Published:Updated:

`என்னது வின் டீசல்தான் உலகின் முதல் மனிதனாகச் சொல்லப்படும் ஆதாமா?' - வைரலாகும் புகைப்படம்!

ஆதாம்மின் 3D மாடல், வின் டீசல்

Alamo Drafthouse NYC என்ற ட்விட்டர் கணக்கு வெளியிட்ட ட்வீட் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இணையவாசிகள் இதில் வின் டீசலையும் இணைத்து கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்', 'டிரிபிள் எக்ஸ்' படங்களின் மூலம் இந்தியாவிலும் பிரபலமானவர் ஹாலிவுட் நடிகர் வின் டீசல். எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான இவர், 'The Chronicles of Riddick', 'The Pacifier', 'Riddick', 'The last witch hunter' போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் 2000-ம் ஆண்டுகளின் துவக்கத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார். தற்போது வின் டீசல் குறித்த ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இண்டி தியேட்டர் ஆபரேட்டர் Alamo Drafthouse NYC கடந்த வியாழக்கிழமை (27.10.2022) அன்று ட்வீட் ஒன்றை வெளியிட்டது. அதில், "பிரின்ஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், கடவுளால் உருவாக்கப்பட்ட முதல் மனிதரான ஆதாம் எப்படி இருந்திருப்பார் என்பதற்கான இந்த 3D மாதிரியைப் புனரமைத்துள்ளனர்" என்று ஒரு 3டி மாடல் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தனர். அது பார்ப்பதற்கு அச்சு அசலாக வின் டீசல் போலவே இருந்ததால் இணையவாசிகள் அதிக லைக்குகளையும், ரீட்வீட்களையும் செய்து சமூகவலைத்தளத்தில் அந்தப் படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

"அப்ப வின் டீசல்தான் நிஜமான ஆதாமா?" எனப் பலரும் இதற்கு நகைச்சுவையான கமென்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.