Published:Updated:

ஆதீரா குட்டிக்காக ராணி முகர்ஜி எழுதிய அழகிய கடிதம்!

Vikatan Correspondent
ஆதீரா குட்டிக்காக ராணி முகர்ஜி எழுதிய அழகிய கடிதம்!
ஆதீரா குட்டிக்காக ராணி முகர்ஜி எழுதிய அழகிய கடிதம்!
ஆதீரா குட்டிக்காக ராணி முகர்ஜி எழுதிய அழகிய கடிதம்!

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியின் மகளுக்கு நேற்று முதல் பிறந்தநாள். முகர்ஜி தனது மகள் ஆதிராவின் முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி  ஆதீராவுக்கு முகர்ஜி உருக்கமான கடிதமொன்றை எழுதியுள்ளார். அதில், ‘திடீரென்று ஒரு நாள் நான் முழுமையாக மாறிவிட்டத்தை உணர்ந்தேன். ஆம் நான் என் மகளுக்காக வாழ தொடங்கிவிட்டேன். உலகில் உள்ள ஆயிரம் கோடி அம்மாக்களும் இப்படி தான் பிள்ளைகளை பற்றி மட்டுமே யோசித்து கொண்டிருப்பார்கள். அவர்கள் அனைவரின் தாய்மையையும் தலை வணங்குகிறேன். ஒட்டுமொத்த ஆசிர்வாதமும் என மகள் ஆதீரா உருவாக கிடைத்துவிட்டது. ஆதீராவை அழகாக, தைரியமானவளாக, அன்புடையவளாக, ஒழுக்கமுடையவளாக வளர்ப்பேன்’, என  நெகிழ்ச்சியாக எழுதியுள்ளார்.