Published:Updated:

இருவரி கொலைகள்! - இரு துருவம்

Nandha Durairaj, Abhirami
பிரீமியம் ஸ்டோரி
Nandha Durairaj, Abhirami

திருக்குறள் ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்ய வைக்கும் ? சோனிலைவ்வில் வெளியாகியிருக்கும் ‘இரு துருவம்’வெப் சீரிஸ், கொலை செய்ய வைக்கும் என்கிறது.

இருவரி கொலைகள்! - இரு துருவம்

திருக்குறள் ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்ய வைக்கும் ? சோனிலைவ்வில் வெளியாகியிருக்கும் ‘இரு துருவம்’வெப் சீரிஸ், கொலை செய்ய வைக்கும் என்கிறது.

Published:Updated:
Nandha Durairaj, Abhirami
பிரீமியம் ஸ்டோரி
Nandha Durairaj, Abhirami

ரு சைக்கோபாத், ஒவ்வொரு கொலைக்கும் ஒரு திருக்குறளை எழுதி வைக்கிறான். ஒரு பக்கம் இப்படி `தொடர்கொலை யாய்' நடந்துகொண்டிருக்க , தன் மனைவியைத் தேடிக்கொண்டிருக்கிறார் ஒரு இன்ஸ்பெக்டர்.

யார், யாரிடம் அகப்படு கிறார்கள், இன்ஸ்பெக்டரின் மனைவிக்கு என்ன ஆனது, கொலையாளியின் கதி என்ன போன்ற கேள்வி களுக்குக் கொஞ்சம் பதில், கொஞ்சம் `பார்ட் 2' என பதில் சொல்கிறது `இரு துருவம்.

இரு துருவம்
இரு துருவம்

எப்போதும் இறுக்கமாகவே இருக்கும் போலீஸ் அதிகாரி விக்டர் செல்லதுரையாக நந்தா. அவரின் ‘மான்டேஜ்’ மனைவி கீதாவாக ‘பிக்பாஸ்’ அபிராமி வெங்கடாசலம். சப் இன்ஸ்பெக்டர் கிஷோராக ‘டெம்பிள் மங்கீஸ்’ அப்துல். மனைவியைத் தொலைத்துவிட்டு மகளோடு அனுதாபமாக நிற்கும் வேடம் நந்தாவுக்கு. கொலையாளியைத் தேடுவதில் அவர் காட்டும் ஆர்வமும், அடுத்தடுத்து கொலைகள் நடக்கும்போது, அவர் காட்டும் பதற்றமும் ஒருகட்டத்தில் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. நந்தாவுக்கும், சைக்கோவுக்குமான கண்ணாமூச்சி ஆட்டமும், அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்ய ட்விஸ்டுகளும் `அட’ சொல்ல வைக்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போலீஸ் கதாபாத்திரத்துக்கு அட்டகாசமாகப் பொருந்தினாலும், ரொமான்ஸ் காட்சிகளில் நந்தா காட்டும் ஓவர் இறுக்கம் ஒருகட்டத்தில் ‘அட, லூஸ் விடுங்க ப்ரோ’ எனச் சொல்ல வைக்கிறது. டைட்டில் கிரெடிட்ஸ் போல் ஒவ்வொரு எபிசோடிலும் சில நொடிகள் மட்டுமே தோன்றுகிறார் அபிராமி. அடுத்த சீசனில் அவருக்கான காட்சிகள் இருக்கும் போல. காமெடியாகவே இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் ஓவர்டோஸாகிறது அப்துலின் புது மனைவி காமெடிகள். அதே போல், எல்லாவற்றுக்கும் ‘வாவ் சார்’, `அட்டகாசம் சார்’ எனச் சொல்லிக்கொண்டே இருப்பது அபூர்வ சகோதரர்கள் `எங்கயோ போயிட்டீங்க சாரை' நினைவுபடுத்துகிறது.

வெப் சீரிஸ்
வெப் சீரிஸ்

சென்சார் இல்லை என்பதால், கொலை செய்யப்பட்ட உடல்களை அதீத க்ளோசப் ஷாட்டுக்கு உட்படுத்துயிருக்கிறார்கள் . சில காட்சிகள் ‘கெதக்’ என்றிருக்கிறது. ஒவ்வொரு கொலையும் ஒவ்வொரு மாடலில் நடக்கிறது. கண், மூக்கு, தொண்டை என மருத்துவர் போல் உறுப்புகளைத் துளைத்தெடுத்து நடக்கும் கொலைகள் தமிழ்க்களத்துக்குப் புதிது. படத்தின் மையக்கரு கொலைகளும், அதற்கான காரணங்களும்தான். இதற்கெல்லாமா கொலை செய்வார்கள் என யோசித்தால், சைக்கோ கொலைகாரர்கள் பெரிதாக லாஜிக் எல்லாம் பார்ப்பதில்லை என்கிற நிதர்சனத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது.

சைக்கோபாத் கில்லராக செபஸ்டின் ஆன்டனி. அந்தக் கதாபாத்திரத்துக்கான முன்கதைச் சுருக்கம் பன்னெடுங்காலமாய்ப் பார்த்ததுதான் என்றாலும், மீண்டும் மீண்டும் பெற்றோர்கள் இந்தச் சமூகத்தில் எவ்வளவு முக்கியம் என்பதைப் பார்வையாளர்களின் முகத்தில் அறைகிறது. இந்தச் சமூகம் இப்படியானவர்களை எப்படிக் கையாள வேண்டும் என்னும் கேள்வியையும் நம்முன் வைக்கிறது.

அதே சமயம், 2000 ஆண்டுகளாய் திருக்குறள் ஒரு மனிதனைப் பண்படுத்தும் எனச் சொல்லிவிட்டு, தமிழ் ஆசான்போல் திருக்குறள் பயிலும் ஒருவன், அதனால் ஈர்க்கப்பட்டுக் கொலை செய்வதும் , திருக்குறள்களையே அங்கு எழுதிவைப்பதும் திரைக்கதை சாமர்த்தியம் என்றாலும், `ஏன் பாஸ் இப்படியெல்லாம், திருவள்ளுவர் பாவம்' எனச் சொல்ல வைக்கிறதுசூர்யபிரசாத்தின் இசையும், ராஜா.K. பக்தவத்சலத்தின் ஒளிப்பதிவும் த்ரில்லர் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்த வைக்கிறது. அடுக்கடுக்கான சஸ்பென்ஸ் காட்சிகளோடு விறுவிறுப்பாக கதை சொல்லி இருக்கிறார் M.குமரன். முதல் சீசன் இறுதியில் இருக்கும் ட்விஸ்டும், இரண்டாம் சீசனுக்கான லீடும் ஸ்மார்ட்டாக இருப்பதால், ‘கககபோ’ சொல்ல வைக்கிறான் இந்தக் கொலைகாரன்.