Published:Updated:

சில நேரங்களில் சில மனிதர்கள்!

WEB SERIES
பிரீமியம் ஸ்டோரி
News
WEB SERIES

WEB SERIES

சில நேரங்களில் சில மனிதர்கள்!

'மெர்சர்' என்ற அந்தக் கற்பனை நகரின் அடியில் இயங்குகிறது 'லூப்' என்ற அறிவியல் ஆய்வுக்கூடம். அங்கே நடத்தப்படும் வினோத ஆராய்ச்சிகள் மனிதர்களின் வாழ்வை எப்படி மாற்றுகின்றன என்பதுதான் 'டேல்ஸ் ஃப்ரம் தி லூப்' (Tales From The Loop) தொடரின் ஒன்லைன்.

சில நேரங்களில் சில மனிதர்கள்!

ன் தாயின் அறிவியல் ஆராய்ச்சியின் விளைவாக ஒரு குட்டிப் பெண், தன் 30+ வயது எதிர்கால வெர்ஷனுடன் ஒன்றாக வாழத் தொடங்குகிறாள்.

சில நேரங்களில் சில மனிதர்கள்!

ரு கருவியின் மூலம் தங்களின் உடல்களை எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்கிறார்கள் இரண்டு டீன்ஏஜ் சிறுவர்கள். அவர்களில் ஒருவர் மீண்டும் தன் பழைய உடலைப் பெற மறுத்துவிட, பிரச்னை ஆரம்பமாகிறது.

சில நேரங்களில் சில மனிதர்கள்!

ரு டீன்ஏஜ் பெண் ஒரு கருவியால் காலத்தை நிறுத்தி வைத்துவிட்டு, தன் காதலனுடன் வாழத் தொடங்குகிறாள். ஆனால், ஒரு கட்டத்தில் அதுவே பிரச்னையாகிவிடுகிறது.

சில நேரங்களில் சில மனிதர்கள்!

றப்பு எப்போது எனச் சொல்லும் கருவி ஒன்றை தன் பேரனுக்கு அறிமுகப் படுத்தும் தாத்தா, தன்னை மரணம் நெருங்கிவிட்டதாகத் தெரிவிக்கிறார். இழப்புகளை ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்.

சில நேரங்களில் சில மனிதர்கள்!

ன் மகனை இழந்துவிட்ட அப்பா, தன் மகளையும் மனைவியையும் பாதுகாக்க ரோபோ ஒன்றை வாங்குகிறார். அதுவே அவருக்கு மனநோயைத் தந்துவிடுகிறது.

வேறொரு உலகுக்குத் தள்ளப்படும் ஒருவன், அங்கே தன்னைப் போலவே ஒருவன், தான் வாழ நினைத்த கனவு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வதைப் பார்க்கிறான். வருகின்றன பொறாமையும் மனக்கசப்பும்!

கொடூர மிருகம் வாழும் தீவில் மாட்டிக்கொண்ட சிறுவன் ஒரு கையை இழக்க நேரிடுகிறது. தன் 35+ வயது வரை செயற்கைக் கையோடு வாழும் அவன் அந்த மிருகத்தை மீண்டும் சந்திக்க முயல்கிறான்.

சில நேரங்களில் சில மனிதர்கள்!

ப்ளஸ்/மைனஸ்

வ்வொரு எபிசோடும் புதுப்புதுக் கதாபாத்திரங்கள். அனைவரும் ஒரே நகரின் மனிதர்கள் என்பதால் ஒருவர் மற்றொருவரின் கதையிலும் இடம்பெறுகிறார்கள். அவர்கள் வாழ்வின் மாற்றங்களுக்குக் காரணிகளாகவும் அமைகிறார்கள். இப்படி ஒரு சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்புடன் விரியும் கதைகளின்மீது தானாகவே ஆர்வம் தொற்றிக்கொள்கிறது. பின்னணி இசையும் பாடல்களும் சில்லென்ற மழைச்சாரலில் நனைந்த மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. ஸ்வீடனைச் சேர்ந்த ஓவியர் ஒருவர் வரைந்த ஆர்ட் புத்தகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாலோ என்னவோ, நகரைக் காட்டும் ஒவ்வொரு ஷாட்டும் அழகான ஓவியம்போல ஒளிர்கிறது. லூப்பை நடத்தும் தாத்தா வேடத்தில் வரும் ஜோனதன் பிரைஸ் (‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ஹை ஸ்பேரோ) மற்றும் அவரின் மருமகளாக வரும் ரெபெக்கா ஹால் (‘தி பிரஸ்டீஜ்’ மற்றும் ‘அயர்ன்மேன் 3’ புகழ்) இருவரும்தான் நமக்குச் சற்றே பரிச்சயமான நடிகர்கள். இருந்தும் கோல் எனும் சிறுவனாக வரும் டன்கன் ஜாய்னர், கேடிஸாக வரும் அடொ எஸ்ஸாண்டோ போன்றோரும் தனி முத்திரை பதிக்கின்றனர். தான் இறக்கப்போகிறோம் என்பதை அறிவித்துவிட்டு, பின்னர் இரவின் இருளில் உடைந்து அழும் காட்சியில் எல்லோரையும் ஓரங்கட்டிவிடுகிறார் சீனியர் ஜோனதன் பிரைஸ். இப்படியான நெகிழ்வான காட்சிகள் ஒவ்வொரு எபிசோடிலும் அமைந்திருப்பது சிறப்பு.

சில நேரங்களில் சில மனிதர்கள்!

ன் அண்ணனைத் தேடும் சிறுவன் நீரோடை ஒன்றைக் கடக்கையில் பல வருடங்கள் மாயமாகக் கடந்துவிடுகின்றன. வயதான அவனின் அம்மா சிறுவனாகவே திரும்பி வரும் இவனை அணைத்துக்கொள்கிறாள்.

சில நேரங்களில் சில மனிதர்கள்!

ரு எபிசோடில் நிகழ்ந்த அறிவியல் ரீதியான மாற்றத்தை இன்னொரு எபிசோடு வரை கொண்டு செல்லாமல் இருப்பது புத்திசாலித்தனம்தான்; ஆனால், லாஜிக் ஆங்காங்கே அடி வாங்குகிறதே பாஸ்! ஒவ்வொரு எபிசோடையும் கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கு இழுக்காமலிருந்திருக்கலாம். இடையிடையே வரும் ஒருசில தேவையற்ற காட்சிகளை 2x ஸ்பீடில் ஓட்டினாலும் அதே ஃபீல்தான். ஆனாலும், ஏதோ ஒரு மழைநாளில் ‘லூப்’ மனிதர்களின் இந்தக் கதைகளை ஒரு கப் காபியுடன் தாராளமாக ரசிக்கலாம்.