Published:Updated:

"அவர் மற்ற நட்சத்திரங்களைப் போல் இல்லை!" - அமிதாப் பச்சனுக்குச் சிலை வைத்த அமெரிக்க இந்தியர்

அமிதாப் பச்சனின் சிலை

"நாங்கள் அமிதாப் பச்சனுக்குச் சிலை வைக்கக் காரணம் இதுதான்!" - வைரல் அமெரிக்க இந்தியர் விளக்கம்.

"அவர் மற்ற நட்சத்திரங்களைப் போல் இல்லை!" - அமிதாப் பச்சனுக்குச் சிலை வைத்த அமெரிக்க இந்தியர்

"நாங்கள் அமிதாப் பச்சனுக்குச் சிலை வைக்கக் காரணம் இதுதான்!" - வைரல் அமெரிக்க இந்தியர் விளக்கம்.

Published:Updated:
அமிதாப் பச்சனின் சிலை

அமெரிக்காவில் இன்டர்நெட் செக்யூரிட்டி இன்ஜினியராக பணிபுரிந்து வருவர் கோபி சேத். இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட இவர், தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியின் எடிசன் சிட்டியில் வசித்து வருகிறார். கோபி சேத்தின் குடும்பத்திலுள்ள அனைவரும் பாலிவுட்டின் முன்னனி நடிகரான அமிதாப் பச்சனின் தீவிர ரசிகர்கள். இதனால் அமெரிக்காவில் உள்ள அவர்களது வீட்டின் முன்பு அமிதாப் பச்சனின் உருவச் சிலையை வைத்துள்ளனர். இதை ஆல்பர்ட் ஜசானி என்ற நபர் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் சுமார் 600 பேர் பங்கேற்று இதைக் கொண்டாடினர்.

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

இது பற்றிக் கூறிய கோபி சேத், "எனக்கும் என் மனைவிக்கும் அமிதாப் பச்சன் கடவுள் போல. அவரது ரீல் வாழ்க்கை மட்டுமல்ல, ரியல் வாழ்க்கையும் எங்களை நிறைய ஊக்கப்படுத்தியுள்ளது. பொதுவெளியில் அவர் தன்னை எப்படி நிர்வகிக்கிறார், எப்படி வெளிப்படுத்துகிறார், எப்படி மற்றவர்களை அணுகுகிறார் என்பது பற்றி நன்றாக உங்களுக்குத் தெரியும். அவர் மற்ற நட்சத்திரங்களைப் போல் இல்லை. அதனால்தான் எங்கள் வீட்டிற்கு வெளியே அவரது சிலையை வைத்து அவரைக் கெளரவப்படுத்தியுள்ளோம்" என்று கூறினார்.

அமிதாப்பின் அமெரிக்க சிலை நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது.