கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

பாடாய் படுத்தும் பஞ்சாயத்து!

WEB SERIES
பிரீமியம் ஸ்டோரி
News
WEB SERIES

WEB SERIES

வெப் சீரீஸ்
வெப் சீரீஸ்

குட்டி இன்ட்ரோ!

பொறியியல் படித்து முடித்த அபிஷேக்குக்கு கார்ப்பரேட் வேலை ஜஸ்ட் மிஸ்ஸாக, அரசு வேலைக்கு விண்ணப்பிக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் பூலேரா கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவருக்குக் கீழ் பணிபுரியும் செயலாளர் வேலை. வேண்டா வெறுப்பாக கிராமம் வந்து சேர்ந்தால், அங்கு பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட தலைவர் பதவியில் மனைவியை வெல்ல வைத்துவிட்டு பதவிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறார் ப்ரிஜ் பூஷன் டூபே. எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல், CAT தேர்வுக்குத் தயாராகலாம் என்றால், இரவில் மின்சாரம் இல்லாதது அபிஷேக்கைச் சோதிக்கிறது. கிராமம் தரும் சவால்களைச் சமாளித்து MBA படிப்புக்கு பாஸ் ஆகிறாரா அபிஷேக் என்பது தான் ‘பஞ்சாயத்து’ வெப் சீரீஸின் ஒன்லைன்.

ஸ்டார்ஸ்

29 வயதான ஜீத்தேந்திர குமார்தான் பஞ்சாயத்தின் ஹீரோ. வெப் சீரிஸ் பிளாட்பாரங்களில் பார்த்துப் பழகிய ரயில்தான். இந்த ஆண்டு ஆயுஷ்மான் குரானாவுடன் இவர் ஜோடி போட்ட `சுப் மங்கள் ஜியாதா சாவ்தான்’ படத்தால் பலரது ஃபேவரைட் சாய்ஸாக மாறியிருக்கிறார். பாலிவுட்டின் சரண்யா பொன்வண்ணனான (அதாங்க என்றென்றும் அம்மா) நீனா குப்தா தான் பஞ்சாயத்துத் தலைவி. வரும் காட்சிகளில் எல்லாம் அப்ளாஸ் அள்ளுகிறார்.

 வெப் சீரிஸ்
வெப் சீரிஸ்

ப்ரிஜ் பூஷனாக நடித்திருக்கும் ரகுபீர் யாதவ் நல்லவரா கெட்டவரா தெர்லயேப்பா கதாபாத்திரம். தலைவர் என்னும் அதிகார போதையில் மனைவியை நிற்க வைத்துவிட்டு ஓரங்கட்டும் வில்லன் என நினைத்தால்; தலைவர் பதவி மட்டும்தான் என் டார்கெட், மத்தபடி நான் அம்மாஞ்சாமி என ஒதுங்கிக்கொள்கிறார். வெப் சீரிஸ் சர்ப்ரைஸ் பேக்கேஜ் அபிஷேக்கின் உதவியாளராக வரும் சந்தன் ராயும், ஊர் மக்களும்தான். அந்த வெள்ளந்தி மனிதர்கள் அபிஷேக்கைப் படுத்தும் பாட்டில், நமக்கே ஒரு கட்டத்தில், ‘தப்பிச்சு எங்கேயாவது ஓடிவிடு’ எனச் சொல்ல வைக்கிறது.

திரைக்குப் பின்னால்

பஞ்சாயத்து அலுவலத்தைப் பார்த்தால் “அப்படியே இருக்குப்பா” எனதான் தோன்றும். ஏனெனில், உண்மையிலேயே அது ஒரு கிராமத்திலிருக்கும் பஞ்சாயத்து அலுவ லகம். பஞ்சாயத்துத் தலைவரின் வீட்டையும் செட் போடாமல், அவ்வூரில் இருக்கும் பஞ்சாயத்துத் தலை வரின் வீட்டில் அனுமதி பெற்று எடுத்திருக்கிறார்கள். இது கதையல்ல நிஜம் ப்ரோ.

 வெப் சீரிஸ்
வெப் சீரிஸ்

ஒத்த அலைவரிசை படைப்புகள்

நியூட்டன் (இந்தி) படம்

உண்டா (மலையாளம்) படம்

ஆர்ட்டிக்கிள் 15 (இந்தி) படம்

லைக்ஸ்

இந்திய வெப் சீரிஸ் என்றாலே கொலை, கொள்ளை, அடல்ட் காட்சிகள், வசவுச் சொற்கள் என்பதுதான் அடையாளம் என்பதை மாற்றி ஒரு கிராமத்துக் கதையை இயல்பாகச் சொல்லியிருப்பதுதான் பஞ்சாயத்தின் முதல் ப்ளஸ். பஞ்சாயத்துத் தலைவர்தான் உலகம் என நம்பும் மக்கள், அக்‌ஷய் குமார் மகன் பெயர்தான் தன் மகனுக்கும் பெயராக இருக்க வேண்டும் என நினைக்கும் ஊர்க்காரர், ஊரின் அதிகபட்ச லஞ்சம் என்பதே ஒரு சுரைக்காய்தான். எல்லாவற்றிலும் எனக்குக் கொஞ்சம் எனக் கேட்கும் துணைப் பஞ்சாயத்துத் தலைவர் என இந்த க்வாரன்டீன் காலத்தில் நம்மை விட்டுத் துண்டித்துப்போன ஒரு கிராமத்தை அழகுறப் பதிவு செய்திருக்கிறார்கள்.

 வெப் சீரிஸ்
வெப் சீரிஸ்

ஒவ்வொரு எபிசோடும் ஒரு கதை, 8 எபிசோடுகள். மொத்தமாகவும் பார்க்கலாம், ஏதேனும் ஒரு எபிசோடினை இடையில் விட்டாலும் கதை புரியும் போன்ற பல ப்ளஸ்களில் திளைக்கிறது பஞ்சாயத்து.

டிஸ்லைக்ஸ்

400 பேர்கூட இல்லாத கிராமத்தில், ட்விஸ்ட்டை இறுதிவரை இழுத்துச் செல்வது; ஒரு பஞ்சாயத்தின் செயலாளரை இப்படித்தான் கிராமங்களில் டீல் செய்வார்களா எனத் தோன்றும் சில கேள்விகள் தான் கொஞ்சம் உறுத்தல்.

 வெப் சீரிஸ்
வெப் சீரிஸ்

மூன்று முடிச்சு பாக்யராஜ், வாகை சூட வா விமல் என நாம் பல ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த கிராமத்து செட்டப்பில் கதை நகர்வது கொஞ்சம் அலுப்பாக இருக்கிறது. நாம் முன்னேறி விட்டோம் என்பதும், உத்தரப்பிரதேசம் போன்ற பின்தங்கிய மாநில கிராமங் களில் இருப்பவர்கள் குடும்பக் கட்டுப்பாடு குறித்த அறிவுகூட இல்லாமலிருப் பதுமே அதன் காரணம்