Published:Updated:

ஹே நண்பா… மெல்லிசை இளைஞன் ஜி.வி.பிரகாஷ் குரலில் `ஆதலினால் காதல் செய்வீர்’ டைட்டில் பாடல்!

பாடலைப் பாடி முடித்ததுடன் நிற்காமல், தன் பணி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஜி.வி.பிரகாஷ் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து அந்த டைட்டில் பாடல் காட்சியில் நடித்தும் தந்தது அவரின் பிரியத்தின் வெளிப்பாடு.

தமிழ் சினிமாவின் மெல்லிசை இளைஞன் ஜி.வி.பிரகாஷ். உற்சாகமான துள்ளல் இசையா, மனதை உருக்கும் மந்திர இசையா... எல்லா ஜானரிலும் ஜிவி பிரகாஷின் தனித்துவம் மிளிரும். ஒரு பாடலின் வரிகள் அவரின் குரலில் குழைந்து வரும்போது, அந்தப் பாடலில் உணர்ச்சிகள் இழைந்திருக்கும்.

'விகடன் டெலிவிஸ்டாஸ்' மற்றும் 'மோஷன் கன்டென்ட் குரூப்' இணைந்து வழங்கும், 'ஆதலினால் காதல் செய்வீர்' டிஜிட்டல் டெய்லி சீரிஸின் டைட்டில் பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியிருக்கிறார். வெப் சீரிஸ் ஒன்றில் ஜி.வி.பிரகாஷ் பாடுவது இதுவே முதல்முறை.

‘ஹே நண்பா...

நேத்து நாளை கவலை இல்ல...

இன்று மட்டும் போதுமே!

ஹே நண்பா...

கடலும் மணலும் போலவே

சேர்ந்திருப்போம் எப்போதுமே...'

ஆதலினால் காதல் செய்வீர்
ஆதலினால் காதல் செய்வீர்

கலர்ஃபுல் கலாட்டாவாக வெப்சீரிஸில் பதிவாகியிருக்கும் துள்ளலும் துடிப்புமான இந்த வரிகளை ஜி.வி.பிரகாஷ் தன் வசீகரக் குரலில் பாட, பாடலின் இனிமை இன்னும் கூடியிருக்கிறது. சிறந்த காதலர்களால் நல்ல நட்பை புரிந்து கொள்ள முடியும். எல்லா நட்பும் காதலாக மலர்ந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. காதல் புனிதமா, சுகமா, சித்திரவதையா, பொழுதுபோக்கு விஷயமா எனக்கேட்டால் எல்லாம் சேர்ந்தது என சிலர் சொல்லலாம். அது எப்படி என ‘ஆதலினால் காதல் செய்வீர்' அணிவகுத்துச் சொல்லும்.

பாடலைப் பாடி முடித்ததுடன் நிற்காமல், தன் பணி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஜி.வி.பிரகாஷ் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து அந்த டைட்டில் பாடல் காட்சியில் நடித்தும் தந்தது அவரின் பிரியத்தின் வெளிப்பாடு.

தன் இசையைப் போலவே இயல்பிலும் ஈரம் கொண்டவர் ஜி.வி.பிரகாஷ். கஜா புயல் டெல்டா மாவட்டங்களைத் தாக்கியபோது, களத்தில் இறங்கி நிவாரணப் பணிகள் செய்தவர். அரசுப் பள்ளிகளைக் காப்பாற்றும் இயக்கத்திலும் கைகோத்தவர். ஜல்லிக்கட்டு உரிமைக்காக வீதியில் இறங்கி குரல் கொடுத்தவர்.

ஜி.வி.பிரகாஷ் குமார்
ஜி.வி.பிரகாஷ் குமார்

தமிழ் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக, எளியவர்களுக்கு உதவ எப்போதும் முன் நிற்கும் ஜி.வி.பிரகாஷ், இந்தப் பாடலுக்காகப் பெற்ற ஊதியத்தை ஏழை மாணவி ஒருவரின் முதுகலைப் படிப்புச் செலவுக்குத் தந்துவிட்டார். அந்த வகையில் அர்த்தமுள்ள ஒரு விளைவை இந்தப் பாடல் வெளியாவதற்கு முன்பே தந்துவிட்டது.

உயிர் ததும்பும் இந்த 'ஆதலினால் காதல் செய்வீர்' டைட்டில் பாடலின் வீடியோவை இன்று இரவு 8.30 மணிக்கு ஜி.வி.பிரகாஷ் வெளியிடுகிறார். விகடன் டெலிவிஸ்டாஸ் யூடியூப் பக்கத்தில் இந்தப் பாடலை காணலாம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு