Published:Updated:

Irfan's View: `வெறுப்புணர்வுல பேசுறாங்க!' முடக்கப்பட்டு லைவ்வுக்கு திரும்பிய சேனல்; என்ன நடந்தது?

இர்பான்

ரொம்ப நாளா இந்த சேனலுக்காக ஒர்க் பண்ணியிருக்கேன். அதனால அந்த வருத்தம் நிச்சயம் இருக்கு.

Irfan's View: `வெறுப்புணர்வுல பேசுறாங்க!' முடக்கப்பட்டு லைவ்வுக்கு திரும்பிய சேனல்; என்ன நடந்தது?

ரொம்ப நாளா இந்த சேனலுக்காக ஒர்க் பண்ணியிருக்கேன். அதனால அந்த வருத்தம் நிச்சயம் இருக்கு.

Published:Updated:
இர்பான்

பிரபல யூடியூபர் இர்பானின் irfan's View Youtube பக்கம் யூடூப் தளத்தில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது . யூடியூப் விதிமுறைகளை மீறியதாக கூறி அவருடைய யூடியூப் தளம் முடக்கப்பட்டுள்ளது. இது குறித்து இர்ஃபான் அவருடைய யூடியூப் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில்,

' 'Community Guildlines Violation' அப்படின்னு சுட்டிக்காட்டி சேனலை டெர்மினேட் பண்ணிட்டதா மெயில் வந்திருந்துச்சு. பொதுவா யூடியூப்பில் மூன்று முறை வார்னிங் கொடுத்துட்டு தான் டெர்மினேட் பண்ணுவாங்க. ஆனா, அப்படி நம்ம சேனலுக்கு பண்ணல. திடீர்னு சேனலை முடக்கிட்டோம்னு மெயில் வந்த பிறகு எங்களால சேனலை அக்சஸ் பண்ண முடியல. என்ன பிரச்னைன்னும் தெரியல. என்ன பிரச்னைன்னு கேட்டு அப்பீல் பண்றதுக்கான படிவத்தை நிரப்பி அனுப்பி வச்சியிருக்கோம். அவங்க அதை பார்த்துட்டு ரிப்ளை பண்ண பிறகு தான் என்னன்னு தெரியும்.

இர்பான்
இர்பான்
HP

"நிறைய பேர் என்ன பிரச்னைன்னு தொடர்ந்து போன் பண்ணி கேட்டுட்டே இருக்கீங்க. இப்ப வரைக்கும் என்ன பிரச்னைன்னு எங்களுக்கே தெரியல. அவங்க சொன்ன டேர்ம் 'Community Guildlines Violation'. பார்த்ததும் ரொம்ப ஷாக் ஆகிடுச்சு. திருப்பி சேனல் வந்துச்சுன்னா அதில் போஸ்ட் போடுவேன். இல்லைன்னா இப்ப இருக்கிற 'Irfan's View Shorts' சேனலில் தான் வீடியோ போட ஆரம்பிக்கணும். ரொம்ப நாளா இந்த சேனலுக்காக ஒர்க் பண்ணியிருக்கேன். அதனால அந்த வருத்தம் நிச்சயம் இருக்கு. இதுல நான் மட்டும் ஒர்க் பண்ணாம என் கூட சேர்ந்து 7 பேர் வேலை பார்க்கிறாங்க.. இந்த சேனலுக்காக! 

நிறைய பேர் திரும்ப வந்திடும்னு சொல்லும்போது கொஞ்சம் ஆறுதலா இருந்தாலும் வருத்தமா தான் இருக்கு. ஃபேக் மெயில் என நினைச்சு தான் எடுத்து பார்த்தேன். யூடியூப்ல இருந்து வந்ததும் செக் பண்ணி பார்ப்போம்னு ஓப்பன் பண்ணும்போது இல்லை. பலர் மெசேஜ், போன் பண்ணிட்டே இருந்தீங்க. என்னால யார்கிட்டேயும் பேச முடியல.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பல வீடியோக்கள் எடுத்து வச்சு எடிட் பண்ணி ஒவ்வொரு வீடியோ போட்டுட்டு இருக்கோம். இது இன்னைக்கு போடணும் என்கிற பிளானுடன் வீடியோ எடுத்து வச்சியிருக்கோம். கிட்டத்தட்ட 50 வீடியோக்கள் இருக்கு. நோம்பு வரப் போகுது.. அந்த சமயம் வீடியோ பண்ண முடியாதுன்னு பிளான் பண்ணி எடுத்து வச்ச வீடியோக்களை போட முடியாம இருக்கும்போது எப்படி இருக்கும்.. அந்த மனநிலையில் தான் இப்ப நான் இருக்கிறேன். அதில் 48 மணி நேரத்திற்கு பிறகு செக் பண்ணிட்டு சொல்லுவேன்னு சொல்லியிருக்காங்க. 48 மணி நேரத்திற்கு பிறகு தான் சேனல் நமக்கு கிடைக்குமா, கிடைக்காதான்னு தெரியும்.

இர்பான்
இர்பான்

3, 4 வருஷமா தொடர்ந்து வீடியோ போட்டுட்டு இருக்கேன். 1500 வீடியோக்கள் கிட்ட போட்டிருக்கேன். அந்த பழைய வீடியோக்கள் எல்லாம் என்கிட்ட இருக்கான்னுகூட எனக்கு தெரியல. சாதாரணமா இதை என்னால எடுத்துக்க முடியல. இது ஹேக் ஆகியிருக்குன்னு நினைச்சா ஹேக் ஆகலை. யூடியூப் நேரடியா இதை முடக்கியிருக்காங்க. இப்பவும் நிறைய ஹேட் கம்மென்ட்ஸ் பண்ணிட்டு இருக்காங்க. அவங்க ஏதோ ஒரு வெறுப்புணர்வுல பேசுறாங்க ஓகே தான்.. ஆனா, 5,6 வருஷம் இதுக்காக ஒருத்தன் உழைச்சிருக்கான். அதுக்காக பார்க்கலாம் இல்லையா..! இது தொடர்பான அப்டேட் எப்ப தர முடியும்னு தெரியல.. ஆனா, தரேன்!' என அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போது 16 மணி நேர முடக்கத்துக்கு பிறகு Irfan's View சேனல் மீண்டும் இயக்கத்துக்கு திரும்பியது. community guidelines மீறல் எதுவுமில்லை என youtube தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.