Published:Updated:

"Marvel-ன் உணர்வுபூர்வமான ஈடுபாட்டில் நானும் ஓர் அங்கமாக இருப்பது..."- ஃபர்ஹான் அக்தர் உருக்கம்!

Ms. Marvel | ஃபர்ஹான் அக்தர்

"துணைக்கண்டத்தின் மில்லியன் கணக்கான இளம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சந்தோஷத்தையும் பெருமையையும் இந்த சீரிஸ் தரும்" - ஃபர்ஹான் அக்தர்

"Marvel-ன் உணர்வுபூர்வமான ஈடுபாட்டில் நானும் ஓர் அங்கமாக இருப்பது..."- ஃபர்ஹான் அக்தர் உருக்கம்!

"துணைக்கண்டத்தின் மில்லியன் கணக்கான இளம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சந்தோஷத்தையும் பெருமையையும் இந்த சீரிஸ் தரும்" - ஃபர்ஹான் அக்தர்

Published:Updated:
Ms. Marvel | ஃபர்ஹான் அக்தர்

ஃபர்ஹான் அக்தருக்கு பாலிவுட் திரையுலகில் இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், கதாசிரியர், நடிகர் என பல முகங்கள் உண்டு. இப்போது ஹாலிவுட்டிலும் தடம் பதித்திருக்கிறார். மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்ஸின் ஓர் அங்கமாகத் தயாராகியுள்ள 'Ms. Marvel' வெப் சீரிஸில் இணைந்திருக்கும் ஃபர்ஹான், படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துப் பதிவிட்டுள்ளார்.

"Ms.Marvel-ஐ உருவாக்கப் பங்காற்றிய படைப்பாளிகள், இயக்குநர்கள், கேமராவுக்கு முன்பும் பின்பும் பணிபுரிந்தவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். இந்தத் தொடரின் படப்பிடிப்பில் எனக்கு உதவிய ஷர்மீன் ஒபைட்-சினோய் அவர்களின் வழிகாட்டுதலுக்கும் இந்தப் பாராட்டுக்கு உரியது."

ஷர்மீன் ஒபைட்-சினோய், பாகிஸ்தானை பூர்விகமாக கொண்டவர். கனடாவின் சிட்டிசன். பட இயக்குநரான இவர், இந்த வெப் சீரிஸின் இரண்டு எபிசோடுகளை இயக்கியுள்ளார்.

மேலும், "Marvel-க்கு பாராட்டுகள். அவர்களின் உணர்வுபூர்வமான ஈடுபாட்டில் நானும் ஓர் அங்கமாக இருப்பது பெருமைக்குரியது. பன்மைத்துவத்தைக் கொண்டாடும் சீரிஸ் இது. துணைக்கண்டத்தின் மில்லியன் கணக்கான இளம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சந்தோஷத்தையும் பெருமையையும் இந்த சீரிஸ் தரும். Ms.Marvel ஆக நடித்திருக்கும் திறமை வாய்ந்த இமான் வெல்லனிக்கு பாராட்டுகள். முழுமையாகப் பார்வையிட்டு மகிழவும் Ms. Marvel கதாபாத்திரத்தால் வசீகரிக்கப்படவும் தயாராக இருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இமான் வெல்லனி
இமான் வெல்லனி

'மிஸ்.மார்வெல்' மினி வெப் சீரிஸ் - மார்வெல்லின் ஒரு புதிய சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யவிருக்கிறது. அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தானைச் சேர்ந்த பதின்வயது சிறுமியான கமலா கான், 'கேப்டன் மார்வெல்' போன்ற சூப்பர் ஹீரோக்களின் ஃபேன். பள்ளியிலும் வீட்டிலும் அவள் செட் ஆகாமல் இருக்கும் போது அவளுக்கு சூப்பர் பவர் கிடைக்கிறது. அதன் பிறகு என்னவெல்லாம் நடக்கிறது என்பதை அட்வெஞ்சர் நிறைந்த கதையாக சொல்கிறது மிஸ்.மார்வெல். இந்த வெப் சீரிஸ் இன்று (ஜூன் 8) டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism