Published:Updated:

Brand New Cherry Flavor: ஏன்பா பூனையை வெச்சுலாமா ஹாரர் சீரிஸ் எடுப்பீங்க?! #NotForAll

Brand New Cherry Flavor
News
Brand New Cherry Flavor ( Netflix )

"இதற்கு மேல் பூனைகள் முடியாது என லீசா சொல்ல, மறுப்பேதும் சொல்லாமல் போரோ அதை ஏற்றுக்கொள்வது ஸ்வீட் சர்ப்பரைஸ் என்றால், அதற்கு அடுத்து வரும் பூனை வேறு லெவல் ஹாரர்.

சினிமா வாய்ப்புத் தேடி அலையும் ஒரு பெண், மாந்திரீக விஷயத்தில் உள் நுழைந்து தன்னையும், தன் சுற்றத்தாரையும் சீரழித்துக்கொள்ளும் கதைதான் நெட் ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் #BrandNewCherryFlavor
Brand New Cherry Flavor
Brand New Cherry Flavor
netflix

சினிமா ஆரம்பித்த காலம் தொட்டு, ஹாரர் பாணியிலான படங்கள் வந்துகொண்டு தான் இருக்கின்றன. லைட்டை அணைத்துவிட்டு திகிலைக் கிளப்பும் ஹாரர்கள் ஒரு வகை என்றாலும், பார்ப்பதற்கே நம்மை அருவருக்க வைக்கும் ஹாரர் சினிமாக்கள் ஒரு வகை. #BrandNewCherryFlavor வெப் சீரிஸ் இதில் நீங்கள் எதிர்பார்த்தபடியே இரண்டாவது வகை. Disgusting ஹாரர்கள் என ஒரு வகை உண்டு. ஆங்கிலம் தவிர்த்து பிற மொழிகளில் இப்படியான படங்கள் அதிகம். சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளியான Fear Street தொடர் படங்கள்கூட slasher ஹாரர் வகைதான். அதாவது ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஹாரர். சரி, #BrandNewCherryFlavor கதைக்கு வருவோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஒரு குரூரமான ஹாரர் குறும்படத்தை எடுத்த லீசா நோவா, தனது முதல் படத்தை இயக்க வாய்ப்புத் தேடி லாஸ் ஏஞ்சலீஸ் வருகிறார். லோ பூர்க் என்னும் தயாரிப்பாளர் லீசாவின் குறும்படத்தைப் பாராட்டி திரைப்படமாக மாற்ற முன்வருகிறார். ஆனால், சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளால் வேறு முடிவுகளை எடுக்கிறார் லோ பூர்க். போரோ என்னும் மந்திரிக்காரியாய் சந்திக்கும் லீசா, பழிவாங்க காய் நகர்த்துகிறார். அடுத்தடுத்த திருப்பங்கள், பாவங்களும் பழிகளும், கொலைகளும் இரு பக்கமும் நிகழ்கின்றன. இறுதியில் லீசா தனக்கு எதிராக பின்னப்பட்ட வலையில் இருந்து எப்படி மீள்கிறார் என்பதை எட்டு எபிசோடுகளாக எடுத்திருக்கிறார்கள். டோட் கிரிம்ஸன் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது.

Brand New Cherry Flavor
Brand New Cherry Flavor

லீசா நோவாவாக ரோசா சலாசர். அலிட்டா பேட்டில் ஆஞ்சல் திரைப்படத்தில் அலிட்டாவாக கலக்கியவருக்கு இதிலொரு வேற லெவல் ரோல். மிரட்டியிருக்கிறார். மிகவும் அருவருப்பாகப் பார்க்கப்படும் ஒரு காட்சியை அவர் ஒரு கட்டத்தில் ஜஸ்ட் லைக் தட் செய்ய ஆரம்பித்துவிடுகிறார். போரோவாக கேத்ரின் கீனர். இவ்வளவு ஆத்மார்த்தமாக சாந்தசொரூபியான சூனியக்காரியை இதற்கு முன்பு பார்த்ததில்லை. அவ்வளவு கூலாக நடித்திருக்கிறார். ஹாலிவுட்டின் கோல்டன் குளோப் கனவு கண்ணன் ராயாக ஜெஃப் வார்டு. மார்வெல்ஸ் ஏஜென்ட்ஸ் ஆஃப் ஷீல்டு போன்ற தொடர்களில் நடித்திருந்தாலும், வார்டுக்கு இதிலொரு முக்கியமானதொரு வேடம். நார்கோஸில் CIAவாக வரும் எரிக் லேஞ்சுக்கு இதில் தயாரிப்பாளர் வேடம். தொடரின் முக்கியமான கதாபாத்திரங்கள் என்றால் இவர்கள்தான். இவர்களைத் தாண்டி மிக முக்கியமான கதாபாத்திரங்கள் என்றால் பூனைகள் தான். (ஸ்பாய்லர்கள்).

"இதற்கு மேல் பூனைகள் முடியாது" என லீசா சொல்ல, மறுப்பேதும் சொல்லாமல் போரோ அதை ஏற்றுக்கொள்வது ஸ்வீட் சர்ப்பரைஸ் என்றால், அதற்கு அடுத்து வரும் பூனை வேறு லெவல் ஹாரர். மீண்டும் பழைய நிலையிலேயே பூனைகள் இருக்கலாம் என லீசா சொல்லும் அளவுக்கு அந்தக் காட்சியை படமாக்கியிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'யாருதாண்டா பேய்' என்கிற கேள்வியை கடைசிவரையில் சஸ்பென்ஸுடன் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதுவும் அந்தக் குறும்படம் ஏன் எல்லோரையும் திகிலூட்டுகிறது என்கிற கேள்விக்கான புதிரையும் முடிந்த மட்டும் இழுத்திருக்கிறார்கள். ஜெஃப் ருஸோவின் இசை பல இடங்களில் பயமுறுத்துகிறது. அந்தக் கால படங்களின் லைட்டிங், வித்தியாசமான கட்ஸ் என பல விஷயங்களில் ஒரு வித்தியாசமான ஹாரர் சினிமா பார்த்த உணர்வைத் தருகிறது இந்தத் தொடர்.

#BrandNewCherryFlavor எல்லோருக்குமான ஹாரர் திரைப்படம் அல்ல. மேலே குறிப்பிட்டது போல், இந்த குறிப்பிட்ட ஜானர் பார்ப்பவர்கள் தாராளமாய் இந்தத் தொடரை க்ளிக் செய்யலாம். மற்றவர்கள் டோன்ட் விசிட் என்பதே அட்வைஸ்.