Published:Updated:

Ms. Marvel வெப் சீரிஸில் ஃபர்ஹான் அக்தர்; அமெரிக்க இஸ்லாமிய பெண், சூப்பர் ஹீரோவாக மாறும் கதை!

Ms. Marvel வெப் சீரிஸில் ஃபர்ஹான் அக்தர்

'மிஸ். மார்வெல்' மினி வெப் சீரிஸில் பாலிவுட் நட்சத்திரமான ஃபர்ஹான் அக்தர் இணைந்திருக்கிறார்.

Ms. Marvel வெப் சீரிஸில் ஃபர்ஹான் அக்தர்; அமெரிக்க இஸ்லாமிய பெண், சூப்பர் ஹீரோவாக மாறும் கதை!

'மிஸ். மார்வெல்' மினி வெப் சீரிஸில் பாலிவுட் நட்சத்திரமான ஃபர்ஹான் அக்தர் இணைந்திருக்கிறார்.

Published:Updated:
Ms. Marvel வெப் சீரிஸில் ஃபர்ஹான் அக்தர்

'மிஸ்.மார்வெல்' மினி வெப் சீரிஸ் - மார்வெல்லின் ஒரு புதிய சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யவிருக்கிறது. அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தானைச் சேர்ந்த பதின்வயது சிறுமியான கமலா கான், 'கேப்டன் மார்வெல்' போன்ற சூப்பர் ஹீரோக்களின் ஃபேன். பள்ளியிலும் வீட்டிலும் அவள் செட் ஆகாமல் இருக்கும் போது அவளுக்கு சூப்பர் பவர் கிடைக்கிறது. அதன் பிறகு என்னவெல்லாம் நடக்கிறது என்பதை அட்வெஞ்சர் நிறைந்த கதையாக இயக்கியிருப்பது பிஷா கே.அலி (Bisha K.Ali).

ஃபர்ஹான் அக்தர்
ஃபர்ஹான் அக்தர்

இந்தத் தொடரில் தற்போது பாலிவுட் நட்சத்திரமான ஃபர்ஹான் அக்தர் இணைந்திருக்கிறார். இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், கதாசிரியர், நடிகர் எனப் பல முகங்கள் கொண்டவர் ஃபர்ஹான். இவரது நடிப்பில் 2021ல் 'Toofaan' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மார்வெல்லின் இந்தத் தொடரில் இணைந்திருப்பது குறித்து ட்வீட் ஒன்றை பகிர்ந்திருக்கிறார் ஃபர்ஹான். அதில், "வளர்வதற்கும் கற்றுக் கொள்வதற்கும் இது போன்ற வாய்ப்புகளை வழங்கும் இந்தப் பிரபஞ்சத்துக்கு நன்றிகள். இந்த ரோல் செய்யும்போது ஏராளமான மகிழ்ச்சிகரமான விஷயங்கள் நடந்தன" எனப் பதிவிட்டுள்ளார். இதில் பிரபல பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கானும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Ms. Marvel
Ms. Marvel

கமலா கான் கதாபாத்திரத்தில் இமான் வெல்லனி (Iman Vellani) என்கிற பெண் நடித்துள்ளார். இந்தத் தொடரின் முதல் எபிசோட் ஜூன் 8 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டிருக்கிறது. அட்வெஞ்சர் கதையில் புது முயற்சியான இந்த சீரிஸுக்கு மார்வெல் ரசிகர்கள் வெயிட்டிங்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism