Published:Updated:

`எவ்வளவு நேக்கா தங்க சங்கிலியை தூக்கிட்டுப் போகுதுங்க!' - எறும்புகளின் வைரல் வீடியோ

எறும்புகள் ( Susanta Nanda )

10 விநாடிகளுக்கும் குறைவான அந்த வீடியோவில், எறும்புகள் அலேக்காக ஒரு தங்கச் சங்கிலியை நகர்த்திச் செல்கின்றன. இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்த நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

எறும்புகள் தங்க சங்கலியை தூக்கிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

எறும்பு
எறும்பு
Pixabay

எறும்புகளின் பலமே கூட்டமாக இருந்தாலும் ஒற்றுமையாக இருப்பது தான். தினமும் தங்களுக்குத் தேவையான உணவை தேடிக் கொண்டு வருவதில் இருந்து, தங்களுக்கென ஒரு மணல் வீட்டை கட்டிக் கொள்வது வரை கூட்டமாகவே செயல்படும். கூட்டமாக செயல்படுவது மட்டுமில்லாமல், ஓர் ஒழுங்கோடும் செய்யும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எறும்புகளுக்கு மறுபக்கமும் உண்டு. யாருக்கும் தெரியாமல் வைக்கும் உணவுகளைக்கூட தேடி எடுத்துச் செல்வதில் கில்லாடிகள்.

இந்நிலையில் சமீபத்தில் எறும்புகள் கூட்டம் தங்க சங்கிலி ஒன்றை தூக்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

10 விநாடிகளுக்கும் குறைவான அந்த வீடியோவில், எறும்புகள் அலேக்காக ஒரு தங்கச் சங்கிலியை நகர்த்திச் செல்கின்றன. இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்த நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

அந்த பதிவில், ’சிறிய தங்க கடத்தல்காரர்கள்; இந்திய தண்டனை சட்டத்தில் எந்தப் பிரிவின் கீழ் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யலாம்’ என நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.