Published:Updated:

`நம்ம படத்துல நீங்க தான் பாடுறீங்கன்னு சொன்னாங்க... ஆனா!' - இன்ஸ்டாகிராம் வைரல் அம்மா - மகன்

இன்ஸ்டாகிராம் வைரல் அம்மா - மகன்

அனிருத் இசையமைப்பாளரா ஜெயிச்சதுக்கு இதுதான் காரணம்

Published:Updated:

`நம்ம படத்துல நீங்க தான் பாடுறீங்கன்னு சொன்னாங்க... ஆனா!' - இன்ஸ்டாகிராம் வைரல் அம்மா - மகன்

அனிருத் இசையமைப்பாளரா ஜெயிச்சதுக்கு இதுதான் காரணம்

இன்ஸ்டாகிராம் வைரல் அம்மா - மகன்
`இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் திறந்தாலே கொண்டாட்டமும் குதூகலமும் தான்... அன்றாட வாழ்க்கையில் ரீல்ஸ் பார்க்காமல் அன்றைய நாள் நிறைவடையாது என்றுதான் சொல்லுமளவுக்கு ரீல்ஸ்கள் பெருகிவிட்டன.

சனாதன் ஶ்ரீ கிருஷ்ணாவும், அவரின் அம்மா வசந்தாவும் `அம்மாவும் நானும்' என்கிற கான்செப்டில் சினிமா பாடல்களைப் பாடி பல மில்லியன் இதயங்களை கொள்ளை கொண்டிருக்கிறார்கள். இருவரையும் சந்தித்துப் பேசினோம். வசந்தா அம்மாவின் குடும்பம் பாட்டுடன் தொடர்புடையது என்பதை வரவேற்பு அறையை அலங்கரித்தப் புகைப்படங்கள் விளக்கின. சனாதன் பேசத் தொடங்கினார்.

இன்ஸ்டா வைரல் அம்மா - மகன்
இன்ஸ்டா வைரல் அம்மா - மகன்

` என்னோட குடும்பம் இசையுடன் தொடர்புடையது. ஆனா, எனக்கு ஆரம்பத்தில் மியூசிக் மேல பெரிய ஆர்வமில்ல. அம்மாவும் எத்தனையோ முறை என்னை மியூசிக் கிளாசுக்கு அனுப்பியிருக்காங்க. ஆனா, அதெல்லாம் பிடிக்கலைன்னு திருப்பி வந்துருக்கேன். திடீர்னு ஒரு ஸ்பார்க் அடிச்ச மாதிரி தான் மியூசிக் பிடிக்க ஆரம்பிச்சது. நான் போன பியானோ கிளாஸ் அதற்கு மிக முக்கிய காரணம். பிளஸ் டூ முடிச்ச பிறகு மியூஸிக் தான் இனிமேன்னு முடிவு பண்ணிட்டேன் என்றதும் வசந்தாம்மாவிடம், `உங்க கதையை கொஞ்சம் சொல்லுங்களேன்!' என்றதும், `கதை சொல்லவா'ன்னு இப்ப தான் என் பையன் பண்றது ஸ்பாட்டிஃபையில் வரப் போகுது... நான் குட்டியா என் கதையைச் சொல்றேன்!' என்றவாறு தொடர்ந்தார்.

எங்க வீட்ல மொத்தம் பத்து பேர்... 7 பொண்ணுங்க, 3 பசங்க. எல்லாருமே இசை சார்ந்துதான் பயணிக்கிறோம்.. அதுக்கு அடிப்படை காரணம் எங்க அம்மா, அப்பா தான்! என் அப்பா வயலின் புரொபசர். வேலை ரீதியா அவர் ஶ்ரீலங்காவில் இருந்ததால நாங்க பொறந்தது, வளர்ந்ததெல்லாம் ஶ்ரீலங்காவில்தான். அம்மா ரேடியோ ஆர்ட்டிஸ்ட். சின்ன வயசில 500க்கும் மேற்பட்ட கச்சேரிகள் பண்ணியிருக்கேன். ஶ்ரீலங்காவில் நாங்க கொடி கட்டிப் பறந்தோம்னு ரொம்ப பெருமையாகவே சொல்லிப்பேன்" என்றவர் 18 வருடங்களுக்கும் மேலாக மியூசிக் டீச்சராக இருக்கிறார். அவரிடம் இன்ஸ்டா பாடல்கள் குறித்துக் கேட்டோம்.

இன்ஸ்டா வைரல் அம்மா - மகன்
இன்ஸ்டா வைரல் அம்மா - மகன்

"சின்ன வயசுல மேடைக் கச்சேரிகளில் சினிமா பாடல்கள் பாடியிருக்கேன். அதுக்கப்புறம் கர்னாடக சங்கீதம் மட்டும்தான் பாடிட்டு இருந்தேன். எனக்கு சினிமா பாடல்கள் தெரியாததனால அதோட டியூனுக்கு ஸ்வரம் போட்டு பாடுவேன். அப்படி நான் பாடுறதை அவன் கவனிச்சதனால அவனுக்கு இந்த ஐடியா தோணியிருக்கு போல" என்றவரை சனாதன் தொடர்ந்தார்.

"இன்டிபென்டன்ட் சிங்கரா தொடர்ந்து பல பாடல்கள் பாடிட்டு இருந்தேன். நான் பியானோலாம் வாசிக்கிறதைப் பார்த்துட்டு நீ ஏன் டிஜிட்டலா பண்ணக் கூடாதுன்னு என் பிரதர் சொல்லவும் அட ஆமால்ல நாம ட்ரைப் பண்ணி பார்க்கலாமேன்னு தோணவும் ரீல்ஸ் பண்ண ஆரம்பிச்சேன். ரெண்டு, மூணு வருஷத்துக்கு முன்னாடியே எனக்குத் தோணின கிரியேட்டிவ் ஐடியாக்களை வீடியோவாக பண்ண ஆரம்பிச்சேன். ஃபேமிலியோட நடந்த நியூ இயர் பார்ட்டியில் அம்மா `வசீகரா' பாட்டை ஸ்வரம் போட்டு பாடினாங்க. அது கேட்கவே புதுசா நல்லா இருந்துச்சு. நார்மலா கீர்த்தனைக்குத்தான் ஸ்வரம் போடுவாங்க. சினிமா பாட்டுக்கு யாரும் போட மாட்டாங்க. அப்ப ஒரு ஸ்பார்க் இருந்துச்சு. நாம ஏன் அம்மாவோட அதை டிரை பண்ணக் கூடாதுன்னு அம்மாகிட்ட கேட்டேன். அவங்களும் ஓகே சொன்னாங்க. அந்தப் பாட்டு மூலமாத்தானே அந்த ஸ்பார்க் அடிச்சது அதனால அதே பாட்டைப் பாடலாம்னு முடிவு பண்ணிப் பாடினோம். அதுக்கு ஆடியன்ஸ் மத்தியில் நல்ல ரீச் கிடைச்சது. அப்படித்தான் எங்க வீடியோவும் வைரலானது.

இன்ஸ்டா வைரல் அம்மா - மகன்
இன்ஸ்டா வைரல் அம்மா - மகன்

என்னோட மியூசிக் ரிவியூவர் என் அம்மா தான்! 2017-ல் பாட ஆரம்பிச்சப்ப ஒரு ரெண்டு வருஷத்துல பெரிய மியூசிக் டைரக்டர் ஆகிடுவோம்னு தான் நினைச்சேன். அந்த ஆசையைத் தூண்டினதும் எனக்கு வந்த ஃபேக் போன் கால் தான்! புரொடக்‌ஷன் ஹவுஸ்ல இருந்து கால் பண்றோம்.. நாங்க படம் பண்றோம்.. நாம சேர்ந்து பாட்டு பண்ணலாம்னு சொன்னாங்க. அதுவும் நான் பிளஸ் டூ படிச்ச டைம்.. அந்த நேரத்துல நாம மியூசிக் டைரக்டர் ஆகிட்டா ஸ்கூல்ல கெத்தா இருக்கும்னுலாம் தோணுச்சு. ஆனா, பிறகுதான் அது ஃபேக் கால்னு தெரிஞ்சது. மியூசிக் இன்டஸ்டரி ரொம்ப கஷ்டமான பிளாட்ஃபார்ம். தனுஷ் சார் பின்னாடி இருந்தாலும் அனிருத் சார் கிடைச்ச வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கிட்டதால மட்டும் தான் அவரால சக்ஸஸ் ஆக முடிஞ்சதுன்னு நான் நினைக்கிறேன். படத்துக்கு போகணும் என்பது நடக்கலாம், நடக்காமலும் இருக்கலாம்.. அது வரட்டும், வராம போகட்டும் நாம பண்ற வேலையை தொடர்ந்து பண்ணிட்டே இருக்கணும் என்பதுதான் இதுல இருந்து நான் கத்துக்கிட்ட விஷயம்!' என்றார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து இருவரும் பகிர்ந்து கொண்டார்கள். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!