Election bannerElection banner
Published:Updated:

`சொல்கிறேன் பக்தா..!' - அஷ்வினின் ட்வீட்டும் நடிகர் சதீஷின் போட்டோ ரிப்ளையும் #Viral

நடிகர் சதீஷ்
நடிகர் சதீஷ்

நித்யானந்தா விவகாரம்தான் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

நித்யானந்தா தென் அமெரிக்கா நாடான ஈக்வடார் அருகே குட்டி தீவை விலைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தத் தீவுக்கு தனி நாடு அந்தஸ்து கேட்டு ஜ.நா சபையை நாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நித்தியானந்தா அந்தத் தீவுக்கு கைலாசா எனப் பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்திய அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் `கைலாசா’ என்ற ஹேஷ்டேக் முதல் 10 இடத்துக்குள் இருக்கிறது.

நித்யானந்தா
நித்யானந்தா
nithyananda youtube channel

Kailaasa.org என்ற இணையத்தில்தான் தனி நாடு உருவாக்கியுள்ளது குறித்து அதற்கான கொடி சின்னம் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. கைலாசா நாட்டுக்காகச் சொந்த பாஸ்போர்ட் உள்ளதாகவும், 'கைலாசா' குடிமகனாக விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைலாசா தொடர்பான அனைத்து தகவல்களையும் அதில் தெரிந்துகொள்ளலாம்.

இந்நிலையில், நித்தியானந்தாவின் கைலாசா தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் கேள்வியும் அதற்கு நடிகர் சதீஷ் அளித்த பதிலும் வைரலாகி வருகிறது. அஷ்வின் ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர். `கைலாசா நாட்டுக்கு விசா எப்படி வாங்குவது? அல்லது அங்கு போய் இறங்கியவுடன் விசா பெறுவதா” என ட்வீட் செய்துள்ளார். அஷ்வின் பதிவுக்கு ஏராளமானவர்கள் பதில் அளித்துள்ளனர். அஷ்வின் நீங்கள் பார்வையிடப்போகிறீர்களா இல்லை அங்கே குடியுரிமை வாங்கப் போகிறீர்களா எனச் சிலர் கமென்ட் செய்துள்ளனர்.

இந்நிலையில், அஷ்வின் பதிவுக்கு நகைச்சுவை நடிகர் சதீஷ் அடித்த கமென்ட் வைரலானது. நித்தியானந்தா போன்று வேடமணிந்த புகைப்படத்தை கமென்ட் பாக்ஸில் பதிவிட்ட சதீஷ், `சொல்கிறேன் பக்தா’ என ரிப்ளை செய்துள்ளார்.

அதற்கு கீழே சிலர். ``பாஸ் அப்படியே இருக்கீங்க பாத்து அரெஸ்ட் பண்ணிடப்போறாங்கன்னு” பதிவிட்டுள்ளனர். இந்தப் புகைப்படமும் அஷ்வின் கமென்டும் வைரலாகி வருகின்றன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு