Published:Updated:

''செல்லம் சார் 'வலிமை’ அப்டேட் கிடைக்குமா?'' - கூகுளே கண்டு நடுங்கும் இந்த செல்லம் சார் யார்? #Memes

அமேசான் ப்ரைம் வீடியோவின் 'தி ஃபேமிலி மேன்' சீசன் 2-ல் சில காட்சிகளில் மட்டுமே வரும் 'செல்லம் சார்'க்கு ரசிகர் படை உருவாகியிருக்கிறது. யார் இவர்? அவர் குறித்து பகிரப்படும் மீம்ஸ் இதோ...

“நீங்க யாரு? பாம்பேல நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க?” இந்த மாஸ் ஓப்பனிங் இவருக்கு நன்றாகவே பொருந்தும். மும்பையில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய உதய் மகேஷ் நடிகராக, இயக்குநராக திரைத்துறையில் தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார். விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான ‘ஆபீஸ்’ தொடரின் விஸ்வநாதன் கதாபாத்திரத்தின் மூலம் இவர்இவர் மிகவும் பிரபலமடைந்தார்.

‘மூடர்கூடம், ‘இமைக்கா நொடிகள்’, ‘நேர்கொண்ட பார்வை’ உட்பட பல வெற்றி படங்களில் சிறந்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார். சமீபத்தில் அமேசான் ப்ரைமில் வெளியாகி கலவையான விமர்சனங்களையும், பல்வேறு சர்ச்சைகளையும் சமாளித்து வரும் ‘தி ஃபேமிலி மேன் சீசன் - 2’ வெப் சீரிஸில் சமந்தா, அழகம் பெருமாள், மைம் கோபி, ப்ரியாமணி உட்பட பல பிரபல கோலிவுட் நட்சத்திரங்களுடன் உதய் மகேஷும் நடித்துள்ளார்.

சீரிஸில் தோன்றிய ‘செல்லம் சார்’ கதாபாத்திரம் தற்போது இணையத்தின் புது ட்ரெண்டிங் மெட்டீரியல். அதற்கு உயிர் கொடுத்தவர் உதய் மகேஷ். ஒட்டுமொத்த சீரிஸில் நமது வீட்டுத் திரையில் குறைவான நேரமே வந்து போனாலும் பார்வையாளர்கள் மனதில் சிம்மாசனமிட்டுவிட்டார் இந்த ‘Chellam Sir’. ‘என்னடா இவரு எல்லாத்தையும் புட்டு புட்டு வெக்கறாரு’ என்று இவரைப் பார்த்தவர்கள் வாயைப் பிளக்கின்றனர்.

“நாங்க சும்மா இருப்போமா!” என்று களமிறங்கிய நெட்டிசன்களும், மீம் க்ரீயேட்டர்களும் மீம்ஸ் மாலையால் செல்லம் சாரை கொண்டாடி வருகின்றனர். சற்றும் எதிர்பார்க்காத இந்த அமோக ரெஸ்பான்ஸால் செல்லம் சார் செம ஹேப்பி!

அதகளப்படுத்திய ஜாலி கேலி* மீம்ஸ்களின் தொகுப்பு இங்கே:

அடுத்த கட்டுரைக்கு