Published:Updated:

`டி.என்.ஏ டெஸ்ட் செய்து நிரூபியுங்கள்!’- ரசிகர்களைக் குழப்பிய மைக்கேல் ஜாக்சன் லுக் அலைக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மைக்கேல் ஜாக்சன் லுக் அலைக்
மைக்கேல் ஜாக்சன் லுக் அலைக்

உலகப் புகழ்பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் போலவே உள்ள வேறு ஒருவரால், அவரது ரசிகர்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.

மைக்கேல் ஜாக்சன். இந்த ஒற்றைப் பெயர், ஒட்டுமொத்த இசை உலகையும் ஆட்டிப்படைத்தது. தன் தனித்துவமான நடன அசைவுகளாலும் கேட்போரை மயக்கும் குரலாலும் பாப் உலகின் முடி சூடா மன்னனாகத் திகழ்ந்தவர், மைக்கேல் ஜாக்சன். கடந்த 2009-ம் ஆண்டு, அதிக அளவில் மருந்துகள் உட்கொண்டதால் உயிரிழந்தார். அவரது இறப்பில் பல்வேறு சர்ச்சைகள் இருக்கும் நிலையில், மைக்கேல் ஜாக்சன் ஆவியாக வலம்வந்து கொண்டிருக்கிறார் என்கிறரீதியில், கட்டுக்கதைகளும் அந்நேரத்தில் வெளியாகின. இந்த நிலையில், மைக்கேல் ஜாக்சனைப் போன்ற தோற்றம்கொண்ட இளைஞர் ஒருவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

செர்ஜியோ கோர்டெஸ்
செர்ஜியோ கோர்டெஸ்

அர்ஜென்டினாவின் பார்சிலோனாவில் பிறந்தவரும், தற்போது பாப் உலகில் வளர்ந்துவரும் கலைஞரான செர்ஜியோ கோர்டெஸ், மறைந்த பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் உருவத்துடன் அச்சு அசலாக உள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மைக்கேல் ஜாக்சனின் பாடல்களுக்கு நடனம் ஆடி வருகிறார். மைக்கேல் ஜாக்சனின் தோற்றத்துடன் இருக்கும் செர்ஜியோ கோர்டெஸ், தற்போது புகழ்பெற்று வருகிறார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது மைக்கேல் ஜாக்சன் உருவத்தைக் கொண்டு பாடல்களுக்கு நடனமாடிப் பதிவிடுவார். இதன்மூலம், அவருக்கு ரசிகர் பட்டாளம் வெகுவாக அதிகரித்தது.

தொலைந்த பால்யம், தோற்ற காதல், வரலாறான வாழ்வு! - மைக்கேல் ஜாக்ஸன் நினைவுகள் #MJ
தொலைந்த பால்யம், தோற்ற காதல், வரலாறான வாழ்வு! - மைக்கேல் ஜாக்ஸன் நினைவுகள் #MJ

ஏற்கெனவே, பல விடியோக்களைப் பதிவிட்ட செர்ஜியோ கோர்டெஸ், வழக்கம்போல் சமீபத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டார். அந்த ஒரு வீடியோ, இவரை லைம் லைட்டில் நிறுத்தியிருக்கிறது. அந்த வீடியோ பதிவில் செர்ஜியோ கோர்டெஸ், ``அனைத்து மைக்கேல் ஜாக்சன் ரசிகர்களுக்கும் வணக்கம். நான் உங்களை நேசிக்கிறேன். எனது இசை நிகழ்ச்சியைப் பாருங்கள்'' என்று கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, கூடவே சர்ச்சையும் தொடங்கியிருக்கிறது.

செர்ஜியோ கோர்டெஸ்
செர்ஜியோ கோர்டெஸ்

சிலர், செர்ஜியோ கோர்டெஸ் தான் உண்மையான மைக்கேல் ஜாக்சன் என்றும், மைக்கேல் ஜாக்சன் மறைந்து வாழ்வதற்காகத் தான் இப்படி இறந்துவிட்டதாக நாடகம் ஆடுகிறார் என்றும் கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். இதில் ஹை-லைட்டாக சில ரசிகர்கள், ``செர்ஜியோ கோர்டெஸ்தான் உண்மையான மைக்கேல் ஜாக்சன். அது உண்மையில்லை என்றால், டி.என்.ஏ பரிசோதனை செய்து அவர் நிரூபித்துக் காட்ட வேண்டும்'' என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்துப் பேசியுள்ள செர்ஜியோ கோர்டெஸ், ``என்னைப் பார்த்த ஒரு பத்திரிகையாளர், நான் மைக்கேல் ஜாக்சன் தோற்றத்தில் இருப்பதாகக் கூறினார். என்னை மைக்கேல் ஜாக்சன் போன்று மேக்கப் போட்டு அவரது பத்திரிகையில் வெளியிட விரும்பினார். நான் அதை வேடிக்கையாகச் செய்தேன்.

செர்ஜியோ கோர்டெஸ்
செர்ஜியோ கோர்டெஸ்

பின்னர், அவர் என்னை சில சுவிட்சர்லாந்து தயாரிப்பாளர்களுக்காக விளம்பரப் படங்களில் அறிமுகப்படுத்தினார். எனது புகைப்படத்தை வாசனைத் திரவிய விற்பனைக்குப் பயன்படுத்த விரும்பினர். இது எல்லாம், எனது வாழ்வில் தற்செயலாக நடந்தவை'’ என்று கூறியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு