தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விஷால். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் 'லத்தி'. அறிமுக இயக்குநர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் மற்றும் சுனைனா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்ரமணியம் மற்றும் பாலகிருஷ்ணா தோட்டா ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். இப்படத்தில் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் விஷால் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 'துப்பறிவாளன் 2' படத்தைத் தானே இயக்கி நடிக்கவுள்ளார் விஷால்.
இதனிடையே தன் குடும்பத்துடன் காசிக்குச் சென்றிருந்த விஷால் பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் விஷால், "அன்புள்ள மோடி ஜி, நான் காசிக்குச் சென்றேன். அற்புதமான தரிசனம்/பூஜை செய்து, கங்கை நதியின் புனித நீரைத் தொட்டேன். கோயிலைப் புதுப்பித்து, அதை இன்னும் அற்புதமாகவும், எல்லோரும் எளிதாகத் தரிசனம் செய்யும் வகையிலும் நீங்கள் மாற்றம் செய்திருக்கிறார்கள். அதற்காகக் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் உங்களுக்குத் தலை வணங்குகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.