Published:Updated:

ஜி.வி.பிரகாஷ் பாட, இளைஞர்கள் ஆட்டம் போட... மாஸான `ஆதலினால் காதல் செய்வீர்' டைட்டில் பாடல்!

ஜிவி பிரகாஷின் மனம் மயக்கும் குரலும், நித்திஷின் அழகியல் வார்த்தைகளும், சந்தோஷின் துள்ளல் இசையும் கலந்த சியர்ஃபுல் காக்டெய்ல் பாடல்!

"ஹே நண்பா...

நேத்து நாளை கவலை இல்ல...

இன்று மட்டும் போதுமே!

ஹே நண்பா...

கடலும் மணலும் போலவே

சேர்ந்திருப்போம் எப்போதுமே..."

இப்படித்தான் தொடங்குகிறது 2கே கிட்ஸின் நட்பின் ஆன்மாவாக வெளியாகியிருக்கும் `ஆதலினால் காதல் செய்வீர்' டிஜிட்டல் டெய்லி சீரிஸின் டைட்டில் பாடல். இந்த பாடலின் வரிகள் போலவே `விகடன் டெலிவிஸ்டாஸ்' மற்றும் `மோஷன் கன்டென்ட் குரூப்' இணைந்து வழங்கும் இந்த சீரிஸும் செம கலர்ஃபுல் கலாட்டாதான்!

அபாரமான தத்துவார்த்தமும், வாழ்வியல் யதார்த்தமும் இணைகிற புள்ளியில் நித்திஷ் இந்தப் பாடலை எழுத, அதே எனர்ஜியில் ஜி.வி.பிரகாஷ் பாடியிருப்பது சூப்பர் ஸ்பெஷல். நித்திஷ் அள்ளித் தந்த அத்தனை வார்த்தைகளிலும் கண் சிமிட்டிச் சிரிக்கிறது நட்பின் ஆத்மார்த்தம்.

ஆதலினால் காதல் செய்வீர்
ஆதலினால் காதல் செய்வீர்

"பிரிவு கொஞ்சம்

பிரியம் கொஞ்சம்

எல்லாம் கலந்த

உறவு இது"

இவ்வளவு ஜாலியான ஃபீலிங்கான ஒரு பாடலைக் கேட்டு ரொம்பவே நாளாச்சு. அதனாலேயே பாடலின் சூழல் குறித்த கற்பனைகள் சுகமாக, இதமாக கண்முன் வந்தமர்கின்றன.

அன்பு பொங்கினால் 'ஏர்'ல மிதக்கிறதும், சண்டை வந்தால் 'பீர்'ல மிதக்கிறதுமாக இருக்கும் இளைஞன், பிராக்டிகலும் ஃபீலிங்கும் கொட்டிப் பாடினால் எப்படியிருக்கும்... அப்படியிருக்கிறது பாடல்!

"கனவு கொஞ்சம்

கண்ணீர் கொஞ்சம்

சேர்ந்ததே நெஞ்சம் நிறையுதே..."

- நித்திஷ் அழகான வரிகளை பிரசவிக்க, ஜி.வி. பாடிய விதத்தில் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். அந்த வரிகளுக்கு தன் துள்ளலான இசை மூலம் உயிர் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ்.

"go with the flow... நம்ம வாழ்க்கையாச்சு

commitment-டு no... இதுதாங்க பேச்சு

2k உலகம் ரொம்ப மாறிப்போச்சு

too much drama shift delete-டும் ஆச்சு"

ஆதலினால் காதல் செய்வீர்
ஆதலினால் காதல் செய்வீர்

என்று மில்லினியல்ஸின் வாழ்க்கைச் சூழலை எல்லோருக்கும் புரிய வைக்கிறது பாடல். அதேசமயம் வாழ்க்கைமுறை மாறினாலும் உணர்வுகள் மாறவில்லை என்பதைக் கோடிட்டும் காட்டுகிறது பாடல்.

"ஹே பாய்ஸும், கேர்ள்ஸும் பேதம்

அது தேவை இல்லை போடா

ஃப்ரெண்ட்ஷிப் தானே வேதம்

நாம் வாழ்ந்து களிக்கலாம் வாடா!"

- என்று இந்தப் பாடல் இளமைக்கான டெடிக்கேஷன்!

ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட இந்த டைட்டில் பாடலின் வீடியோவை விகடன் டெலிவிஸ்டாஸ் யூடியூப் பக்கத்தில் காணலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு