Published:Updated:

`நாங்கள் அமைதியாகத்தான் பார்த்தோம்' புலி வீடியோ சர்ச்சை... நடிகை ரவீனா டண்டன் விளக்கம்!

புலி வீடியோ சர்ச்சை... நடிகை ரவீனா டண்டன் விளக்கம்!
News
புலி வீடியோ சர்ச்சை... நடிகை ரவீனா டண்டன் விளக்கம்!

ரவீணா, புலிக்கு மிகவும் அருகில் பயணம் செய்கிறார். அந்தப் புலி அவரை நோக்கி உறுமிக்கொண்டே அருகில் வருகிறது. புலி நெருங்கி வரும்வரை புகைப்படம் எடுத்துக்கொண்டே இருக்கிறார்...

இந்தி, தெலுங்கு எனப் பல படங்களில் நடித்துள்ள ரவீனா டண்டன், தமிழில் `ஆளவந்தான்’, `கே.ஜி.எஃப் 2’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர். சமீபத்தில் இவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நடிகை ரவீனா டண்டன்
நடிகை ரவீனா டண்டன்

மத்தியப் பிரதேசம், சத்புரா புலிகள் காப்பகத்தில், சஃபாரி வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும் ரவீனா, புலிக்கு மிகவும் அருகில் பயணம் செய்கிறார். அந்தப் புலி அவரை நோக்கி உறுமிக்கொண்டே அருகில் வருகிறது. புலி நெருங்கி வரும்வரை புகைப்படம் எடுத்துக்கொண்டே இருக்கிறார். புலி அவரைப் பார்த்து உறுமியபடியே வேறு திசையில் செல்கிறது. இதை வீடியோவாகப் பதிவு செய்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 

ஆனால், இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. வனவிலங்குகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் எப்படி இவர்கள் சென்றனர் என்பது குறித்து விசாரிக்கும்படி கோரிக்கைகள் வனத்துறையினருக்குச் சென்றன. 

புலி வீடியோ சர்ச்சை... நடிகை ரவீன டண்டன் விளக்கம்!
புலி வீடியோ சர்ச்சை... நடிகை ரவீன டண்டன் விளக்கம்!

இதைத் தொடர்ந்து அவ்வனத்துறையின் துணைப் பிரிவு அதிகாரி தீரஜ் சிங் சௌகான் கூறுகையில், ``மூத்த அதிகாரிகளின் உத்தரவைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளோம். நவம்பர் 22 -ம் தேதி ரவீனா காப்பகத்துக்குச் சென்றபோது, அவரது வாகனம் புலியின் அருகே சென்றது. வாகன ஓட்டுநர் மற்றும் அப்போது அங்கு பணியில் இருந்த அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு விசாரிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

புலி வீடியோ சர்ச்சை... நடிகை ரவீனா டண்டன் விளக்கம்!
புலி வீடியோ சர்ச்சை... நடிகை ரவீனா டண்டன் விளக்கம்!

இந்தச் சம்பவம் பேசுபொருளானதைத் தொடர்ந்து, ட்விட்டர் பக்கத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரவீனா. அதில், ``புலிகள் எப்போது எப்படி நடந்துகொள்ளும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. இது வனத்துறையின் உரிமம் பெற்ற வாகனம், வழிகாட்டிகளும் ஓட்டுநர்களும் பயிற்சி பெற்றவர்கள், அவர்களுக்கு எல்லைகள் மற்றும் சட்டங்கள் தெரியும்.

புலிகள் நடமாடும் இடத்துக்கு அவை ராஜாக்கள். நாங்கள் அமைதியான பார்வையாளர்கள். எந்தத் திடீர் அசைவுகளும் அவற்றைத் திடுக்கிடச் செய்யலாம். ஆனால், நாங்கள் ஏதும் செய்யாமல், அமைதியாகப் புலிகளைப் பார்த்துக்கொண்டே நகர்ந்தோம். நாங்கள் சுற்றுலாப் பாதையில் இருந்தோம், அங்கு இந்தப் புலிகள் கடந்தது. இந்த வீடியோவில் கேடி (katy) என்ற புலி, வாகனங்களுக்கு அருகில் வந்து உறுமுவது வழக்கமானது’’ என்று தெரிவித்துள்ளார். 

இந்தச் சம்பவத்துக்கு ஒருபுறம் கடும் எதிர்ப்புகள் இருந்தபோதும், மறுபுறம் பிரபலம் என்பதால் இந்த விஷயத்தை இவ்வளவு பெரிய விஷயமாக்குகிறார்கள் என ஆதரவும் இருந்து வருகிறது.