Published:Updated:

`20 நிமிடங்களில் 12 பாடல்கள்; ஜெனிஃபர் லோபெஸ் - ஷகீரா கூட்டணி!' - வைரல் `சூப்பர் பௌல் சண்டே'

ஷகிரா மற்றும் ஜெனிஃபர் லோபெஸ்
ஷகிரா மற்றும் ஜெனிஃபர் லோபெஸ்

கேப்ஷனை உண்மையாக்கி, உலக மக்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்துவிட்டனர், ஜெனிஃபர் லோபெஸ் மற்றும் ஷகிரா.

மில்லியன் கணக்கான அமெரிக்க மக்களைத் தொலைக்காட்சி முன் கட்டிப்போடும் நாள், 'சூப்பர் பௌல் சண்டே'. இந்நிகழ்ச்சி லைவ் செய்யப்படும் ஞாயிறுக்காகக் காத்திருப்பார்கள் அமெரிக்க மக்கள்.

Jennifer Lopez and Shakira at Super Bowl
Jennifer Lopez and Shakira at Super Bowl
Instagram

இந்த வருட 'சூப்பர் பௌல்' நிகழ்ச்சியில், பிரபல அமெரிக்கப் பாடகிகள் ஷகீரா மற்றும் ஜெனிஃபர் லோபெஸ் இணைந்து மேடையில் அரங்கேற்றிய ஒளியும் ஒலியும் விருந்துதான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரல் ஹிட்.

பிப்ரவரி 2-ம் தேதி, தேசிய கால்பந்து லீகின் சாம்பியன்ஷிப் விளையாட்டான 'சூப்பர் பௌல்', ஃப்ளோரிடாவிலுள்ள ஹார்ட் ராக் (Hard Rock) ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான சிறப்பு நிகழ்ச்சிக்காக ஷகீரா மற்றும் ஜெனிஃபர் லோபெஸின் இசை விருந்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Shakira in Superbowl
Shakira in Superbowl
Instagram

20 நிமிடங்களில் 12 பாடல்களைப் பாடியும், பெல்லி டான்ஸ், கிரவுடு சர்ஃப் (Crowd Surf), போல் டான்ஸ் உள்ளிட்ட நடனங்களை ஆடியும் உலக மக்களின் கவனத்தை இருவரும் ஈர்த்தனர்.

உலக வரலாற்றில், இந்த மாபெரும் 'சூப்பர் பௌல்' நிகழ்ச்சியை வழிநடத்திய முதல் பெண்கள் இவர்களே. அதிலும் பாடல்களுக்கு நடுவே லோபெஸ் என்ட்ரி மிகவும் வித்தியாசமாக இருந்தது. தன்னுடைய பூர்விக நாடான போர்ட்டோரிக்கோ தேசியக் கொடியின் நிறங்கள் ஒருபுறமும், அமெரிக்க நாட்டின் தேசியக் கொடியின் நிறங்களை மற்றொரு பக்கத்திலும் பதித்த செயற்கைச் சிறகு கேப் அணிந்து மேடையில் தோன்றினார்.

Jennifer with her daughter Emme
Jennifer with her daughter Emme
Instagram

லோபெஸின் மகள் எம் மேரிபெல்லும் (Emme Maribel) இவர்களோடு இணைந்து ஒரு பாடலைப் பாடி, இந்நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்கினார்.

நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பு, 'இன்றிரவு உன்னுடன் சேர்ந்து மேடையேறப்போவதை நினைக்கையில் மிகவும் உற்சாகமாக இருக்கிறது.

Jennifer's Post on instagram
Jennifer's Post on instagram
Instagram
கோலா கரடி நெயில் ஆர்ட்... ஆஸ்திரேலியா தீவிபத்துக்கான செரீனாவின் விழிப்புணர்வு முயற்சி!

இரண்டு சிறிய லத்தீன் பெண்கள் என்ன செய்ய முடியும் என்பதை உலகுக்குக் காண்பிப்போம்' என்ற கேப்ஷனோடு தானும் ஷகிராவும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார், லோபெஸ். கேப்ஷனை உண்மையாக்கி, உலக மக்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்துவிட்டனர், இந்தப் பாடும் ராட்சஸிகள்.

பின் செல்ல