ட் பண்றதுனே எங்களுக்குத் தெரியலை. என் வீட்டுக்காரர் பல வருஷமா உதவி இயக்குநராக இருந்து போராடி, இப்போ படம் பண்ண முயன்றுட்டு இருக்கார். ஆனா, பையன் இந்த 7 வயசுலயே பெருசா ரீச் ஆகியிருக்கான். பையன் மூலமாதான் என் கணவருக்கு வாய்ப்பு கிடைச்சிருக்குனு சொல்லணும். பெத்தவங்க கண்ணு முன்னாடி பசங்க வளர்றதையும், அவங்களை நிறைய பேர் பாராட்டுறதையும் பார்க்குறது பெரிய சந்தோஷமுங்க. அதை எங்க பையன் இந்தச் சின்ன வயசுலயே எங்களுக்குக் கொடுத்துருக்கான்” என்றார்.

சூப்பர் ரித்து குட்டி... கலக்குங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism